அண்ணாத்துரைக்கு எதிராக தேவர் காஞ்சிபுரத்தில் பேசியது.
"ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா?.
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது?. அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.
டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை?. வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?.
ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது. ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.
அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம். வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்?.
பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.
‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள்
துவா தமிழ் நாகரீகம்? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். - #பசும்பொன்_தேவர்.
மதுரை தமிழ்ச் சங்கப் பொன்விழா 1956ல் ஆடி வீதியில் நடைபெற்றது
#திராவிடியார்_PTராஜன் தனக்கு பதிலாக #Cண் அண்ணாதுரை பேசவிட, அவை நாகரீகம் இல்லாமல் கீழ்த்டரமாக அருவருக்கத் தக்க வகையில் #அண்ணாதுரை பேசியதில் வருத்தமான தமிழர் தேவர் பெருமகனிடம் கூற சிங்கம் என அடுத்த நாள் நுழைந்து #பசும்பொன்முத்துராமலிஙத்_தேவர் தமிழ் பெயரால் பண்பாடின்றி இந்த அவையில் கீழ்த்தரமாக பேசியது தவறு, மன்னிப்பு கேட்கவும், நாளை முதல் இங்கே நடத்தக் கூடாது என்பதை ஏற்று தமுக்கம் மைதானம் சென்றதை இந்து பத்திரிக்கையும் உறுதி செய்கிறது
https://www.facebook.com/veera.thirunavukkarasu.5/posts/pfbid02HNuyX1YvB7hZrsduSHiEURNRYESshkKHwxoc4Cg8zzhCXXCHiTs1A1xPxhrgifMJl?__cft__[0]=AZXDtuoR0B2AdwXec2d-X-fsFR7VgooiJ89qG54FSFU_AOrQlYsK7iGU9Kj_AhxHGRxlytlZMoiI3TUyKWR_GA3OYrbD5YTD_wqnwq40ro7bJJJvlvzEc96RKs1V0LWHcMlCfAtfKdukFUsAOu0qznYC1oz5epHpWWrI-bp4O13m_6iV92-Vl5xhNavThq-Hd6dyKrRw59vm7d2-wroVMC28&__tn__=%2CO%2CP-y-R
No comments:
Post a Comment