2007இல் அவர் மகன் உன்னுடைய கம்பெனி ஸ்நோ ஹவுசிங் என்ற கம்பெனி அதாவது அதன் உரிமையாளர்கள் உதயநிதி ஸ்டாலின் & துர்கா ஸ்டாலின்.
2006 தேர்தலின்போது ஸ்டாலின் பிரமாணப் பத்திரம் படி அவருக்கும் அவர் மனைவிக்கும் சேர்ந்து மொத்தமாக சொத்து 1.4 கோடி மட்டுமே அவர் மகன் உதயநிதி அன்றைக்கு பெரியார் எதையும் சம்பாதிக்கவில்லை சினிமா கம்பெனி எதுவுமில்லை ஆனால் அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து உதவி முதல்வர் ஆனவர் இந்த தேனாம்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள இந்த வீட்டை 16 கோடிக்கு வாங்கி உள்ளார்கள் அந்த வீட்டை அந்த ஸ்லோகம் கம்பெனியில் வாங்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் 10.5 கோடி கடன் கொடுத்தாராம் அப்பா அம்மாவிடம் இல்லாத பணம் இவருக்கு எப்படி வந்தது இன்று வரை அந்தப் படம் திரும்பிவரவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் 2021 தேர்தல் பிரமாணம் கூறுகிறது


மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினும் நல்ல பேச்சாளரோ திறமை உள்ளவர்களோ இல்லை. மேடையில் அருவருப்பாக கீழ்த்தரமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கட்சி ஒரு சர்ச் போல பரம்பரை கட்சி ஆகிவிட்டது. இவர்கள் தங்கியுள்ள வீட்டின் கணக்கில் கூட இவர்கள் ஒழுங்காக கொடுக்கவில்லை.
இந்த வீட்டை இவர்கள் முதலில் வாடகைக்கு இருந்து பின் பின்னர் அந்த உரிமையாளரை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கி உள்ளனர். ஆட்சியின் உச்ச பதவியில் இருக்கையில் வீட்டு உரிமையாளர் வழக்கு தொடுக்காமல் மு 2011ம் ஆண்டு ஆட்சி மாறிய பின்பாக வழக்குப் போட்டார். அந்த உரிமையாளரருக்கு மேலும் இரண்டு கோடிக்கும் கொடுத்து சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் பிரமாணம் கொடுத்து வழக்கை முடித்தனர்.
ஸ்டாலின் மற்றும் உதயநிதி
முழுமையாக இந்த வீட்டுக்கு அந்த 10.5 கோடி வந்தது என்று மக்களுக்கு விளக்க வேண்டும்
ஸ்டாலின், உதயநிதி வசிக்கும் தேனாம்பேட்டை வீடு குறித்து எழும் சர்ச்சைக்குரிய கேள்விகள்! யாருடைய பணம்? - புரியாத புதிர்!
By : Kathir Webdesk | 19 March 2021 4:29 PM 11
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் குடும்பம் வசித்து வரும் பெரிய பங்களா யாருக்கு சொந்தமானது என்பது குறித்து 2016 முதலே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
2016-ல் ஸ்டாலின் தன்னுடைய சொத்து மதிப்பு ₹5.8 கோடி என வேட்பு மனு தேர்தல் பத்திரத்தில் (affidavit) குறிப்பிட்டிருந்தார். இது எப்படி சாத்தியம் என பொது மக்கள் பலரும் 'அறப்போர் இயக்கம்' என்ற அமைப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். ஏனெனில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள பங்களாவின் தற்போதைய மதிப்பு மட்டுமே ₹20 கோடியை தாண்டும்.
இந்த சொத்து யாருடையது என அறிய அறப்போர் இயக்கம் முடிவு செய்தது. அந்த தேடலில் அந்த வீடு 'ஸ்னோ ஹௌசிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தால் 2007-ல் ₹11.62 கோடிக்கு வாங்கப்பட்டதாகத் தெரிய வந்தது. இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குனர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆவர்.
இந்த நிறுவனத்திற்கு இந்த பங்களாவை வாங்க எங்கிருந்து பணம் வந்தது? அங்கு தான் திருப்பம். உதயநிதி ஸ்டாலின் தான் இந்த கம்பெனிக்கு ₹10.34 கோடியை தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கி இருக்கிறார். இப்பொழுது இந்த ஸ்னோ ஹௌசிங் நிறுவனம் துர்கா ஸ்டாலினுக்கு இந்த வீட்டை வாடகை இல்லாமல் வசிக்கக் கொடுத்திருக்கிறது. இதில் சுவாரசியமான விஷயமாக, இந்த நிறுவனம் இந்த வீடு வாங்கும் பணப்பரிமாற்றத்தை செய்ததை தவிர வேறு எதையும் செய்ததாக தெரியவில்லை. 2007-இல் இந்த பணப் பரிமாற்றம் நிகழ்ந்த பொழுது, உதயநிதி ஸ்டாலின் எந்த படத்திலும் நடிக்கவில்லை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனமும் அப்பொழுது ஆரம்பிக்கப்படவில்லை.
2006-இல் அவரது தந்தை ஸ்டாலினின் சொத்து மதிப்பு ₹1.4 கோடி மட்டுமே, எனவே உதயநிதி ஸ்டாலின் எப்படி 2007-இல் ₹10.3 கோடியை கடன் அளித்தார்? அது சரியான முறையில் வந்த வருமானமாக இருந்தாலும், இவ்வளவு சுற்றி வளைத்து தன்னுடைய பெற்றோர்களுக்காக தான் வைத்திருக்கும் நிறுவனத்திற்கே கடன் கொடுத்து வீடு வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் அறப்போர் இயக்கம் 2016-லேயே கேள்வி எழுப்பி இருந்தது.
தற்பொழுது தி.மு.க சட்டமன்ற வேட்பாளராக சேப்பாக்கத்தில் களம் இறங்கி இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தனது வேட்பு மனுவில் சித்தரஞ்சன் சாலை பங்களாவை தன்னுடைய முகவரியாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தான் இயக்குனராக இருக்கும் ஸ்னோ ஹௌசிங் நிறுவனத்திற்கு கடன் கொடுத்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படி என்றால் இந்த பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை அவர் கூற வேண்டும் என்று மறுபடியும் அறப்போர் இயக்கம் நேற்று கேள்வி எழுப்பியிருக்கிறது. ஐந்து வருடங்களாக இந்த கேள்வியை எழுப்பியும் தி.மு.க தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.
இது குறித்து தினமலர் பத்திரிகையிடம் பேசிய அந்த அமைப்பின் ஜெயராமன் வெங்கடேசன், "வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை; என் பெயரில் அந்த வீடு இல்லை" என சொல்லி, ஸ்டாலின் எளிதாக கடந்து போய்விடலாம். ஆனால், உதயநிதி அப்படி செய்ய முடியாது. வேட்பு மனுவிலேயே, சித்தரஞ்சன் சாலை பங்களா குறித்த விபரங்களை, அவர் சொல்லி இருக்கிறார். ஆகவே, அந்த, ₹10.30 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதை வெளிப்படையாக சொல்வதில் என்ன சிக்கல்?
நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தில் இருந்து தான், அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்து, அதன் மூலம் வீடு வாங்கப்பட்டது என்றால், அதை வெளிப்படையாக சொல்வதில், உதயநிதிக்கு என்ன தயக்கம்? பொது வாழ்க்கைக்கு வந்து, தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்த பின்னும், உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதில் என்ன பிரச்னை? தகவல்களை மறைக்க மறைக்க, மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும். சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி மக்களுக்கு மட்டுமாவது, உதயநிதி உண்மையை சொல்வாரா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியுள்ளார். தி.மு.க தரப்பில் இருந்து பதில் வருமா?
https://kathir.news/special-articles/controversial-questions-about-stalins-residence-886405
https://kathir.news/special-articles/controversial-questions-about-stalins-residence-886405
No comments:
Post a Comment