Sunday, April 11, 2021

கிறிஸ்தவ மதமாற்ற ஊழியரும் தமிழரும்- விவாதம்

நேற்று என்னிடமே பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது..

மேலே படிங்க நண்பர்களே....

நான்: என்னங்க இது?

கிறிஸ்தவ ஊழிய கூலிப்பெண்: மோட்சம் போக வழி

நான்: என்னை சாக சொல்றீங்களா?

கிறிஸ்தவ ஊழிய கூலிப்பெண்: அதை படிங்க புரியும்

நான்: நீங்க படிச்சுட்டீங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சதாலதான் குடுக்கறேன் ஸார்..

நான்: அப்ப.. நீங்க மோட்சத்தை பாத்துட்டீங்க..

கிறிஸ்தவ கூலிப்பெண்: மரித்தபிறகு பாப்பேன்..

https://m.youtube.com/watch?v=_eCaUpBm0wk

நான்: நீங்களே இன்னும் பாக்காம என்ன மோட்சத்துக்கு ஏன் அநுப்ப பாக்குறீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: தேவனாகிய யேஸ்ஸு மரித்து எழுந்து...

நான்: மோட்சத்துக்கு போனாருங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்

நான்: திரும்ப வருவாருன்னும் சொல்றீங்களே..

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மள ரட்சிக்க வருவார்

நான்: சரி.. அவரு ஏன் மரிச்சாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மளை ரட்சிக்க.. நம் பாவத்தை களுவ ஸார்..

நான்: அவுரு திரும்ப வந்தும் நமக்காக மரிப்பாருன்றீங்களா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: இல்ல...ரட்சிப்பாரு

நான்: அப்பவே அவுரு ரட்சிச்சிருக்கலாமே.... ஏன் மரிச்சாரு??

கிறிஸ்தவ கூலிப்பெண்: அது.. வந்து.. அவரை சிலுவைல அறைஞ்சாங்க ..

நான்: அதனால ரட்சிக்க மறந்துட்டாரா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்..இல்லை.. அப்ப மரிக்கனும்னு பரமபிதா உத்தரவு..

நான்: யாரு பரம பிதா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: யேசுதான்.. வேற யாரு??

நான்: மரிச்சது யாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதும் அவருதான்..

நான்: இப்ப வந்து நம்மள ரட்சிக்கப் போறது யாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதும் யேஸுதான்..

நான்: புரியல.. அவரை மரிக்க சொல்லி மரித்து இப்ப வரப்போறது மூனுமே யேஸுவா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதுதான் வேதம் சொல்லுது

நான்: எந்த வேதம்?

கிறிஸ்தவ கூலிப்பெண்: பைபிள்

நான்: வேதங்களை ஆங்கிலம் Vedas னு தானே சொல்லுது... பைபிள்னு சொல்லலீயே..

கிறிஸ்தவ கூலிப்பெண்: சரி..பைபிள் சொல்லுது

நான்: ஓகே.. யேஸு மரிச்சது யாருக்காக?

கிறிஸ்தவ கூலிப்பெண்: நமக்காக

நான்: நமக்காகன்னா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: பாவிகளுக்காக

நான்: அப்ப நான் பாவியா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: எல்லாருமே பாவிங்கதான் ஸார்..

நான்: அப்ப நீங்களும் பாவிதான்.. சரியா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்..உண்மைதான்

நான்: பாவிங்க மோட்சம் போக முடியாது.. அதனால இதை படிச்சும் நீங்க மோட்சம் போகப் போறதில்ல.. சரியா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சா மோட்சம் போகலாம்

நான்: அப்ப இன்னும் நீங்களே இதை படிக்கல... கரெக்டா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சேன் ஸார்..

நான்: பின்ன..நீங்க எப்படி பாவி ஆனீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஸார் இஸ்டம் இருந்தா படிங்க.. இல்லேன்னா விடுங்க

நான்: இதைத்தான் நானும் சொல்றேன்.. இதை திணிக்கும் முன்னாடி அதை வாங்க அவங்களுக்கு இஷ்டம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு திணிங்க சரியா?? இந்த கப்ஸாவெல்லாம் உங்களமாதிரி ஆளுங்ககிட்ட மட்டும் வச்சுக்கங்க.. #ஹிந்துமதம் மாபெரும் ஸமுத்திரம்.. எல்லா இடமும் ஆழம் இருக்காதுன்னு காலை விட்டுடாதீங்க.. போய்ட்டு வாங்க.. நன்றி.

 இந்துக்கள் ஓங்க வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லீமும்...!!!
எந்த வயதிலும் தினமும் தொழுகை மேற்கொள்கின்றனர்
ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஞாயிறு சர்ச் செல்கின்றனர்
பெளத்தர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும்
புத்தரை பிரிந்து இருப்பதில்லை...
இவர்கள் தமது குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே
தத்தமது மத கோட்பாடுகளை கூறி
தம் மதத்தின் பாதுகாவலராக வளர்க்கின்றனர்.
ஒவ்வொருவரும் அவரது பெற்றோர்களால் சிறுவயதில் இருந்தே
அவர்கள் மதத்துடன் நெருக்கமாக இணைக்கப்படுகின்றனர்...
ஆனால்... இந்துக்களோ!
உங்களுக்கு ஏன் இந்த “ஏனோதானோ” மனநிலை?
உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பிழைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நீங்கள்
அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதில்லை.
தேவாரம் பாட வெட்கம்.
சமய சின்னங்கள் அணிய வெட்கமா உங்களுக்கு?
உங்களை நினைத்து நாம்தான் வெட்கி தலைகுனிய வேண்டும்.
மேலைநாட்டு மோகத்தில் நீங்களும் உங்கள் சந்ததிகளையும் நீங்களே அழித்துக்கொண்டுள்ளீர்கள்.
அழகிய தமிழ் பெயர் வையுங்கள்.
தமிழ் பெயர் என்பதே இந்துப் பெயர்தான்.
அதில் சந்தேகம் வேண்டாம்!
எமது மேலான இந்த சமயத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுகொடுங்கள்.
இதிகாசங்களையும் புராணங்களையும் வெறும் கதைகளாக கூறாதீர்கள்.
அவற்றில் உள்ள மேலான நற்கருத்துக்களை
பக்தியுடன் சேர்த்து ஊட்டுங்கள்.
தினமும் சூரிய வழிபாடு செய்யுங்கள்.
6 மாதத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தார் அனைவருடனும்
குலதெய்வ கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள்.
எமது மேலான சமயத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள்தான்
பணத்திற்காகவும்...
தமது சுயலாபத்திற்காகவும் மதம் மாறுகின்றனர்.
உங்களை தந்த இந்த தொன்மையான இந்து கலாச்சாரத்தை
பேணி காப்பது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கடவுளை நம்புங்கள்..!!!
அவரை மனதாரவும் உடல் அளவிலும் வழிபடுங்கள்,
அவர் புகழ் பாடுங்கள், இறை சேவை செய்யுங்கள்.
வியாபார நோக்கமாக மாறிவரும் சில ஸ்தாபனங்களையும்,
சில கோவில்களையும் நினைத்து வருந்தாதீர்கள்.
அங்குள்ள இறைவனை மட்டும் நினையுங்கள்.
நாம் அனைவரும் ஈற்றில் இணைய விரும்புவது இறைவனுடனே தவிர பிறருடன் அல்ல.
பக்தி மட்டுமே உண்மை.
பசு பாசத்தால் கட்டப்படுகிறது.
அந்தவகையில் என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும்
எமது சிந்தனை இறைவனை நோக்கியே இருக்க வேண்டுமே தவிர
சில குறைகளை நோக்கி இருத்தலாகாது.
நீங்கள் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்
இறைவன் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார்.
உங்கள் இஷ்ட தெய்வத்தை உளமார உணருங்கள்;
பேசுங்கள், நன்றாக வழிபடுங்கள்...
இந்து சமயம் வாழ வேண்டும்.
இந்துக்கள் ஓங்க வேண்டும்.
அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்து சமயத்தை அதே புனிதத்தன்மையுடன் கொண்டு சேர்க்க வேண்டும்...
அதற்காக இறைவன் மீது உறுதி எடுப்போமாக...
ஓம் நமச்சிவாய......

அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்
*வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?*
*1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.*
*சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது, வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.*
*அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,*
*கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.*
*அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.*
*சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.*
*சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.*
*சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.*
*1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.*
*2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.*
*அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.*
*அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;*
*ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்;*
*19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.*
*6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.*
*இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.*
*அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,*
*இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.*
*67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,*
*74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.*
*வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.*
*சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்,*
*திருமணம் நிலை குலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்.*
*அங்கு போல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்.*
*குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.*
*வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது.*
*ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன.*
*சேமிப்பும் குறைகிறது.*
*எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல.*
*உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம்.*
*ஆதலால் தான் நம் வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்,*
*(கிளப்பு கடைகளில்) சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்.*
*ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...",*
*Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,*
*மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,*
*இது ஒரு பேராபத்து...*
*நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்...*
*முன்பெல்லாம் நம் முன்னோர்கள்,*
*யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள், ஆகையால் வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.*
*அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்.*
*காலையில் எறும்புக்கும்,*
*பகலில் காக்கைக்கும்,*
*இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்.*
*குடும்பமாய் இருங்கள்.*
*ஒற்றுமையாய் வாழுங்கள்...*

இந்துக்களும் தமிழர்களும் வேறு வேறு .!தமிழர்கள் சைவர்கள்... இந்துக்கள் சங்கிகள்...
எங்க.? இப்ப சொல்லு....
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்..
2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்...
4. வைணவம் வளர்த்த
12 ஆழ்வார்களும்
பிறந்தது தமிழ்நாட்டில்..
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும்
சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்...
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான
திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்..
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
குறிஞ்சி➡முருகன்
முல்லை👉🏻 திருமால்
மருதம் ➡ இந்திரன்
நெய்தல் 👉🏻வருண்ன்
பாலை➡கொற்றவை
தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி
தமிழகம் இந்துக்களின் பூமி,நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம்மாறிய குற்றவுனர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான். பழந்தமிழர் கலாச்சாரத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் தாய் மதம் மீன்டு தமிழராய் பெருமையாய் வாழட்டும் அதைவிட்டுவிட்டு இந்துக்களிடம் கலகம் தூண்டுவது ஈனசெயல்...கட்டுமரம், தத்தி ,உதயநிதி,ஓசிசோறு
,,சீமான், சுப. உதயகுமார், சுபவீ,,திருமுருகன் காந்தி, பிரசன்னா ,போன்றவர்கள்
இந்துக்கள் மத்தியில் நாங்கள் தமிழர்கள் மட்டும் தான் என்று
பிரிவினை பிரச்சாரம் செய்வது
போலித்தனம்..
தமிழையும்,தமிழ் மண்ணையும், சுவாசமாய் நேசிப்பவர்களே இந்துக்கள்

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...