Monday, April 5, 2021

திருக்குறள் சனாதனி தான். திருவள்ளுவர் பூனூல் அணியும் உருவ படமே சரி-கருணாநிதி

 திருவள்ளுவர் மயிலாப்பூர் கோவில் அகழ்வில்    டுக்கப்பட்ட 14ம் நூற்றாண்டு சிலை 

மதுரை திருப்பரங்குன்றம் அருகே18ம் நூற்றாண்டு திருவள்ளுவர், நந்தனார் சிற்பங்கள் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு  
 
திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி அறநூல் .  திருக்குறள் வெண்பா இலக்கணத்தில் அமைந்துள்ளது. 
திருக்குறளில் பயன்படுத்திய  தமிழ் சொற்கள், இலக்கணம் , மொழிநடை நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது.
 திருக்குறள் இடைக்காலத்தில் எழுந்தது என்பது மொழியியல் பல்கலைக் கழக தமிழ் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர்கள் ஏற்கும் காலம்.
2011ல் ருணாநிதி, தமிழக  முதல்வராய் கடைசி திருவள்ளுவர் தினப் பேச்சில் -அறிஞர் வள்ளுவர் அந்தணராக பூனூல் அணிந்திருக்க வேணுமே என்றிட அதனால் ஓவியர் மேல்துண்டினால் அந்த உண்மை எழும்பாமல் தடுத்தார் என்றார்.  
திருவள்ளுவர் படம் உருவானது பற்றிய நூல்
 
ஓவியர் தமிழர் மரபில் பூனூல் (இரட்டைப் பூனூலாக  யோகப் பட்டை) அணிந்த முறையில் வரைந்த படத்தில் மாற்றம் கோரியது பாரதி தாசன்,  திராவிஷ மரபின் நச்சில் வீழ்ந்தவர்
  
மணக்குடவர் உரை வள்ளுவத்தை வைதீக,   சனாதன நூலாகத் தான் பார்க்கிறது .
திருக்குறள் இயற்றப்பட்ட ஒரு நூற்றாண்டுக்குள் எழுந்ததுதான் தமிழ் சமணர் மணக்குடவர் உரை  நம்மிடம் உள்ள மிகவும் பழமையான உரை. 
ஔவையார் நல்வழி நூல் கடைசிப் பாடலாக
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்று உணர்" என்கிறார்.


 
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஏப்ரல்2020 முனைவர் (P.Hd)  கையேடு, மிகத் தெளிவாக வள்ளுவம் சமணம் இல்லை,  வள்ளுவம் கிறிஸ்துவம் என மதவெறி மோசடி கும்பல் தேவநேயப் பாவாணர், பேராயர் அருளப்பா, மு.தெய்வநாயகம் கும்பலின் அருவருப்பான அராஜக ஆய்வையும் நிராகரிக்கிறது. திருவள்ளுவர் சம்ஸ்கிருத நூல்களில் இருந்து பெரிதும் பயன்படுத்தியும் உள்ளார் என ஏற்கிறர்.
இதே கருத்தை முன்பு லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் ஸ்டுவர்ட் ப்ளாக்பர்ன் அவர்காளும் உறுதி செய்திருந்தார்
   

திருவள்ளுவர் பற்றி திருமா சர்ச்சை பேச்சு: நிஜம் என்ன?
மாற்றம் செய்த நாள்: மார் 26,2021 06:12
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மீண்டும், திருவள்ளுவர் குறித்து சர்ச்சை கிளப்பி உள்ளார்.
திருவள்ளுவரின் உருவத்தை முதலில் வரைந்த வேணுகோபால் சர்மா, ஒரு அந்தணர். அவர் தனது ஜாதிய அடையாளமாக வள்ளுவருக்கு பூணுால் அணிவித்தார். அதை பார்த்த கருணாநிதி, 'திருவள்ளுவரை, ஒரு ஜாதிக்குள் அடைக்கக் கூடாது; அவர் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் உடலில் உள்ள பூணுாலை கழற்றி எறியுங்கள் என சொல்லி, பூணுாலை அறுத்து எரிந்தார்' என்று பேசியுள்ளார்.
வேணுகோபால் சர்மாவின் மகன் விநாயக் வே ஸ்ரீராமிடம் கேட்டோம்.'அப்பா, ஒரே நாளில் வள்ளுவர் படத்தை வரைந்து விடவில்லை. 12 ஆண்டுகள் தீவிர முயற்சி எடுத்து, வரைந்து வரைந்து மேம்படுத்திதான், தற்போது நாமெல்லாம் பார்த்து போற்றும் வள்ளுவர் உருவத்தைக் கொண்டு வந்தார். 2,000 ஆண்டுகளாக வள்ளுவருக்கு இல்லாதிருந்த உருவம் கிடைத்ததும், முதல் ஆளாக அதை பார்த்து, வியந்து அப்பாவை பாராட்டினார் பாரதிதாசன்.
வள்ளுவர் கழுத்தில் கிடந்த பருத்தி நுாலால் வேயப்பட்ட சரடைப் பார்த்தார். 'வள்ளுவனே ஒரு இலக்கணம்; அவனுக்கு எதுக்கு புது இலக்கணம். அந்த நுால் சரடை அகற்றி விடுங்கள்' என, அப்பாவிடம் சொன்னார்.கூடவே, பிற்காலத்தில் வள்ளுவனை, ஒரு ஜாதிய அடையாளத்துக்குள் அடைத்து விமர்சிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கையாக சொன்னார்.
என்ன ஒரு தீர்க்கதரிசி பாருங்கள்.ஆனால், பாரதிதாசன் சொன்னதை அப்பா ஏற்கவில்லை. சரியென, பாரதிதாசன் சென்று விட்டார். பின்னர் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஓவியரான உங்களுக்கு ஓவியம் தான் தெரியும்; சமூகம் தெரியாது. அதனால், என் வேண்டுகோளாக ஏற்று, திருவள்ளுவர் கழுத்தில் இருக்கும் பருத்தி நுால் சரடை மட்டும் நீக்கி விடவும்' என, அதில் எழுதி இருந்தார்.
ஒரு மாபெரும் கவிஞன், உணர்ந்து சொல்லும் விஷயத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காகவே திருவள்ளுவர் கழுத்தில் இருந்த பருத்தி நுால் சரடை, அப்பா நீக்கினார். இது நடந்தது, 1959ல்.பிறகு தான், அண்ணாதுரை, காமராஜர், கக்கன், ஜீவா, கண்ணதாசன் ஆகியோர் திருவள்ளுவர் படத்தை பார்த்து, அப்பாவை பாராட்டினர். அதற்கான ஒலி நாடா எல்லாம் என்னிடம் இருக்கிறது.
பின், 1964ல் முதல்வராக இருந்த பக்தவத்சலம், அப்பா வரைந்த வள்ளுவர் ஓவியத்தை சட்டசபையில் திறந்து வைத்தார். அதன்பின், 1967ல், முதல்வரான அண்ணாதுரை, அரசு அலுவலகங்களில் அப்பா வரைந்த வள்ளுவர் ஓவியத்தை வைக்க அரசாணை வெளியிட்டார்.
வள்ளுவர், 1,330 குறள்களில் உலகையும், மனிதர்களையும் குறித்து சொன்ன விஷயங்களில் இருந்து தான், வள்ளுவர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற வடிவமே அப்பாவுக்கு உருவானது. அதன்படி தான் ஜடாமுடி, தாடி, நீள நெற்றி, அமர்ந்திருக்கும் நிலை என்பதையெல்லாம் ஓவியத்தில் கொண்டு வந்தார் அப்பா.பூணுால் என்பது கழுத்தில் அணிவது அல்ல. உடலின் குறுக்கே அணிவார்கள்.
உண்மை இப்படி இருக்கும் போது, சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை இந்த விஷயத்தில் இழுத்து வந்து திருமாவளவன் ஏன் பேசுகிறார் என தெரியவில்லை.இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னபோது, அவருக்கு நான் இந்த விபரத்தை சொன்னேன். அவர் உடனே புரிந்து கொண்டு, வருத்தம் தெரிவித்தார்.இப்படி சொன்னார் ஓவியர் சர்மாவின் மகன்.
வரலாற்று ஆய்வாளர், சாமி தியாகராஜன் கூறுகிறார்: பக்தவத்சலம் காலத்தில், வள்ளுவர் படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. பின், 1966ல் மயிலாப்பூர் சிவசாமி சாலையில், ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அந்த சிலை, வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த சிலையில், பூணுால் இல்லை. எனவே, வள்ளுவருக்கும், பூணுாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமாவளவன் முழுமையான வரலாறு தெரிந்து கொண்டு பேசினால் நல்லது.
இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா