Friday, April 30, 2021

திருக்குறள் சமணச் சமயம் இல்லையே

 திருவள்ளுவர் ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிடமிருந்து தொடங்கியது, இந்த உலகை இறைமை - பிரம்மம் படைத்தார் எனத் தொடங்குகிறார்.

திருவள்ளுவர் முழுமையான ஆஸ்தீகர். ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறவனால் தொடங்கப்பட்டது என்ற வள்ளுவர் அவர் கல்வி கற்றலின் பயனே(2) இறைவனின் திருவடியைப் பற்றி கொள்ளவே என்றார்.  


உலகியற்றியான், செய்யாள், தவ்வை, தேவர், புத்தேள், புத்தேள்நாடு, வானோர், அகல் விசும்புளார், அவி உணவின் ஆன்றோர், இந்திரன், சந்திரன், தாமரைக்கண்ணான், தென்புலத்தார், மாலவன் அடியளந்த செய்தி, ’திங்களைப் பாம்புகொண் டற்று' எனும் சந்திர க்ரஹணக் கதை எல்லாம் குறளில் இடம்பெறும் வைதிக சமயக் கருத்துகள். உவமைக்காக - கருத்து வலியுறுத்தலுக்காக இவை இடம் பெறுகின்றன.

அமரர் பற்றிய செய்திகள் மஹாவீரர் காலத்திலும், பழைய சமண நூல்களிலும் இல்லை என்கிறார் ஒரு சமண அறிஞர் -

If you study Jain history, you will find that all such Bhavatipati
devas were introduced in Jainism about 200 to three hundred years after Lord Mahavir's Nirvan.

The Agam sutras and ancient literature did not mention them.
To ask help by praying or reciting Mantras to Bhavanpati devas
violates the true Jain principles.

Pravin K. Shah
Jaina Education Committee
Raleigh NC 
USA

கடவுள் வாழ்த்து பகுதியை எடுத்து விட்டால் திருக்குறள் சமணம் என்று வாதிடுவதற்கு ஒரு ஆதாரம் கூட அதில் கிடையாது ஏனென்றால் அது முழுதுமாக தன்னிலும் மாறுபட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டே வருகிறது. 
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'. என்று சொல்லும் அதே குறள் தான்

'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு' என்று பிறப்பின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறது. செய்யும் தொழிலின் மேல் பிரிவை சொல்லும் வர்ண முறைமை தான் சமணத்தில் உண்டு அது பிறப்பினால் உண்டாகும் ஏற்றத்தாழ்வை கூறுவதில்லை என்பது தான் இவர்கள் கருத்து. ஆனால் இதே குறள் அதற்கு மாறுபாடான கருத்தையும் சொல்கிறது.

முன்னதை கொண்டு தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை கொண்டு வந்ததாக 20ஆம் நூற்றாண்டு அறிஞர்களால் குற்றம் சாட்டப்படும் ஹிந்து மதத்திற்கு மாற்றான சமண மதத்தை சேர்ந்தது அல்லது religious neutral என்று திருக்குறள் புகழப்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்" என்கிற பாடலின் நேரடியான குறள் வெண்பா தான் இந்த மேற்பிறந்தாராயினும் என்கிற பாடல்.

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று' என்ற குறளை பிடித்துக்கொண்டு இது வேத வேள்விகளுக்கு எதிரானது என்று பேசுகிறார்கள் டெண்டுல்கரை விட கோலி சிறந்த மட்டையாளர் என்று சொன்னால் டெண்டுல்கருக்கு விளையாட தெரியாது என்பது அல்ல டெண்டுல்கர் மிகசிறந்த ஆட்டக்காரர் அவரை விட கோலி சிறப்பாக ஆடுவார் என்பதே பொருள் அது போலவே இருப்பதிலேயே உயர்ந்த சடங்கான வேத வேள்விகளை விட ஒரு உயிரை கொன்று தின்னாமல் இருப்பது பெரும் புண்ணியம் என்று தான் குறள் கூறுகிறது. வேத வேள்விகளையும் செய்து கொண்டு உயிரையும் கொன்று தின்னாதீர்கள் என்பதே இதன் அர்த்தம். இது நேரடியாக மன்னர்களை பார்த்து பாடுவது போல இருக்கிறது கொல்லாமை சமண கருத்தனாலும் அது திருக்குறளுக்கு ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது சமணம் போல வலியுறுத்தப்படவில்லை அவ்வளவு தான்.

பெரும்பாணாற்றுப்படையில் பாணனுக்கு தொண்டைமான் இளந்திரையன் அரண்மனைக்கு வழிசொல்லும் இடத்தில் இவர்கள் இல்லத்தில் வாளை மீன் கிடைக்கும் இன்னொருவர் இல்லத்தில் கோழி கிடைக்கும் அப்படியே சென்றால் ஒரு பார்ப்பனனின் இல்லம் வரும் அங்கு மாதுளங்காயை அறிந்து நெய்யில் வதக்கி மிளகு இட்ட சைவ கறி கிடைக்கும்,வடுமாங்காய் கிடைக்கும் என்று தான் வருகிறது ஆக சைவ உணவு பழக்கம் ஒன்றும் சமணத்தில் மட்டும் இல்லை அதை குறள் பெருமையாக சொல்லவும் இல்லை. பொதுவாக புலால் மறுப்பை சொல்கிறது அவ்வளவு தான்.

'ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்' 
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை என்று கூறுகிறது. தனக்கல்ல பசுவிற்கு நீர் என்று கேட்டாலும் கூட இரப்பதனால் அது இழிவானது என்று குறள் கூறுகிறது. இதில் பசுவிற்கு நீர் என்பது மிக உயர்ந்ததாக சொல்லப்படுகிறது குறளின் மொழி இப்படி தான் இருக்கிறது உயர்ந்த ஒன்றை சொல்லி அதனினும் உயர்ந்தது இது என்ற சொல்கிறது.
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று; என்று கழைதின் யானையர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்று உண்டு அதற்கு நிகரானது தான் இந்த குறள்வெண்பா. ஆக இந்த முறையில் பாடல்கள் பாடுவது ஒன்றும் புதிதல்ல இது சங்க பாடல்களிலேயே இருக்கிறது.

'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்' என்கிறது குறள் இதன் அர்த்தம் என்னவென்றால் உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம் என்றாகிறது. தன் மயிரை தானே பிடுங்கி முண்டனமாக இருப்பது சமண முனிவர்களின் நெறி, நீ யோக்கியமா இரு போதும் ஒரு மயிரையும் புடுங்க வேண்டாம் என்று நேரடியாகவே இந்த குறள் சொல்கிறது அப்படியானால் அது சமணத்திற்கு மாறானது சடை முடியும் வேண்டாம் அதனால் அது சைவத்திற்கு மாற்று ஆகவே குறள் வைணவம் என்றும் பேச முடியும்.

சங்க பாடல்கள், நீதி நூல்கள், தர்ம சாஸ்திரங்கள் ஆகியவற்றின் செய்திகளை சுருக்கி குறள் வெண்பாவாக எழுதப்பட்டது தான் இந்த நூல் இதை ஒருவருக்கு மேற்பட்டவர்கள் செய்திருக்கலாம் களப்பரர் காலத்தில் உருவான நூல் இது என்று கருதுகிறேன், பின்னாளில் இது தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். 'ஊழில் பெருவலி யாவுள' என்கிற ஆசீவக கருத்து அதில் உள்ளது ஆனால் அதை மறுக்கும் 'முயற்சிதான் மெய்வருத்த கூலி தரும்' என்கிற கருத்தும் அதே குறளில் இருக்கிறது. மறுபிறப்பு கொள்கை சமணம், பவுத்தம், ஆசீவகம், வைதீகம் அனைத்திற்கும் பொது ஆனால் ஏழு பிறவிகள் என்பது நேரடியான வைதீக கருத்து 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்று பல இடங்களில் ஏழு பிறவிகளை பற்றி குறள் கூறுகிறது இது மற்ற சமயங்களில் கிடையா. கடும் விரத முறைகளின் மூலமும், நற்செயல்கள் மூலமும் பிறப்பு இறப்பின் தளையை அறுக்கலாம் என்பது மட்டுமே அவை சொல்வது.

திருக்குறளை இன்னது இதன் சார்புடையது ஆகவே இதற்கு ஆதரவானது இதற்கு எதிரானது என்றெல்லாம் சொல்ல முடியாது அதுவு ஒரு பொது நூல் அதனில் அன்று பாரதவர்ஷத்தில் நிலவிய அனைத்து சமயம் சார்ந்த கருத்துக்களும் இருந்தன அது அன்றைய சமூக ஒற்றுமை முறையையும் மக்கள் பல சமயங்களை ஏற்றுக்கொண்டு அதோடு உறவாடிக்கொண்டு இயங்கிய முறையையும் ஒரு கண்ணாடி போல காட்டுகிறது. இன்று நாம் சொல்லும் 'எல்லாம் விதி' போன்ற வாக்கியங்கள் என்றோ ஹிந்து மதத்தில் கரைந்துவிட்ட ஆசீவகத்தின் அடிப்படை கருதுகோள் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை' - குறள் 43.

தென்புலத்தார் என்பவர் காலம்சென்ற முன்னோர்கள் என்று பொருள் படும், தெய்வம், விருந்தினர், சுற்றம், தன்னுடைய குடும்பம் இவை அனைத்தையும் புறப்பது ஒரு மனிதனின் தலையாய கடமையாகும் என்று திருக்குறள் கூறுகிறது. இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல் போன்றவற்றை வேறு எந்த மதம் சொல்கிறது என்று கூறினால் உதவியாய் இருக்கும். எந்த லட்சணத்தில் திருக்குறள் சமண நூல் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பித்ருக்கள் தென் திசையில் உறைவதாக ஐதீகம் தென்புலத்தார் என்று அதனால் தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் இதை பல சங்க பாடல்களும் சொல்கின்றன. சமணத்தில் ஏது பித்ரு தர்ப்பணம். ' அதிதி தேவோ பவ' என்கிற தைத்ரிய உபநிஷத்தில் வரும் ஸ்லோகத்தை தான் விருந்தினரை ஓம்புதல் என்கிற முதன்மையான ஐந்து செயல்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

'ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென் புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் ' -புறம் 9, பாடியவர் நெட்டிமையார், பாடப்பட்டோன் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி.

பசுக்களும், பசு அனைய பார்ப்பனர்களும் , பெண்களும், நோய்வாய்பட்டவர்களும், தென்புலம் சேர்ந்த முன்னோர்களுக்கு பித்ருக்கடன் செய்ய பிள்ளைகள் பெறாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுக நான் அம்பு செலுத்த போகிறேன் என்கிற அடிப்படையில் அமைந்த சங்க பாடல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. ஆக தென்புலத்தார் என்பவர் வைதீகத்தில் குறிப்பிடப்படும் பித்ருலோகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவு இந்த முன்னோர்களை புரக்க வேண்டிய குறிப்பு அவர்களுக்கான நீத்தார் கடன்களை செய்ய வேண்டிய கடமை ஆகியவற்றை இந்த குறள் தெளிவுபட சொல்கிறது. அதோடு தெய்வத்திற்கு செய்யவேண்டிய பூஜை புனஸ்கரங்களை தெளிவாக செய்யவேண்டும் என்றும் இந்த குறள் கூறுகிறது. இது எந்த சமண மார்க்கத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

'அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்'. - குறள் 167

மனத்தின்கண் மாசு உடையவனை விட்டு திருமகளான லட்சுமி நீங்கி விடுவாள் அவளுக்கு பதில் அவளின் தமக்கையான மூதேவி பற்றிக்கொள்ளுவாள் என்கிறது இந்த குறள். சமணத்தில் ஏது ஸ்ரீதேவி மூதேவி எல்லாம் இன்று லட்சுமி பூஜை மேற்கொள்ளும் சமண வணிகர் கூட அதை ஹிந்து மதத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் அதுவும் சமீப காலங்களில் தான். பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்கிற இந்த சுழற்சி பாரதத்தில் தோன்றிய அனைத்து சமயங்களுக்கும் பொதுவாக இருந்தாலும் செயலூக்கம், பக்தி, சேவை போன்றவற்றால் அந்த தலையை அறுக்க முடியும் என்று இந்து மதம் தான் சொல்கிறது அதை குறள் தெளிவாகவே காட்டி விடுகிறது. வேறு எதையாவது வேறு சமயத்திலிருந்து எடுத்துக்கொண்டதா என்றால் மேலோர் கீழோர் என்கிற சமூக அடிப்படையில் அமைந்த பாகுபாட்டை வேண்டுமானால் சமணத்திலிருந்து திருக்குறள் கைக்கொண்டது என்று கூறலாம்.

''மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு'' -குறள் 409.

உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் ஒருவர் கல்வி கற்காதவராக இருந்தால் அவர் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. இதை சாலமன் பாப்பையா தன் உரையில் 'படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும் அவர் கீழ்சாதியில் பிறந்த நன்றாக படித்தவர் அளவிற்கு பெருமை இல்லாதவரே' என்று பொட்டில் அடித்தாற்போல கூறி விடுகிறார்..



அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

வள்ளுவர்பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றும் போக்கு மிகவும் தவறானது, திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

கோவையைச் சேர்ந்த திரு நடேசன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்.

"அவிசொரிந்து ஆயிரம் வேடலின் ஒன்றன், 
உயிர்செகுத் துண்ணாமை நன்று" 
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.
மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும் -
"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க , 
சான்றோர் பழிக்கும் வினை" 
இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம். சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.

"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின், 
நீரினும் நன்றதன் காப்பு" 
இந்தத் திருக்குறளில் உழவுத் தொழிலின் நான்கு நிலைகளைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.



"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்."

’தன் குடியை உயர்த்துவேன் என்று முனைபவனுக்கு தெய்வம் ஆடையை இருகக் கட்டிக்கொண்டு உதவ முன் வந்து நிற்கும். ’

இது எந்த சிரமண மதத்தின் கருத்தும் அன்று. தெளிவாகவே வைதிகச் சார்புடைய கருத்தே.

Gopinath R

மிக அருமையான கருத்துக் கதைத்தார். முக்தி அடைந்த ஞானியரையே சமணம் தெய்வநிலைக்கு உயர்த்துகிறது; வேறு எல்லாம்வல்ல கடவுள் என்பது போன்ற கோட்பாடுகள் சமணத்தில் கிடையா. ஆக பூவுலகில் முயற்சியுடையவனுக்கு எந்த ஒரு சமணக் கடவுளரும் உதவார். மேலும் வரிந்து கட்டிக்கொள்வதற்கு துறவு மேற்கொண்டு முக்தி பெற்ற சுருத கேவலியர்க்கு எந்த ஆடையும் கிடையாது.

Devapriyaji

குடிசெய்வல் என்னும் ஒருவர் - 
இராமபிரானையும், கண்ணபிரானையும் 
‘குடிசெய்வல் என்னும் இருவர்’ எனக் கணக்கிடலாம்.

ராமோ ராஜ்யம் உபாஸித்வா - பல்லாயிரம் ஆண்டுகாலம் அரசாட்சியை இறைத்தொண்டாகவே செய்து முக்தி பெற்றதை இராமாயணம் சொல்லும்.

சிதறுண்டு கிடந்த வ்ருஷ்ணி, போஜர், அந்தகர் போன்ற பல குடியினரைக் கொண்ட யாதவ இனத்தவரை ஒன்று சேர்த்து அவர்களை துவாரகையில் வசதியான வாழ்வளித்துக் குடியமர்த்திய கண்ணபிரானை பாகவதம் சொல்லும்.



கழுவாய் தேடுதல், பரிஹாரம் தேடுதல், துன்பம் நீங்கக் கடவுளை வேண்டுதல், துறை படிந்து தீர்த்தமாடுதல் இவை சமண சமயத்தில் தடுக்கப்பட்டவை. தெய்வ மூடம், தீர்த்த மூடம் என்பர் சமணர். மனத்துயர் வாட்டிய நிலையிலும் கண்ணகி இவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்கிறது சிலம்பு.

படைக்கலம் தாங்கிய கடவுளர், தேவியருடன் இருக்கும் கடவுளர் - இவர்களைத் தொழுவது சமணத்தில் தடுக்கப்பட்டுள்ளது; கொலையும், காமமும் விலக்கத்தக்கவை என்பதால்.

முக்தி அடைந்த தீர்த்தங்கரரைத் தொழுதால் அவர்கள் நாம் முக்திபெற ஒருகாலும் உதவமாட்டார்கள்; ஏனெனில் உயர்நிலை எய்திவிட்ட அவர்களுக்கு இவ்வுலகுடன் ஒருவிதத் தொடர்பும் கிடையாது. அவரவர் தம் வினை நீங்கத் துறவு பூண்டு, கடுமையான தவநெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமண நெறி.


Certainnly Casteism in Hinduism is not a Pleasant one and I quote GILBERT Slater- who gives from Maxmuller, and I Quote from Tamil Translation by PanmozhiPulavar Appadurai. 

மனுவில் குறிக்கப்பட்டு இன்று வழக்கிலுள்ள சாதி முறை வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் இடம் பெறுகிறதா? "இல்லை" என்ற ஒரேசொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுட்துவிடலாம். பெருஞ்சிக்கல் வாய்ந்த சாதி அமைப்பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய தரமும் இல்லை. அது போலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு தாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் எந்தச் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால் வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத தீக்குறியிட்டுட் தீண்ல்த்தகாதவராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி கியவர்களின் அச்சந் தரும் செயல் முறைகளைப் பற்றீயோ; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம் பற்றியோ; .. ... வேத்த்தில் ஒரு சுவடு கூடக் கிடையாது. கடவுளுக்குரிய மதிப்பைத் தமெதெனக் கொண்டு பழிசூழும் ஒரு குருமார் குழுவின் வீம்புரிமைகள், மனித இனத்தின் இல்லங்களை விலங்கினங்களினும் கிழாக இழிவு படுத்தும் முறை கியவற்றை தரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மணத்திற்கு தரவோ, குழந்தை விதவைகள் மணத்தைத் தடைசெய்யவோ கணவன் பிணத்துடன் உயிருள்ள கைம்பெண்ணின் உடலையும் வைத்தெரிக்கும் பொல்லாப் பழக்கத்தை தரிவிக்கவோ அதில் ஒரு வாசகங் கூடக் கிடையாது. இவை யாவும் வேதத்தின் சொல்லுக்கும் பொருளுக்குமே மாறுபட்டவை." Quote frm Maxmuler “இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு”- கில்பர்ட் சிலேட்டர், தமிழ் கா.அப்பாதுரை. பக்கம் 40,41.

சிறந்த ய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசி¡¢யர் வையாபுரி பிள்ளை மயிலை. சீனி வேங்கடசாமி கியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்ளும், திருக்குறளிலுள்ள சமணக் கருத்துகளைச் சற்று வி¡¢வாக எழுதியவர் மயிலையாரே வர். தலால் மயிலையா¡¢ன் கருத்துகளையும், சமணத்தின் சில அடிப்படைக் கொள்கைகளையும் திருக்குறளுடன் ஒப்பிட்டு நோக்குவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். அவற்றைச் சுருங்க நோக்குவோம்.

‘சமணர் மட்டும் தமது அருகக் கடவுளின் திருவடியைக் கூறும்போதெல்லாம் மலர் போன்ற திருவடி என்று கூறுவது மட்டுமன்றி, மலர்மேல் நடந்த திருவடி என்றும் யாண்டும் கூறியிருக்கின்றனர். ஜைன சமய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் ~மலர்மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியது, அருகக் கடவுளையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்குகிறது.

‘அறவாழி அந்தணன் என்பவர் யார்? அவர் எந்தக் கடவுள் என்பதை ராய்வோம். அறக்கடவுளாகிய அந்தணன் என்று பொருள் கொள்வதைவிட தரும சக்கரத்தையுடைய அந்தணன் என்று பொருள் கொள்வது சிறப்புடையதாகத் தோன்றுகிறது. நூல்களிலே ஜைனருடைய அருகக் கடவுள் அறவாழியை உடையவர் என்று கூறப்படுகிறார். கவே அறவாழி அந்தணன் என்று குறிக்கப்படுவர் ஜைனருடைய அருகக் கடவுள் எனக் கொள்ளத்தகும்”.

மயிலையா¡¢ன் இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இலங்கைப் பெரும்புலவரான புலோலி. தில்லைநாத நாவலர், மேற்கண்ட தொடர்களைக் கொண்டு வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

‘மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்”

-என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும்,

‘ஏ¡¢யாய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே”

-என்று திருநாவுக்கரசு நாயனாரும்,

‘போதகந்தோறும் புரிசடையானடி”

-என்று திருமூலர் திருமந்திரத்தானும்,

‘மனைகமலமற மலர்மிசை யெழுதரும்”

-எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலானும்,

இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகனைக் கூறினார் என்றால் அஞ்ஞான விருத்தியே என்க.”

மேலும் அருகனுக்கு அறவாழி வேந்தன் என்பதன்றி ~அறவாழி அந்தணன்| என்பது பெயரன்மையானும், வேந்தனுக்கும் அந்தணனுக்கும் தம்முள் வேற்றுமை பொ¢யதாகலானும் அறவாழிவேந்தன் என்பது தரும சக்கரத்தையுடைய அரசன் என்னும் பொருட்டாகலின் சக்ரம் வேந்தனுக்கன்றி, அந்தணனுக்கியைதல் சிற்ப்பின்றாகலானும், நாயனார் அறக்கடவுளெனும் உருவகப் பொருட்டாகவன்றி, அறச்சக்கரமென்னும் பொருட்டாகக் கூறாமையானும், அருகனுக்கும் அறவாழி அந்தணனுக்கும் வெகுதூரம் என்க” என்று மிக நுட்பாகத் தில்லை. நாத நாவலர் மறுக்கிறார். இம்மறுப்பின் வழி மயிலையா¡¢ன் முடிவு சா¢யன்று என்பதை உணரலாம்.

மற்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் வாலறிவன், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்| என்று பலவிடங்களில் இறைவனின் பண்புகளை பேசுகிறாரேயன்றி, அவனின் உருவத்தையோ, யுதத்தையோ எங்கும் குறிப்பிட்டார் அல்லர். எனவே, தரும சக்கரம் உடைய அந்தணன் எனக்கொண்டு அது சமணக் கடவுளைத்தான் குறிக்குமெனவும் ‘ மலர்மிசை ஏகினான்” என்பதும் அருகனைக் குறிக்குமென்பதும் பொருந்தா என்பதே உண்மை.

திருக்குறளில் உள்ள இத்தொடர்களைக் கொண்டு வள்ளுவா¢ன் சமயத்தை ய்வதைக் காட்டிலும், சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு ய்வதே சிறந்தது, ஏற்றது.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கன்ம பலன்களைப் (வினைகளை) புசிக்க வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. னால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்பூ¢ந்தார் மாட்டு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்”

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,

இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,

அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும்,

பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,

திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளும் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இ•து அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். னால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உலையா உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் கும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் கா தெனினும் முயற்சிதன்                                                                                       மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்                                                                                  தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பொ¢தும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பெளத்தம் அத்துணைக் கடுமையாகத் துவவறத்தைக் கூறாவிடினும், ய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவம் துறவறத்தை மேற்கொள்வது உண்டு. வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார். எனினும் இல்லறத்தையே பொ¢தும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்                                                                            போஓய்ப் பெறுவது எவன் (குறள் – 46)

துறந்தா¡¢ன் தூய்மை உடையர் இறந்தார்வாய் (குறள் – 159)

இன்னாச் சொல் நோற்கிற்பவர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்                                                                           தெய்வத்துள் வைக்கப்டும் (குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம். இவையாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை இரு அறத்தார்க்கும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உ¡¢யன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவா¢ன் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.

சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தா;மங்களை விதித்தது. அத்தர்மத்தை அவர்கள் யதிதா;மம் என்றார். அவை உலோசம், திகம்பரம். நீராடாமை, தரையிற் படுத்தல் பல் தேய்க்காமை, நின்று உண்ணல், ஏக புக்தம் என்பர். வள்ளுவம் இவற்றிற்கு மாறானது.உலோசம் என்பது தலையிலிருந்து மயிரைக் களைவதாகும். . வள்ளுவரோ மழித்தலும் நீட்டலும் வேண்டா – 280 என்று கூறியிருப்பதால் உலோசத்தை அவர் ஏற்கவில்லை என்பதை உணரலாம்.

திகம்பரம் என்பது டையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல – 1012 என்றும் ‘உடுக்கை இழந்தவன் கைபோலும் – 788 என்றும், உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால் வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் புறந்தூய்மை நீரான் அமையும் – 298 என்று கூறுவதால் சமணம் கூறும் நீராடாமையை ஏற்கவில்லை என்பதை உணரலாம். மென்தோள் துயிலின் இனிது கொல் – 1191 என்று அவர் கூறுவதாலும், தரையிற் படுத்தலை எங்கும் கூறாததாலும், அதற்கு அவர் மாறானவர் என்றும் தெளியப்படும். நின்று உண்ணல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்) இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ, மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர். . அகத்தூய்மையும், புறத்தூய்மையையும் வலியுறுத்தும் அவர், பல் தேய்க்காமையை விரும்புவாரா? மாட்டார். ‘பணிமொழி வாலெயீறு ஊறியநீர் 1121 என்ற குறட்பாவிலுனுள்ள “வாலெயிறு” என்பது தூய்மையான பற்களையே குறிக்கும். இதிலிருந்து பல்தேய்க்காமையை அவர் சிறிதும் விரும்பாதவர் என்பதை உணரலாம்.

சமணர் இரத்தன திரயத்தை முக்கியக் கோட்பாடாய் கூறுவர். இரத்தன திரயம் என்பது நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் கியவையாகும். இவற்றைச் சமணர் நோக்கிலோ, இரத்தன திரயப் பொருளிலோ அவர் எங்கும் விளக்கினார் அல்லர். வள்ளுவம் கூறும் கூடாவொழுக்கம், அவா அறுத்தல், மெய்யுணர்வு கியவை இரத்தன திரயத்திற்கு வேறானவை. இரத்தன திரயத்துக்கு மாற்றாக வள்ளுவர்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்                                                                                                நாமம் கெடக்கெடும் நோய் -(குறள் 360)

என்பவற்றைக் குறிப்பிடுவதால் அவர் மாற்றுக் கொள்கையுடையவர் எனக் கூறலாம்.

சமணர் இன்னா செய்யாமையை, எல்லை கடந்து தித உணர்வில் வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உட்கொண்டால், காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். மரங்களைச் செதுக்குவதாலும், கொளுத்துவதாலும், மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலை அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தெழிலில் சமணர்கள் ஈடுபடக்கூடாதென அவர்கள் விதித்தனர். மனுநீதியோ உழவுத்தொழிலை இழிந்தோர் தொழில் என்றது.

உழவுத்தொழிலை மனுநீதி மறுத்தற்கும், சமணம் மறுத்ததற்கும் வேறுபாடு உண்டு. சமூகத்தில் சமநீதி ஏற்படாமல் இருக்க மனுநீதி அதனை இகழ்ந்தது. சமணமோ, வரம்பு கடந்த இரக்கத்தை முன்னிட்டு மறுத்தது. னால், வள்ளுவமோ உலகியல் நடப்பைக் கொண்டு உழவுத் தொழிலைப் போற்றியது.  சுழற்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்                                                                                      உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்                                                                 தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)

-இக்குறட்பாக்களின் மூலம் வள்ளுவம் சமணத்துடன் எத்துணை மாறானது என்பது பெறப்படும்.

மேலும், சமணம் பெண்களைத் தாழ்ந்த பிறவியாகக் கருதியது. பாவம் செய்தவரே பெண்ணாகப் பிறக்கின்றனர் என்றும் கூறியது. பெண் வீடுபேறு அடைய வேண்டுமாயின், அடுத்த பிறவியில் ணாகப் பிறந்தால்தான் முடியும் என்றது. இவை போன்ற கருத்துகளைச் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற சமண நூல்களிலும் காணலம். வள்ளுவம் இவற்றிற்கு முற்றிலும் மாறானது.

வள்ளுவம், பெண்களின சிறப்பை எண்ணி ‘வாழ்க்கைத் துணைநலம்” என்ற அதிகாரத்தை வகுத்து ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள -54 என்றும், வேறொரு அதிகாரத்திலும் ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண¦;டாழுகின் உண்டு -974 என்றும், மதித்துப் போற்றியது. சமணம் காமத்தை இகழ்ந்து கடிந்தது. வள்ளுவமோ, இருபத்தைந்து அதிகாரங்களை வகுத்துக் காமத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது. இவ்வாறு, பல்லாற்றான் அடிப்படையில் சமணத்துக்கு மாறான கருத்துகளை வள்ளுவம் வலியுறுத்தியிருக்க, மயிலையார் போன்றோர் வள்ளுவத்தில் சமணக் கருத்துகளே மிகுந்து தோன்றுகின்றன. என்று கூறியிருப்பது ஏற்க முடியாததேயாகும்.

பா.வீரமணி

No comments:

Post a Comment

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்! https://www.aljazeera.com/economy/2024/4...