பைக்கில் இடித்த திருமாவின் கார்.. ஏன் என கேள்வி கேட்டவரை விரட்டி விரட்டி தாக்கிய விசிகவினர்- வீடியோ
By Nantha Kumar R Updated: Tuesday, October 7, 2025
உயர் நீதிமன்றம் இன்னொரு கட்சித் தலைவர் கேரவான் மீது வந்து மோதி 2வீலர் நிறுத்தியதால் வழக்கு, வாகனப் பறிமுதல் எனத் தீர்ர்ப்பில் உள்ளதாம். திருமா மீதும் வழக்கு வேண்டும், https://tamil.oneindia.com/news/chennai/vck-party-members-attacked-one-man-after-thirumavalavan-car-hit-his-bike-in-chennai-741369.html
சென்னை: சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனின் கார் பைக் மீது இடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பைக்கில் இருந்தவர் யாரு அது? காரை விட்டு இறங்கு என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த திருமாவளவனின் ஆதரவாளர்கள் பைக்கில் சென்ற நபரை தாக்கி அவரது பைக்கை சாலையில் கீழே தள்ளி அட்டூழியம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் பிஆர் கவாய். இவர் மீது நேற்று ராகேஷ் கிஷோர் (வயது 71) என்பவர் காலணி வீசினார். அதிர்ஷ்டவசமாக பிஆர் கவாய் மீது காலணி படவில்லை. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திருமாவளவன் பங்கேற்றார்.
திருமாவளவன் மேடையில் பேசும்போது, ‛‛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாயை நோக்கி காலணி வீசியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியதோடு சம்பவத்தை கண்டித்தும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு திருமாவளவன் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது சிறிது நேரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது கார் லேசாக இடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பைக் ஓட்டுநர் நடுரோட்டில் பைக்கை நிறுத்தினார். மேலும் காரை நோக்கி வந்து யாரு அது? காரை விட்டு இறங்கு? என்று கூறினார். அப்போது திருமாவளவனுக்கு பின்னால் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த பைக் ஓட்டுநரை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர். அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால்..! விசிக திருமாவளவன் " இதனால் கோபமடைந்த விசிகவினர் அந்த நபரை தாக்கினர். மேலும் அவர் நிறுத்தியிருந்த பைக்கை சாலையில் தள்ளிவிட்டனர். இதில் பைக் சேதமானது. மேலும் ஆத்திரம் அடங்காதவர்கள் அவரை விரட்டி விரட்டி தாக்கினர். இந்த சம்பவம் போலீசார் கண்முன்னே நடந்தது. போலீசார் தடுக்க முயன்ற முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் திருமாவளவன் ஆதரவாளர்கள் பைக் ஓட்டுநரை விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vck-party-members-attacked-one-man-after-thirumavalavan-car-hit-his-bike-in-chennai-741369.html
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vck-party-members-attacked-one-man-after-thirumavalavan-car-hit-his-bike-in-chennai-741369.html
No comments:
Post a Comment