தமிழ் சனியன், தமிழை ஒழிக்கவே திராவிடம் என்ற கன்னடர் ஈவெராமசாமியார்
அண்ணாதுரை ஆட்சி 1968ல் உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது ஈவெரா வெளியிட்ட நூலே -தமிழ் ஏன் காட்டுமிராண்டி மொழி
“வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மா காந்தியைக் குறித்து C.N.அண்ணாதுரை என்ன பேசினார் என பார்ப்போம்: “தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறி விடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”. என்றார்.
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”. நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948 (நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)
No comments:
Post a Comment