கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை ஒரு கல்லூரி பேராசிரியர் தனது மாணவர்கள் முன்பு வைக்கிறார்.
ஒரு மாணவன் எழுந்து, கடவுள் இருக்கிறார் என்கிறான்.
கடவுள் இருக்கிறார் என்றால் நன்மையே உருவான கடவுள் உருவாக்கப்பட்ட இந்த உலகத்தில் ஏன் தீமையும், துன்பங்களும் நிறைந்து காணப்படுகிறது?
இதை வைத்து பார்க்கும் பொழுது கடவுள் ஒரு தீயவர் என்று தீர்மானித்துக் கொள்ளலாமா என அந்த மாணவனைப் பார்த்து அந்த பேராசிரியர் கேட்கிறார்.
இதற்க்கு அந்த மாணவனால் பதிலேதும் கூற இயலவில்லை.
பிறகு தனது மாணவர்களிடையே கடவுள் என்பது ஒரு கட்டுக்கதை, கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தவறான கருத்து என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
அப்பொழுது மற்றொரு மாணவன் எழுந்து பேராசிரியரைப் பார்த்து உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா? என வினவினான்.
கேள் என்றார் பேராசிரியர்.
குளிர் என ஒன்று இருக்கிறதா என்று கேட்டான் மாணவன்.
இது என்ன முட்டாள் தனமான கேள்வி? குளிர் இருக்கிறது.
குளிரை நீ உணர்ந்தது இல்லையா? என சற்று அவமதிப்பு செய்யும் தோணியில் கேட்கிறார் பேராசிரியர்.
உண்மையில் இயற்பியலின் விதிப்படி குளிர் என ஒன்று இல்லை.
வெப்பமில்லாத நிலையை தான் நாம் குளிர் என்று கருதுகிறோம்.
குளிர் என்ற வார்த்தையே வெப்பமில்லாத நிலையை விவரிக்க தான் பயன்படுத்துகிறோம் என்றான் மாணவன்.
இருள் என ஒன்று உள்ளதா? என்று தொடர்ந்தான் அந்த மாணவன். நிச்சயம் உள்ளது என்று பதிலளித்தார் பேராசிரியர்.
மீண்டும் நீங்கள் கூறியது தவறு, இருள் என்ற ஒன்றும் இல்லை என்றான் மாணவன்.
மேலும் இருள் எனப்படுவது உண்மையில் ஒளி இல்லாத நிலை என்றும் இருளை உங்களால் அளவிட முடியாது என்றும் கூறினான்.
ஒரு வெற்றிடம் எவ்வளவு இருளாக உள்ளது என்று தெரிந்துகொள்ள அந்த இடத்தில் உள்ள ஒளியை அளப்பதன் மூலமே அறியமுடியும் எனவும் கூறினான்.
இறுதியாக, பேராசிரியரே இப்பொழுது கூறுங்கள், தீமை என ஒன்று உள்ளதா? என்று வினவினான் மாணவன்.
நான் ஏற்கனவே கூறியது போல நிச்சயம் உள்ளது என்று பதிலளித்தார் பேராசிரியர்.
இதற்கு அந்த மாணவன் கூறுகிறான், தீமை என்ற ஒன்றும் இல்லை. கடவுள் தன்மை இல்லாததை தான் தீமை என்று அழைக்கிறோம்.
குளிர் மற்றும் இருள் போல தீமையும் கடவுள் தன்மை இல்லாததை குறிக்க நாம் பயன்படுத்தும் ஒரு சொல்லே தவிர தீமையை கடவுள் உருவாக்கவில்லை.
மனிதனிடம் கடவுள் தன்மை இல்லாததால் வரும் விளைவே தீமை என்று கூறி அமர்ந்தான் அந்த
அந்த மாணவன்.
No comments:
Post a Comment