Friday, June 3, 2022

வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்  

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை
பொருள்
வையத்துள் = இந்த உலகில்
வாழ்வாங்கு வாழ்பவன் = இல்லற வாழ்க்கைக்கு என நீதி நூல்கள் காட்டும் வழியில் வாழ்பவன்
வானுறையும் = வானுலகில் வாழும்
தெய்வத்துள் = தேவர்களுக்கு இடையே
வைக்கப் படும். = வைக்கப் படுவார்

பொருள்கோள் வரிஅமைப்பு:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்,
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
பதவுரை: வையத்துள்-நிலவுலகத்துள்; வாழ்வாங்கு- வாழும் முறைப்படி; வாழ்பவன்-வாழ்க்கை நடத்துபவன்; வான்-விண்ணுலகம்; உறையும்-தங்கும்; தெய்வத்துள்-தெய்வத் தன்மையில்; வைக்கப்படும்-மதிக்கப்படும்
திருவள்ளுவர் மனித வாழ்க்கை என்பது மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து என வாழ்வது என்பதை

திருவள்ளுவர் இந்த குறட்பாவில் திருக்குறளில் என்ன கூறுகிறார் என்பதை நாம் உணர இதற்கு இணையான மற்ற குறட்பாக்களை அவரது கருத்தை நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை.
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவரு
ம்.

மனிதன் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து பூமியில் பிறப்பதற்கு இடையில் அந்த பிறவியில் செய்யும் நல்ல அறச் (புண்ணியம்) செயல்கள் அவனை சொர்கம் எனும் வானுலகிற்கும், தீய (பாவம்) செயல்கள் அவனை நரகத்திற்கு அனுப்பும்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நம் உடல் அழியும் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்.
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்தால், அச்செயலே, அவன் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். குறள் 121: அடக்கமுடைமை.
அடக்கம் ஒருவனைப் உயர்த்தி தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை இருள்  நரகத்திற்க்குக் கொண்டு போகும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
பொருள்கோள் வரிஅமைப்பு:
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
பதவுரை:அடக்கம்- அடக்கமாக நடந்து கொள்ளுதல்; அமரருள்-சாகா
ல் வாழும் தேவர்கள் வரிடை உய்க்கும்-சேர்ப்பிக்கும்; அடங்காமை-அடங்கி ஒழுகாதிருத்தல்; ஆரிருள்-இருள் நிறைந்த  நரகம்; உய்த்துவிடும்-செலுத்திவிடும்.
இந்தியா முழுவதும் பலநூறு நடுகல் அல்லது வீரக்கல் என  காண்பதில் மேலுள்ளது ஒருவகை


நடுகல் வழிபாடு, தமிழகத்தில் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது. வீரச்செயல் புரிந்து இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுத்து, அதில் அவனுடைய உருவத்தைச்சிற்பமாக வடித்து, மாலை அணிவித்துப் படையல் இட்டு வழிபடுவது மரபு.  நடுகற்களில் காணப்படும் வீரர்கள், தங்கள் கிராமங்களில் கால்நடைகளைக் காவல் காக்கும் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது, கால் நடைகளைத்தாக்க வருகின்ற புலி, கரடி, பன்றி ஆகிய விலங்குகளை எதிர்த்துப் போரிடும்போது, அவ்விலங்குகளைக் கொன்ற பின்னர் அவர்களும் இறக்க நேரிடும். அவ்வாறு இறந்துபடும் வீரர்களுக்கு நினைவுச்சின்னமாக வீரக்கல் எனப்படும் நடுகல் எடுக்கப்பட்டது. இதேபோல், ஒரு கிராமத்தின் ஒரு குழுவைச்சேர்ந்த மக்களின் கால் நடைகளை, மற்றொரு ஊரின் குழுவினர் (வீரர்கள்) போரிட்டுக் கவர்ந்து செல்வதும், அவற்றை மீட்கும் முயற்சியாகப் போரிடுவதும் தொறுப்பூசல் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் படுகிறது. தொறுப்பூசலில் இறந்துபடும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் தமிழகத்தில் நிறையக்காணப்படுகின்றன.

சில நடுகற்களில், வீரனுடைய மனைவியும் சிற்பமாகக் காட்டப்படுவதுண்டு. வீரனுடைய மனைவி, தன் கணவனின் இறப்பைத்தொடர்ந்து அவளும் தீயில் பாய்ந்து மாண்டு போவதையே இது குறிக்கும். இத்தகைய கல், மாசதிக்கல் எனப்படும். பெரும்பாலும் ஒற்றைக் கல்லிலேயே இச்சிற்பங்கள் வடிக்கப்படும். சில நடுகற்களில், மூன்று அடுக்குகளாகச் சிற்பங்கள் செதுக்கியிருப்பார்கள். முதல் அடுக்கில், வீரன் விலங்கோடு போரிடும் காட்சியும், இரண்டாவது அடுக்கில், உடன்கட்டை ஏறி உயிர் நீத்த வீரனின் ம்னைவி சொர்க்கம் போவதுபோன்ற காட்சியும், மூன்றாவது அடுக்கில், வீரன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற காட்சியும் காணப்படும். (வீரன் சிவலோகம் அடைந்தான் என்பதன் குறியீடு).
மிகவும் அரிதாக, நான்கு பக்கங்களுடைய தூண் வடிவில் அடுக்குநடுகல் சிற்பமும் காணப்படுவதுண்டு. அவ்வகை தூண் நடுகல் சிற்பம் ஒன்று, திருப்பூர்-உடுமலைச் சாலையில், குடிமங்கலத்தை அடுத்துள்ள கோட்டமங்கலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  தஞ்சையில் இயங்கும் தமிழகத்தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான, விழுப்புரம் சி.வீரராகவன் – மங்கையர்க்கரசி, கோவை து.சுந்தரம்  ஆகியோர் உடுமலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்தத் தூண் நடுகல்லைக்கண்டறிந்தனர். கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோயிலை ஒட்டியுள்ள ஊர்ப்பகுதியில் இந்தத் தூண் நடுகல் காணப்படுகிறது. ஊர் மக்கள் இதை “ மாலக்கோயில் “ என அழைக்கின்றனர். ஏறத்தாழ, 8 அடி உயரமும், 2 அடி அகலமும், 1 ¼ அடி கனமும் கொண்டு பிரமாண்டமாக நிற்கும் இந்த அடுக்கு நடுகல் தூணில் 9 அடுக்குகள் உள்ளன. இவ்வடுக்குகள், போட்டோக்களுக்கு சட்டம் அமைத்ததுபோல் நேர்த்தியாகச் செவ்வக வடிவில் பிரிக்கபட்டுள்ளன. தூணின் நான்கு முகங்களிலும் உள்ள எட்டு விளிம்புகளும் புடைப்பு அமைப்பில் வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தூணின் உச்சி, ஒரு கோயில் கருவறை விமானம்போல் அழகுற அமைக்கப்பட்டுத் தெய்வச்சிற்பங்களைக் கொண்டுள்ளன.
      தூணுக்கு இருபுறமும், இரண்டு தனிக்கல்லில் அரசர்களின் உருவில் சிற்பங்கள். அரசர்களின் அருகில் அவர்களது மனைவியர் உருவங்கள்.  இவையும் நடுகல் சிற்பங்களே.  இவர்கள், இப்பகுதியிலிருந்த பாளையப்பட்டு  நாயக்கர்களாக இருக்கக்கூடும்.

     தூணின் நான்கு முகங்களில் மைய முகத்தில், உச்சியில் நடராசர் சிற்பம், அதன் கீழே உள்ள அடுக்குகளில் வியாக்கிரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) சிவனை வழிபடும் சிற்பம், கஜலட்சுமி, குழலூதும் கண்ணன், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிற்பம், பல்லக்கேறி வீரர்கள் செல்லும் காட்சியில் சிற்பம் போன்ற பல சிற்பங்கள். தூணின் மற்ற முகங்களில், யானை,குதிரை ஆகியவற்றின் மீது வீரர்கள் அமர்ந்து போரிடும் காட்சி, வில்லேந்தி வீரர்கள் போரிடும் காட்சி ஆகிய பல்வேறு சிற்பங்கள் உள்ளன. இவை தவிர வரிசையாக வீரர்கள் மற்றும் பெண்கள் (உடன்கட்டை ஏறிய மனைவியர்களாக இருக்கக்கூடும்) ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பெண்கள் வில்லேந்திப் போரிடும் காட்சியில் அமைந்த சிற்பங்கள் என,  நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் தூணில் காணப்படுவதை ஆய்ந்து நோக்கும்போது, ஒரு போர்ச்சூழலில் இறந்து போன பெரும் வீரர்களுக்கும், அவர் மனைவிமார்க்கும், பாளையப்பட்டுக் குறு நில மன்னர் நிலையில் இருந்தவர்க்கும் எடுக்கப்பட்ட மிகப்பெரிய  நினைவுக்கல்லாக இதைக் கருத வேண்டும். தூணின் உயரம், பெரும் வடிவம், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சிற்பங்கள், சிற்பங்களின்   நேர்த்தியான வேலைப்பாடுகள், அதன் ஒட்டுமொத்த பிரமாண்டம், பக்கத்திலே உள்ள வேலைப்பாடுகள் மிகுந்த தனிச் சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது மிகவும் முக்கியமான நிகழ்வு கருதி இந்த நினைவுத்தூண் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்பதையும், நினைவுத்தூண் எழுப்பியவரும் ஒரு முக்கியத்துவம் நிறைந்த பெரிய பதவியில் இருந்த தலைவராகத்தான் இருந்திருக்கவேண்டும் எனவும் கருதலாம். இக்கருத்தை, இவ்வூர்ப் பெரியவர்கள் கூறும்-மரபு வழியில் காப்பாற்றி வைத்திருக்கும்-செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
கர்நாடக நடுகற்கள்
பழங்காலத்தில் வீரச்செயல்கள் செய்தவர்களின் நினைவாக நடுகல்  வைத்து வணங்குவது வழக்கம் . இவ்வழக்கம் கர்நாடகா மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே இருந்துள்ளது .  அங்கும் எண்ணற்ற நடுகற்கள் காணப்படுகின்றன . அவை தமிழக நடுகற்களை ஒத்தே காணப்படுகின்றன . 



படம்-1 

ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல் போரில் இறந்த வீரனுக்காக சதியேறிய மனைவிக்கான சதிக்கல் . இது மூன்று நிலை நடுகல் .  முதல் நிலையில் ஒரு வீரன் கையில் அம்பும் அவனை எதிர்க்கும் மற்றொரு வீரன் கையில் வில்லும் காட்டப்பட்டுள்ளது .  அவர்களுக்குக் கீழே  ஆநிரைகள் காட்டப்பட்டுள்ளது . கூடவே பெண் உருவமும் உள்ளது .  இரண்டாம் நிலையில் சதி ஏறிய பெண்ணை தேவலோக அழைத்துச் செல்லும் காட்சி . இறுதி நிலையில் அப்பெண் இறைவனடி சேர்ந்த காட்சி காட்டப்பட்டுள்ளது . 





படம் 2 :

  அரசர் அல்லது தலைவருக்கான நடுகல். இருவரும் ஒரே போரில் இறந்துள்ளனர். ஒருவரின் மனைவியும் உடன் சதியேறியுள்ளார்.   இது நான்கு நிலை நடுகல் . முதல் நிலையில் இரு அரசர்கள் அல்லது தலைவர்களை பல்லக்கில் அழைத்து செல்வது போல கட்டப்பட்டுள்ளன .  இரண்டாம் நிலையில் இரு அரசர்களும் குதிரையில் அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவர்களுடன்  யானைப் படையும் மற்றும் வீரர்களும் காட்டப்பட்டுள்ளது .  மூன்றாம் நிலையில் இரண்டு அரசர்களும் ,  ஒருவரின் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும்  காட்சி . கடைசி நிலையில் மூவரும் சிவலோகம் அடைந்த காட்சி காட்டப்பட்டுள்ளது .





படம் 3 :

அரசர் அல்லது தலைவருக்கானது கூடவே மனைவியும் சதியேறியுள்ளார்.

 இது மூன்று நிலை நடுகல் . முதல் நிலையில் அரசர் குதிரை மீது அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவருடன் மூன்று வீரர்கள் கேடயத்துடன்  காட்டப்பட்டுள்ளனர் .  இரண்டாம் நிலையில் அரசரும் அவர் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும் செல்லும் காட்சி . மூன்றாம் நிலையில் அரசரும் அவர் மனைவியும் சிவலோகப் பதவி அடைந்து  காட்சி .

 
https://sakthiprakasherode.blogspot.com/2021/02/blog-post_59.html






     




"கீழ்குந்தெ" எனப்படும் (கங்க அரசன் நிதிமார்கா தொட்ட ஹுண்டி நடுகல் கல்வெட்டு) 




தமிழகத்தில் தனது சிரத்தை தானே அரிந்து கொள்ளும் அரிகண்டம் இன்னொரு நபர் மூலம்  தலையை வெட்டி யெடுக்கும் சாவாரபலி, தமது உடம்பை 9 பாகங்களாக வெட்டிக் கொள்ளும் நவகண்டம், மூங்கில் மரத்துடன் தலையை சேர்த்து கட்டி வெட்டுண்ட தலை மூங்கில் மரத்தில் தொங்கும்  "தூங்கு தலை" முறை (கர்நாடகத்தில் சிடிதல)போன்ற இம்முறைகளில் மட்டுமின்றி கர்நாடகத்தில் மேலும் பல முறைகளில் ஆத்மபலி சடங்கு நடைபெற்றதை அறியமுடிகிறது.

அக்காலத்தில் தமது அரசன் போர்களத்தில் வெற்றி வாகை சூடவும், மற்றும் நோயின்றி வாழவும் தமது உயிரினை கடவுளர்க்கு காணிக்கையாக படைப்பதை பெரும் வீரச்செயலாக கருதினர்.

ஆத்மபலி (உயிர்கொடை) தெய்வத்திற்காகவும்,மத நம்பிக்கை பொருட்டும் நிகழ்வதுண்டு. 

அக்காலத்தில்  அரசனுக்கும், நாட்டுக்காகவும், ஊர் நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அவரது உறவினர்கள் நடுகல் எடுப்பித்து வழிபட்டனர். இறந்த வீரனுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. அதனை உதிரப்பட்டி நிலம் என அழைத்தனர்.

கர்நாடக கல்வெட்டுகள் "நெத்தரு கொடுகெ" என இதனை குறிக்கிறது. 

இத்தகு நடுகல் வீரர்கள் பற்றிய குறிப்புகளை தமிழ் செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, புறநானூறு குறிப்பிடப்படுவது போன்றே அக்கால கன்னட சாஹித்யங்கள் பலவும் சான்றுகள் பகர்கின்றன. 

ஆதிகவி பம்பா இயற்றிய விக்ரமார்ஜூனியம்,ஜன்னாவின் அனந்தநாதபுராணம், பந்துவர்மாவின் ஹரிவம்சபூதயா ஆகிய நூல்களில் ஆத்மபலி,நடுகல் வழிபாடு பற்றி கூறுகிறது. 

"இரவு இருக்கும் வரை மின்னி மறையும் விண்மீன்களை போல தங்கள் இறையான அரசன் இவ்வுலகில் இருக்கும் வரை உயிர் வாழ்ந்த மெய்காப்பாளர் படையினர் ஆபத்துதவிகள், தென்னவன், வேலைக்காரபடை, கைகோளர்படை, என அக்கால தமிழகத்தில் இருந்தது போன்றே கர்நாடகத்திலும் இத்தகைய உயிர்கொடை வீரர்கள் இருந்தனர். அவர்கள் எரே வேசா,(எரே-தலைவன் வேசா-ஆணை) வேலவாளி(வேல-காலம் வாளி-கடமை,பொறுப்பு)கருடா, மனெ மகன், பிரிய புத்ரா, பிரேமாலயசூதன் என பல பெயர்களில் கன்னட மொழி கல்வெட்டுகள் குறிக்கிறது.



இம்மையில் தங்கள் அரசனுக்கு சேவை செய்வது போன்றே மறுமையிலும் விண்ணுலகில் பணி செய்ய வேண்டி உடன் உயிர் துறக்கும் இவர்களை கன்னட பழம் இலக்கியங்களில் "துலிலாள்"  "வேலவதிகா" எனவும் விளிக்கிறது.

இந்த உயிர் கொடையாளர்களின் அறம், வீரம், அர்பணிப்பு  அரசபற்று ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு முறையில் உயிர் பலி மரபினை பின்பற்றினர். 

உயரமான மலை முகட்டிலிருந்து விழுந்து உயிர்துறப்பது" மன்னர் இறந்த பின்னர் அவர் உடலை தமது மடியில் கிடத்தி உயிருடன் மண்ணுக்குள் புதைக்கபடும் முறைக்கு "கீழ்குந்தெ" எனப்படும் (கங்க அரசன் நிதிமார்கா தொட்ட ஹுண்டி நடுகல் கல்வெட்டு) உயிருடன் தோலை உரித்து கொள்வது, பாய்தோடும் புனித நதி பிரவாகத்தில் மூழ்கி உயிர் துறத்தல்

(சாளுக்கிய அரசன் ஆகவமல்லன்) தீயில் பாய்ந்து உயிர் துறப்பது என இவ்வகையான முறையில் தீப்பாய்ந்து பட்டான் என்ற அபூர்வ வகை நடுகல் 

நடுகல் அமைப்பு-: 

    4 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட சதுர வடிவிலான பலகை கல்லில் மூன்றடுக்கு நிலை நடுகல்

கீழிருந்து மேலாக-:

முதல் நிலையில் உயிர்பலி வீரன் மார்புக்கு நேராக இரு கரங்களை மடக்கி  சேவித்த வாறு நின்ற நிலை. அடுத்து எரிகின்ற அக்னி குண்டத்தில் பாய்வது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளான்.

இரண்டாம் நிலையில் தீயில் பாய்ந்து உயிர் துறந்த வீரனின் ஆன்மா இரு தேவகன்னியர்களின் கரம் பற்றி விண்ணுலகம் செல்லும் காட்சி 

மூன்றாம் நிலை இருமருங்கும் தேவகன்னியர் கரங்களில் வெண் சாமரமேந்தி ஆடல் கோலத்தில் காட்சியளிக்க நடுவே ஆத்மபலி வீரன் இருக்கையில் சுகாசனத்தில் அமர்ந்து அபயஹஸ்தம் காட்டியவாறு வடிக்கப்பட்டுள்ளான். இடையே கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது .

இத்தகு தீப்பாய்ந்து பட்டான் நடுகற்கள் 10நூற்றாண்டுக்கு பிறகான காலக்கட்டத்தில் காணக் கிடைப்பதில்லையென கன்னட நடுகல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...