Friday, June 3, 2022

ஓரினச் சேர்க்கை தம்பதி ஆதிலா நஸ்ரின்- பாத்திமா நூரா சேர்ந்து வாழ கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

அறிவியல் ஆய்வுகள்படியாக சிலர் பிறப்பிலேயே ஓரினச் சேர்க்கை மட்டுமே விரும்பும்படி பிறந்தவர்கள்; (இடது கைப் பழக்கம் போலே )மனோ வியாதியோ, தவறு என்பது இல்லை என்கிற்து விஞ்ஞானம்.  இந்தப் பெண்கள் சார்ந்துள்ள மதவெறிக் கட்டுப்பாடு,  இவர்களை கொலை செய்ய முயலும் என பலரும் பயப்படுகின்றனர்

பெற்றோர்களால் பிரிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாள தம்பதி ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் சேர்ந்து வாழலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு    இட்டிருக்கிறது. 

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா. இருவரும் கேரளாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு படிக்கச் சென்றிருக்கிறார்கள். அங்கு, இருவரும் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்திருக்கிறார்கள். அப்போது, இருவரும் சந்தித்திருக்கிறார்கள். இதில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இருவரும் காதலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதன் பிறகு, இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள். இதனிடையே, பட்டப்படிப்பு முடித்து ஊர் திரும்பிய இருவரும், கேரளாவிலும் ஒன்றாக வாழ முடிவு செய்திருக்கிறார்கள். 

  இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்த உறவுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். எனினும், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். இதையறிந்த இரு தரப்பு பெற்றோரும், இரு பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறார்கல். எனவே, ஆதிலாவுடன் ஒரே வீட்டில் தங்களது மகள் பாத்திமாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பெற்றோரும் உறவினர்களும் தங்களது வீட்டிற்கு இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.இதையடுத்து, தனது துணைவியை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும், கேரள உயர் நீதிமன்றத்தில் ஹேபியல் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ஆதிலா நஸ்ரின். மேலும், தானும் தனது துணைவியார் பாத்திமா நூராவும் தங்களது குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆதிலா நஸ்ரின். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கேரள உயர் நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கேரள போலீஸாருக்கு உத்தரவிட்டது. பின்னர், பாத்திமா நூரா மற்றும் ஆதிலா நஸ்ரின் ஆகியோரது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை என்று உத்தரவிட்டது.

'sologamy என்ற சொல்லை ' சுய மணம் ' என்று மொழி பெயர்க்கலாமா ?

தர்மசாஸ்திர நூல்களில் இவ்வகை திருமணம் இல்லைதான் , ஆயினும் இந்தச் செயல் இவரது தனிப்பட்ட அடிப்படை உரிமை ஏனெனில் அது இந்த நாட்டின் அரசியல் சாஸனம் இவருக்கு அளிக்கும் முழுப் பாதுகாப்பு !

இந்தியாவில் சுவாரசியமான செய்திகளுக்கு அளவே இல்லை !

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா