கேராளாவில் நாசிய கம்யூனிஸ்ட் ஆட்சியில்
நூபுர் சர்மாவிற்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடந்தது.
இதில் கர்நாடக மாநிலத்தின் பெலகாவி பகுதியில் நடந்த போராட்டத்தின் போது அங்கு சாலையின் நடுவே நூபுர் சர்மாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்
உருவ பொம்மை ஒன்று பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டது போல தொங்கவிடப்பட்டது. அந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.
இந்த சம்பவம் குறித்து விமர்சிக்கவோ கண்டனம் தெரிவிக்கவோ யாரும் முன்வரவில்லை.
ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ பிரசாத் இந்த சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவரது ட்விட்டர் பதவில்
"இது கர்நாடகாவில் தொங்கவிடப்பட்ட நூபுர் சர்மாவின் உருவப் பொம்மை.
இதை பார்க்கும்போது இது 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் இந்தியாதானா என்று நம்ப முடியவில்லை. அரசியலை ஒதுக்கிவைத்து விடும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இது கொஞ்சம் ஓவர். இது வெறும் உருவ பொம்மை மட்டுமல்ல, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்"
என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே வெள்ளிக்கிழமை போராட்டங்களை கண்டித்து கங்கனா ரணாவத்
"ஏன் டான் போல நடக்கறீங்க.
எங்கள் கடவுள்களை பற்றிய அவதூறு பிரச்சினைகளை நாங்கள் நீதிமன்றங்கள் மூலமாக எதிர்கொள்கிறோம். அதேபோல் நீங்களும் நீதிமன்றத்தில் போய் முறையிட்டு நடவடிக்கை எடுங்கள்"
என்று பேசினார்.
ஒரு சில சம்பவங்களுக்காக மட்டும் பாஜகவை குறை கூறி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் பிரபலங்களுக்கு மத்தியில்
சில மாற்று சிந்தனையாளர்களும் உண்டு என்பதே நம்பிக்கை தரும் விஷயம் தான்.
உண்மையை உரக்க சொல்லவும் தைரியம் வேண்டும்.
வைரவேல் சுப்பையா
No comments:
Post a Comment