By Velsmedia Team June 14, 2022 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு மாணவர்களிடம் அழுத்தம் கொடுப்பதால், தங்கள் குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எங்கள் கிராமத்துக்கென அரசுப் பள்ளி வேண்டும் என பெற்றோர் தெரிவிக்கின்றனர். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பள்ளி மீது பெற்றோர் மதமாற்ற குற்றச்சாட்டை முன்வைத்ததைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியின் வார்டன் மற்றும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்துவதாகவும், அதை எதிர்த்தபோது உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டதாகவும், கழிவறைகளை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அந்த மாணவி கூறியிருந்தார்.
கன்னியாகுமரியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு பெண் ஆசிரியை வகுப்பில் கிறிஸ்தவ மதத்தைப் புகழ்ந்தும், இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்தியதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் பள்ளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மற்றொரு ஆசிரியையுடன் சேர்ந்து தங்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அந்த ஆசிரியை வற்புறுத்துவதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும் போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. https://www.palayamkottaidiocese.org/diocese/institutions https://www.hindutamil.in/news/tamilnadu/787771-trying-to-convert-students.html
No comments:
Post a Comment