Tuesday, June 14, 2022

சங்ககால முருகன்

 பரிபாடல்-பரங்குன்றத்திலே வழிபடுவோர்:

சங்கத்தமிழ் இலக்கியத்தில் தெய்வானை
பரிபாடல் - 9 முருகவேளை வாழ்த்துதல்

 
சங்ககால முருகப்பெருமான்/சேயோன் வேறு,ஸுப்ரஹ்மண்யர் வேறு என்போர் கவனத்திற்கு. பரிபாடல் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானைக் குறித்து வேள்விகள் இயற்றப்பட்டதைக் கூறுகிறது.

சங்கத்தமிழ் இலக்கியத்தில் தெய்வானை
பரிபாடல் - 9 முருகவேளை வாழ்த்துதல்
ஆலகால விஷத்தை ஏற்ற சிவபெருமான் மகன் முருகன் மை தீட்டிய கண்களை கொண்ட மானின் மகளான வள்ளியின் தோள் பற்றி மணந்த போது ஆயிரம் கண்கள் கொண்ட இந்திரனின் மகளான தேவயானை கண்ணீர் பொழிந்தது திருப்பரங்குன்றத்தில் முதுவேனிற்காலத்திலும் கார்காலம் போலவே மழை பெய்ந்தது போல இருந்தது
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇ என, மா வேனில் கார் ஏற்று, 10
தணி மழை தலையின்று தண் பரங்குன்று.
Praising Murukan
On the day you united with Valli with dark eyes decorated
with powdered kohl, daughter of a deer, Thēvasēnai, the
daughter of Inthiran with a thousand eyes, shed tears from
her flower-like, kohl-lined eyes that appeared like rains
from sapphire-colored clouds,
English translation from Prof. Vaidehi Herbert

சங்கத் தமிழ் இலக்கியத்தில் சங்கி முருகக் கடவுள்.
4 வேதங்களை 48 வருடம் படித்து அறம் தவறாமல் வாழும் அந்தணர்களுக்கான முகம் திருவேரகம் எனும் சுவாமி மலை - திருமுறுகாற்றுபடை, சைவத் திருமுறை
பாடல்-19.
வரிகள்-38-45.
திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கச் செல்லுபவர்கள் பலராவர்.அவர்களுள் சிலர் அங்குள்ள குரங்குகள் உண்பதற்காகப் பலகாரங்களைக் கொடுப்பர்.கருமையான முகத்தைக் கொண்ட முசுக்கணம் எனும் குரங்களுக்கு சிலர் கரும்புத்துண்டுகளைக் கொடுப்பார்கள்.தெய்வத்தன்மை வாய்ந்ததான பிரமவீணையை மீட்டி இசைப்பர் சிலர்.துளைகளிலே கைவிரல்களை வைத்து ஒலியெழுப்பும் குழற்கருவிகளை இசைத்து இன்பம் காண்பார்கள் சிலர்.யாழின் இளி,குரல்,சமம் எனும் பேதங்களை அறிந்து,அதனை மீட்டி இசையின்பம் கொள்வார்கள் சிலர்.முருகப்பெருமானைக் குறித்துச் செய்யப்படும் வேள்விகளின் அழகினையும்,சிறப்பினையும் குறித்து வாய்குளிரச் சொல்லிக்கொண்டிருப்பார்கள் சிலர்.யாழ் நரம்புகளிலிருந்து எழும் குரலானது கொம்மென்று ஒலிசெய்ய,அதன் இசைமுறைக்குப் பொருத்தமுற முரசறைந்து ஒலி எழுப்புவார்கள் சிலர்.
"19.38-45.குரங்கருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு கருமுகக் கணக்களிப் போரும்
தெய்வப் பிரமம் செய்கு வோரும்
கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரும்
யாழின் இளிகுரல் சமம்கொள் வோரும்
வேள்வியின் அழகியல் விளம்பு வோரும்
கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப
ஊழுற முரசின் ஒலிசெய் வோரும்."

அடுத்ததாக திருமுருகாற்றுப்படையில் #தெய்வானை👇👇👇
"உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்"
இங்கு "கற்பின் வாணுதற் கணவன்" (கற்பு மணம்) என்பது ஏன் வள்ளியை குறிக்காது என்பது சிலரின் வாதம். அதாவது
கற்பு மணம், களவு மணம் என்ற இரு வகையான மணங்களைப் பற்றி தொல்காப்பியரும் மற்ற சங்க நூல்களும் பேசுகின்றன. அவ்வகையில் தெய்வயானையை மணந்தது கற்பு மணம் என்றும் வள்ளியை மணந்தது களவு மணம் என்றும் திருமுருகாற்றுப்படை தெளிவாக விளக்குகிறது.....!
"தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்"
அதாவது இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன் என்றும்,
"மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து"
மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து என்றும்,
"ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"
இங்கு ஆறுமுகங்களிலே #ஒரு_முகம் வள்ளியோடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி அடுத்த வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்👇
"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட" எனச் சொல்லி
ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய
எனவும் உடன் வருகிறது......!
இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.....!
அடுத்ததாக👇
"மங்கையர் கணவ"
என்ற வரிகளின் மூலம் தெய்வயானையார்க்கும், வள்ளி தேவிக்கும் கணவனே!
என்னும் பொருள்படவும் பாடுகிறார்......!
ஆனால் திருமுருகாற்றுப்படைக்கும் முன்னதான #பரிபாடலில் தெய்வானை பற்றிய குறிப்புகள் அதிகமாகவே வருகிறது. விரும்புவோர் இந்த விலாசத்தை அணுகவும் 👇👇👇
இடைச்செருகல் என்றும் கட்டுக்கதை என்றும் பிதற்றுவோர் பிதற்றட்டும் நடுநிலைகளாவது உண்மை நிலையை உணர வேண்டும்.அதோடு
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவிடைக்கழி, கந்தன்குடி, திருப்போரூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள முருகனோடு தெய்வானை தேவியின் அருளும் பெற்று செல்ல வேண்டும் என்பது எனது எண்ணமாகும்.....!

ஸம்ஸ்க்ருதப் புராணங்களில் குறிப்பிடப்படும் #ஸ்கந்தன்/#கார்த்திகேயன் வேறு தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் #முருகன் வேறு என்று சிலர் கூறுகின்றனர்...
அதற்குச் சான்றாய் சங்கத்தமிழ் இலக்கியத்தில் முருகன் குறிஞ்சித் தெய்வமாதலால் வள்ளி எனும் குறமகள் மட்டுமே முருகன் மனைவி, #தெய்வானை எனும் இந்திரன் மகளை முருகன் மனைவி என்று பார்ப்பனர்கள் பிற்காலத்தில் இட்டுக்கட்டு எழுதிவிட்டனர் என்றெல்லாம் உளறி வருகின்றனர்...
இதற்கு எவ்வித சான்றும் இல்லை என்பதாகும்!
#தொல்காப்பியத்தின் படி #இந்திரன் எனும் வேந்தன் மருத நிலத் தெய்வம் ஆவார்! இவரது மகளே தெய்வானை ஆவார்!
"இருநிலம் தூங்காமை வடவலன் நிவந்தோங்கி...
அருள்நிலை உயர்தெய்வத் தணங்குசால் தலைகாக்கும்..
உருமுச்சூழ் சேட்சிமை உயர்ந்தவர் உடம்பட..
எரிமலர்த் தாமரை யிறைவீழ்ந்த பெர்வாரி..
விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பர்த்..
தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி..
மணிமிடற் றண்ணர்க்கு மதியாரற் பிறந்தோர்! நீ..
மையிருநூற் றிமையுண்கண் மான்மறிந்தோள் மணந்த ஞான்று..
#ஐயிருநூறு - ஐந்து +இருநூறு அதாவது 5×200=1000...நயனம் - கண்கள்!
இந்திரன் ஆயிரம் கண்களை உடையவராவார்!
அவரது மகள் தெய்வானை! என்று பரிபாடல் இதை உறுதிசெய்கின்றது!
மேலும்... அதே #பரிபாடலில்...
"தார்தார்;பிணங்குவார்; கண்ணியோச்சித் தடுமாறுவார்( 45ஆவது வரி)....
(45 முதல் 55 வரையிலான பாடல் வரிகள் இவ்வாறு இருதரப்பு தோழிகளும் சண்டையிட்டதை விளக்குகிறது.)
__இதில் #தோழிகள் என்பது #வள்ளி மற்றும் #தெய்வானையின் பணிப்பெண்கள்___
மேலும்...
"வாள்மிகு வயமொய்ம்பின்..
வரையகலத்தவனை #வானவன்மகள்..
மாணே ழில் மலருண்கண்..
மடமொழியவர் உடன்சுற்றிக்..
கடிசுனையுள் குளித்தாடுநரும்..
அறையணிந்த அருள்சுனையாள்.
நறவுண்வணடாய் நரம்புளர்நரும்..
சிகைமயிலாய்த் தொகைவிரித்தாடுநரும்..
கோகுலமாய் கூவுநரும்..
ஆகுலம் ஆகுநரும்..
குறிஞ்சி குன்றவர் மறங்கெழு வள்ளிதமர்..
வித்தகத் தும்பை விளைத்தலான்; வென்வேலாற்கு..
ஒத்தன்று தன்பரங் குன்று".
(69ஆவது வரிகள் வரை)




இவ்வாறு வள்ளி வெற்றி பெற்றதையும் #வானவன்மகளாகிய #தேவானை துன்புற்றதையும் விளக்குகிறது‌....
ஆகவே புராணங்களில் உள்ள கருத்தே சங்க இலக்கியங்கள் ப்ரதிபலிக்கின்றனவே அன்றி இரண்டும் முரண்பட்டவை அல்ல என்று தெளிவாகின்றது!

வள்ளிதேவியோடு திருக்கயிலையில் அம்மையப்பரிடம் ஆசி பெறுதல் (கந்தபுராண நுட்பங்கள்):
*
திருப்பரங்குன்றத்தில் நடந்தேறிய தெய்வயானை அம்மை திருமணத்திற்குப் பின்னர் தேவலோகம் சென்று இந்திரனுக்கு முடிசூட்டுவித்துப் பின் அங்கிருந்து திருக்கயிலை சென்று சிவசக்தியரிடம் ஆசி பெற்று இறுதியாய்க் கந்தமலைக்கு எழுந்தருளிச் செல்வதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார்.
*
மற்றொருபுறம் வள்ளி மலையில் நடந்தேறிய திருமண நிகழ்விற்குப் பின்னரோ, சிறிது காலம் திருத்தணியில் எழுந்தருளியிருந்து அதன் பின்னர் வள்ளி தேவியோடு நேராக கந்தமலைக்கு எழுந்தருளிச் சென்று விடுவதாகவே கச்சியப்ப சிவாச்சாரியார் விவரிக்கின்றார்.
*
எனினும் வள்ளிதேவியுடன் கந்தப் பெருமான் அம்மையப்பரிடம் ஆசி பெறும் திருக்காட்சியையும் அடியவர்களோடு சேர்ந்து தரிசித்து இன்புறவே இத்திருக்காட்சி உருவாக்கப் பெற்றுள்ளது (ஓம் சரவண பவ)!!!

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...