Tuesday, June 7, 2022

அரசு பள்ளிகளில் LKG - UKG வகுப்புகள் மூடல்?

LKG UKG யை ஒழித்தால் தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும் அப்படியே பெற்றோர்களும் விட்டு விடுவார்கள்.
https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-school-education-department-explains-on-lkg-ukg-classes/articleshow/92059693.cms
அரசு பள்ளிகளில் LKG - UKG வகுப்புகள் மூடல்? - தமிழக அரசு விளக்கம்!
 | Samayam TamilUpdated: 7 Jun 2022,

LKG, UKG Classes: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கில வழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், அதிமுக ஆட்சியின் போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்கப்பட்டன.



இதற்காக 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது
இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படாது என, பள்ளிக் கல்வித் துறை தெரிவித்ததாக ஒரு தகவல் பரவியது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தத் தகவலுக்கு பள்ளிக் கல்வித் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுப் பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், 2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்பட்டு வரும் வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தனர்.

 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...