Monday, June 6, 2022

ஈரோடு 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கருமுட்டை விற்ற சுமையா சையது அலி

16 வயது மகளின் கருமுட்டை விற்பனை.. கள்ளக்காதல் ஜோடி அட்டூழியம்.. ரவுண்டுகட்டும் போலீஸ்.. வெளியான பகீர் பின்னனி

ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எட்டுமுறை கருவுறச் செய்து கருமுட்டைகளை விற்ற சையது அலி மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுமையா என்ற இந்திராணி கைது

16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக  காவல்துறை உயரதிகாரிகள் தனியார் மருத்துவமனைகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் கேரள மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேபோல் இன்னும் பல மாவட்டங்களில் சிறுமிகள் கருமுட்டை விற்பனை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டி இருக்கலாம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதாரத்தை மையமாக கொண்ட இவ் உலகத்தில் அனைத்துமே வணிக மயமாக்கப்பட்டு வருகிறது. தேவைகள் அதிகரிக்கும் பொருட்கள் சந்தை படுத்தப்படுகிறது, குச்சி மிட்டாய் முதல் குழந்தைகள் வரை இப்போது வணிக மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில்  இதுநாள் வரை கள்ளச் சந்தையில் விற்கப்பட்டு வந்த இளம் பெண்களின் கருமுட்டை வியாபாரம் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் களமிறங்கிய போலீஸார் அடுத்தடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி வருவதுடன், இதில் தொடர்புடைய பலரையும் கைது செய்து வருகின்றனர். இந்த விவகாரம் கேரளா ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கும் நீள்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண் தனது  மகளுக்கு 3 வயது இருக்கும் போதே கணவனை பிரிந்து தனியாக வாழத் தொடங்கினார். அப்போது அந்தப் பெண்ணுக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பெயிண்டர் சையது அலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர், ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி குடித்தனம் செய்ய ஆரம்பித்தனர். சையது அலி குடிப்பழக்கம் உள்ளவர், இந்நிலையில்தான் குடும்பச் செலவுக்காக கள்ளக் காதலி சுமையா ஏஜெண்ட் உதவியுடன் தனது கருமுட்டையை மருத்துவ  மனைகளில் விறுபனை செய்து வந்தார். அதை வைத்து கள்ளக் கதல் ஜோடி ஜாலியாக வாழ்ந்து வந்தது.  

இந்நிலையில்தான் கள்ளக் காதலியின் 12 வயது மகள் பூப்படைந்தார், அப்போது அந்த சிறுமியின் கரு முட்டைகளையும் விற்க சையது அலிக்கு யோசனை உதித்தது, ஏற்கனவே அந்த சிறுமியை இளம் வயதில் இருந்தே சையது அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த சிறுமியை வலுக் கட்டாயமாக உடலுறவு கொள்ள ஆரம்பித்தார், தாயின் உதவியுடன் வளர்ப்பு தந்தையால் சிறுமி சீரழிக்கப்பட்டு வந்தார். சிறுமியை அடிக்கடி பாலியல் வல்லுறவு செய்து அதன்மூலம்  தனியார் மருத்துவமனைகளுக்கு இச்சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். அதில் அவர்களுக்கு நிறைய பணம் கிடைத்தது கள்ளக்காதல் ஜோடி அதை வைத்து குடித்து கும்மாளமடித்து வந்தது.

இதுவரை 8 முறை  அந்த சிறுமியின் கருமுட்டைகள் எடுத்து விற்க்கப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வளர்ப்பு தந்தை சையது அலியின் டார்ச்சர் தாங்க முடியாமல் அந்த இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறினார். தன்னுடைய சித்தப்பாவிடம் நடந்ததை எல்லாம் கூறி அழுதார். பதறிப்போன குடும்பத்தினர் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் தாய் சுமையா சையது அலி மற்றும் புரோக்கர் மாலதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கருமுட்டை விற்கப்பட கூடாது என சட்டம் இருந்து வரும் நிலையில் 16 வயது சிறுமிக்கு 20 வயது என போலி ஆவணங்கள் தயாரிந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

ஒரு முறை கருமுட்டை விற்கப்பட்டால் அதில் 20 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு கிடைத்து வந்தது 5 ஆயிரம் ரூபாயை புரோக்கர் மாலதிக்கு கொடுத்து வந்துள்ளனர் இந்நிலையில் கருமுட்டை விற்பனைக்கு 20 வயது என போலி ஆவணம்  தயாரித்துக் கொடுத்த ஜான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீசார் இரண்டு மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மாவட்ட குழந்தைகள் நல  காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கருமுட்டை விற்பனைக்கு சிறுமிகள் ஆளாக்கப்பட்டிருக்கலாம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது, முதற்கட்டமாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள இரண்டு தனியார் மருத்துமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர், மேலும் கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. விரைவில் வெளி மாநிலங்களுக்கும் சென்று அங்கு விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.  

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...