Monday, June 6, 2022

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு- இமாம்.வலியுல்லா கான் குற்றவாளி மரணதண்டனை

 20 பேர் கொல்லப்பட்ட வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கு- இமாம்.வலியுல்லா கான் குற்றவாளி  மரண தண்டனை 



வாரணாசியில் 2008 ஆம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தீவிரவாதி வலியுல்லா குற்றவாளி என நீதிபதி ஜிதேந்திர குமார் சின்ஹா நேற்று (ஜூன் 4) தீர்ப்பளித்தார்.

யாபாத் (உத்தரபிரதேசம்): வாரணாசியில் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் குற்றவாளி தீவிரவாதி வலியுல்லா என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நிகழ்ந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, வலியுல்லாவை இரண்டு வழக்குகளில் குற்றவாளி என்று காசியாபாத் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. தண்டனை குறித்த விவரம் நாளை (ஜூன் 6) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வாரணாசியில் மார்ச் 7, 2006 அன்று சங்கட் மோகன் கோவில் மற்றும் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ஜிதேந்திர குமார் சின்ஹா கொலை, கொலை முயற்சி மற்றும் உடல் உறுப்புகளை சிதைத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் வலியுல்லா குற்றவாளி என நிரூபணமானது.

இது குறித்து மாவட்ட அரசு வழக்கறிஞர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒரு வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். "ஜூன் 6 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தண்டனை அறிவிக்கப்படும்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார். 2006ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி, லங்கா காவல் நிலையத்தில் உள்ள சங்கட் மோச்சக் கோயிலுக்குள் மாலை 6.15 மணிக்கு முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

15 நிமிடங்களுக்குப் பிறகு, வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு ஓய்வு அறைக்கு வெளியே வெடிகுண்டு வெடித்தது. அதே நாளில், தஷ்மாவேத் காவல் நிலையத்தில் ரயில்வே கிராசிங்கின் தண்டவாளத்தின் அருகே குக்கர் வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள வழக்கறிஞர்கள் வழக்கை வாதாட மறுத்துவிட்டனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது. மூன்று வழக்குகளிலும் 121 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏப்ரல் 2006 இல், குண்டுவெடிப்புகளை விசாரித்து வந்த சிறப்புப் பணிக்குழு, அவர் வங்காளதேசத்தில் உள்ள ஹர்கத்-உல்-ஜெஹாத் அல் இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் கூறியது. இதன் பின்னர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது

https://www.opindia.com/2022/03/the-uncanny-symmetry-between-the-2006-varanasi-bomb-blasts-and-the-2020-delhi-anti-hindu-riots/

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/terrorist-waliullah-khan-held-guilty-in-two-cases-of-2008-serial-bomb-blasts-of-varanasi/tamil-nadu20220605143350685685856

No comments:

Post a Comment