Monday, June 13, 2022

ஜாதி ஆணவக் கொலை- ஈவெரா மண்ணில்

கும்பகோணத்தில் ஆணவக் கொலை? திருமணமான 5ம் நாளில் விருந்துக்கு வீட்டுக்கு அழைத்து காதல் தம்பதி வெட்டி படுகொலை.!

 கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து 5ம் நாளில் தம்பதியை விருந்துக்கு அழைத்து, பெண்ணின் அண்ணனும், முன்னாள் காதலனும் சேர்ந்து வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சரண்யா 
எஸ்சி பட்டியல் சமூகம்,
 மோகன்  நாயக்கர் சமூகம் என்பதை தமிழ் செய்தியில் இல்லை

https://tamil.asianetnews.com/crime/honor-killing-in-kumbakonam-newlywed-couple-murdered-on-5th-wedding-day-rdg182

                 


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதி விளந்தகண்டம் அய்யா காலனியை சேர்ந்தவர் சேகர். கொத்தனார். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 3 மகன்களும், சரண்யா (25) என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் சரண்யா, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அப்போது, மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. ஆனால், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், வேறு வழியில்லாமல் கடந்த 5 நாட்களுக்கு முன் சென்னையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல், தன் வீட்டிற்கு விருந்துக்கு வரும்படி அவர்களை அழைத்துள்ளார். அதை ஏற்று சரண்யா அவரது கணவருடன் வந்துள்ளார்.  

அப்போது, வீட்டிற்கு அருகிலேயே மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக்திவேலும், அவரது  மைத்துனர் ரஞ்சித்தும் சேர்ந்து காதல் தம்பதியை சரமாரி வெட்டியுள்ளனர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.  இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஆணவக் கொலையாக என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

No comments:

Post a Comment

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் புதுடில்லி, நவ.8- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும்...