Saturday, June 4, 2022

நீட் தேர்வு , கியூட் தேர்வு அவசியம் தேவை- மருத்துவர் ரவீந்திரநாத்

   Ravindranath GR                                               பாடத்திட்டங்கள்,மனம்சார்ந்து மதிப்பெண்கள் வழங்கும் முறைகள் உள்ள நிலையில் , கடும் போட்டி உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு  மாணவர் சேர்க்கை நடத்திட நுழைவுத் தேர்வு தவிர்க்க முடியாததாகிறது.

எனவே, நுழைவுத் தேர்வை அனைத்து மாநில மொழிகளிலும் நடத்துவதோடு, நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதில் பின்னடைவை சந்திக்கும் மாணவர்களுக்கு ( மாநில அரசுகளின் ,அரசுப்பள்ளி மாணவர்களுக்கு)  தனி உள் ஒதுக்கீட்டையும் நடைமுறை படுத்துவதே, இன்றைய நிலைக்கு உகந்த தீர்வாக அமையும்.

Entrance + Inner reservation for state govts' school students என்பதே இன்றைய நிலைக்கு உகந்த தீர்வு.

இதன் மூலமே ஏராளமான ஏழை எளிய மாணவர்கள்,முதல் தலைமுறை மாணவர்கள், தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி இடங்களிலும் சேரமுடியும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய - மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.

மாநில அரசுகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வர்க்க ரீதியாவும்,சாதி ரீதியாவும் அடித்தட்டு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

இவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக அனைத்து மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும், மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்கிட வேண்டும்.

இதை விடுத்து, நீட்டை ரத்து செய், கியூட்டை ரத்து செய், IIT ,IIM போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய் என்பது  இன்றைய நிலையில் சரியல்ல.அது பல்வேறு காரணங்களால் சாத்தியமும் அல்ல. இன்றைய நிலையில் எது சாத்தியமோ அதை சாத்தியமாக்குவதே சிறந்தது.

இடதுசாரி அமைப்புகளாவது, கல்வி பிரச்சனையில் சாதி,வர்க்கம் இரண்டையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

நுழைவுத் தேர்வுகள் மட்டுமே பிரச்சனை என்ற மேம்போக்கான பார்வையிலிருந்து விடுபட வேண்டும்.

நுழைவுத் தேர்வுகள்  ஏழை எளிய மாணவர்களுக்கு பிரச்சனையாக இருப்பதற்கே காரணம் நுழைவுத் தேர்வல்ல,மாறாக,  நுழைவுத்தேர்விற்கு  தயார் செய்து கொள்ளவதற்கு தடையாக உள்ள அவர்களின் சமூகப் பொருளாதார நிலமைகள் தான்  என்பதை உணர வேண்டும்.

இன்றைய முதலாளித்துவத்தில் நிலவும், சமூகப்பொருளாதார பிரச்சனைகளால் நுழைவுத் தேர்வில் பின்னடைவை சந்திக்கும் மாணவர்களுக்கு ,அதை ஈடுகட்ட தனி உள் ஒதுக்கீடு வழங்குவதுதான் இன்றைய நிலையில் சரியான தீர்வாக அமையும்.

இதை தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளிலும்,இதர தொழிற் படிப்புகளிலும் வழங்கப்படும் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு உறுதி செய்துள்ளது. 

அவர்களின் கல்வி,விடுதி,கவுன்சிலிங் கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்றது ,அவர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பை,பயனை வழங்கியுள்ளது என்பதையும் உணர வேண்டும்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...