கிறித்துவர்களின் சமசுகிருத மோகம்
ரயிலில் பயணப்பட்டு வரும் பொழுது என் அருகில் அமர்ந்த ஒரு கிறித்துவர் பேச ஆரம்பித்தார், சாருஹாசன் நடித்த ஒளியைத்தேடி என்ற படத்தை பாருங்கள் அதில் பல உண்மைகள் உள்ளது, அதில் சொல்லப்படுவது என்னவெனில் சமசுகிருத வேதத்தில் கேள்வி உள்ளதாகவும் அதற்கான விடை விவிலியத்தில் இருப்பதாக கூறப்படுகிறது என்றார்
இந்த ஒளியைத்தேடி என்ற படத்தில் சாருஹாசன் பிறாமணராகவும் அவர் கிறித்துவ மதத்தை ஏற்றவராகவும் இருக்கும் நான் இதனை முன்பே பார்த்திருக்கிறேன் பார்த்த போது எழுந்த கேள்விகளை என்னோடு பயணித்தவருக்கும் இப்போது பயணிக்கும் நண்பர்களுக்கும் பகிர்கிறேன்.
ஒளியைத்தேடி என்ற படத்தில் சாருஹாசன் ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தத்தை மேற்கோள் காட்டி புருஷா என்கின்ற ஒருவரை பலி கொடுத்தார்கள் அதையே பைபிளிலும் ஆண்டவரின் பிள்ளையை பலி கொடுப்பார்கள் என்று இருக்கிறது அதுமட்டுமல்லாமல் ரிக் வேதத்திலிருந்தும் மற்றும் சில உபநிஷத்திலிருந்தும் மேற்கோள் காட்டி அது விவிலியத்தில் இன்னன்ன வசனங்களில் உள்ளது என்று குறிப்பிட்டிருப்பார். அது மட்டுமில்லாமல் வேதத்தில் கேள்விகள் உள்ளது விவிலியத்தில் பதில் உள்ளது என்றும் கூறியிருப்பார். சாருஹாசன் கூறிய அந்த புருஷா கதையானது வேறொன்றுமில்லை genesis என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய உலகம் தோன்றிய கதையாக விவரிக்க கூடிய ஒரு பாடல். இந்த புருஷ சூக்தத்தில்தான் முகத்திலிருந்து பிறாமணன் வந்தான், தோள்களில் இருந்து சத்திரியன் வந்தான், வயிற்றிலிருந்து வைசியன் வந்தான், காலிலிருந்து சூத்திரன் வந்தான் என்ற வர்ணாஸ்ரம தர்மத்தின் அடித்தளமான நான்கு வர்ணம் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த படத்தில் உள்ள சமசுகிருத மொழி வார்த்தைகளுக்கு மொழிப்பெயர்த்தது சரியா இல்லையா என்பதனை ஆராய்ந்தார்களா??
இது மட்டுமல்ல கிறித்துவர்கள் மாற்று மத நூல்கள் படிக்கக்கூடாது என்று கட்டளை இட்டுவிட்டு பாதிரியார்கள் மாற்று மத நூல்களை படித்து தங்களுக்கு ஏற்றார்போல் உள்ள கருத்துக்களை எடுத்து அந்தந்த மதத்தினரை வலை விரிக்கின்றனர். குறிப்பாக
- திருக்குறளையும் திருவள்ளுவரையும் தன்னகப்படுத்தி எம்.கிறிஸ்டோபர் என்பவர் ”திருக்குறள் அடிப்படை கிறிஸ்துவம்” என்ற மூன்று பாகம் கொண்ட புத்தகம் வெளியிட்டு அதில் இந்தியாவிற்கு தோமையர் (St Thomas) வந்திருந்த போது திருவள்ளுவருக்கு தோமையர் கூறியதின் அடிப்படையில்தான் 1330 குறள்கள் எழுதப்பட்டதாக உள்ளது. https://www.youtube.com/watch?v=KPrzi9EjtDc
- அருட்பா அருளிய வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் கூறிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயேசு கிறித்துவை சொல்லுகிறது என்றும் ஒரு ஆராய்ச்சியும் வெளிவந்தது
அதே போன்று கீழ்கண்ட கேள்விகளுக்கு ஆம் ஏற்போம் என்று பதிலளிப்பார்களா?
- சாருஹாசன் கூறுவது போன்றும் என்னோடு பயணித்த கிறித்துவர் போன்றும் அவரை போன்று உள்ள ஏனையோரும் சமஸ்கிருத வேதத்தில் உள்ள ரிக் வேதத்தை ஏற்பார்களா??
- ரிக் வேதத்தில் உள்ள கேள்விக்கு விவிலியத்தில் பதில் உள்ளது என்று இனியும் சொல்வார்களா??
- இந்த புருஷ சூக்தத்தை கிறித்துவர்கள் ஏற்பார்களா??
- நால்வர்ணத்தை ஏற்று கிறித்துவர்களில் உள்ள சாதிகளை சட்டமாக்குவார்களா??
- ஒளியைத்தேடி என்ற படத்தில் அ- உ- ம என்ற ஓம் என்ற சொல்லின் அடிப்படையை அ- சிருஷ்டிகர்த்தா உ-இரட்சகர் ம- காக்கிறவர் அதுவே ஓம் என்றுள்ளது என்பதால் நாளை முதல் அனைத்து கிறித்துவ ஆலயங்களிலும் ஆமென் என்பதற்கு பதிலாக ஓம் என்று ஓங்காரத்தை ஒலிப்பார்களா??
- திருக்குறளை அன்றாட வழிபாட்டில் ஓதுவார்களா??
- விவிலியத்திற்கு அடுத்தபடியாக திருக்குறளை உலக மொழிகளில் மொழிப்பெயர்த்து அனைத்து கிறித்துவ தேவாலயங்களிலும் ஓதுவார்களா??
- அருட்பா அருளிய வள்ளல் பெருமானை போற்றி அவரின் பாடல்களை கிறித்துவ தேவாலயங்களில் பாடுவார்களா??
- வள்ளலாரையும் திருவள்ளுவரையும் கிறித்துவ மத புனிதர்களாக அறிவிப்பார்களா??
இவை எதுவும் செய்யாத போது ஏன் மாற்றுமத மக்களை ஏமாற்றி தன்னையும் ஏமாற்றி கொள்ள, மாற்று மத நூல்களையும் தத்துவங்களையும் மேற்கோள் காட்டி எங்கள் மதத்திற்கு வாருங்கள் என்று கூவிக் கூவி அழைக்க வேண்டும்.
சனாதன தர்மம் கூறும் ஹிந்து மதத்திலிருந்து சென்றவர்கள் பலர் தன் சாதி அடையாளத்தை விடாப்பிடியாக வைத்து கொண்டுள்ளனர் இதனை ஒழிக்க என்ன வழி என்று சிந்திக்க ஆளில்லை கிறித்துவ மத போதகர்களில் குறிப்பிடும் படியானவர் ஆர்ச் பிஷப் சின்னப்பா என்பவர் கிறித்துவத்தில் சாதிய கொடுமைகள் கூடாது என்று மிக வலிமையாக கிறிஸ்தவ சபைகளில் பேசி வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கிறித்துவ மதத்தில் இருப்பவர்களே மிகப்பெரிய எதிரியாகவும் தடையாகவும் உள்ளனர் இந்த பிஷப் சின்னப்பா அவர்கள் கடந்து அல்லது கடக்கும் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் அவர் மதத்தவர்களே காரணமாக உள்ளனர் http://www.asianews.it/news-en/Tamil-Nadu:-police-arrests-then-releases-bishops-and-faithful-marching-for-Christian-Dalit-rights-17808.html
No comments:
Post a Comment