தீர்த்தங்கள் ... புண்ணிய நதிகள் ..
‘ இறைவன் அட்ட மூர்த்தங்களில் உள்ளான் ‘ என்ற கோட்பாட்டைக் கொண்டது சித்தாந்த சைவம் . அந்த எட்டில் ஒன்று நீர் . அதனால் மக்கள் நாட்டில் உள்ள நதிகள் தோறும் சென்று நீரில் மூழ்கி வழிபட்டனர்.
‘ ஆறாம் திருமுறை‘
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும், ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும், நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும், கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும், அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.
பின்னரும் கம்பரும் “ புண்ணிய துறைகள் ஆடி ‘ என்றார்
நதிகளை வழிபடுவதே சனாதனம்: கவர்னர் ரவி
வேலூர்: நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும் எனக்கூறியுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள், இது தான் சனாதனம் எனவும் தெரிவித்துள்ளார்.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா இன்று நடைபெற்றது. இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது: நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். 2016ல் பிரதமர் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment