Saturday, June 11, 2022

ஹைதராபாத் மாணவி -வக்ஃப் வாரியக் காரில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு

 ஹைதராபாத் மாணவி - வக்ஃப் வாரியக் காரில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மே 28-ம் தேதி பார்ட்டி முடிந்து 17 வயது சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் 
ஹைதராபாத் நகரில் உள்ள, 'பப்' எனப்படும் மதுபான விடுதியில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு, 17 வயது மாணவி தன் தோழியுடன் கடந்த வாரம் சென்றார். அங்கு வந்த ஆறு மாணவர்களுடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவருமே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பவர்கள் என கூறப்படுகிறது. உடன் வந்த தோழி சீக்கிரம் புறப்பட்டதால், மாணவர்களுடன் சகஜமாக பேசி அந்த மாணவி நேரம் செலவிட்டு உள்ளார்.
பின், அவரை வீட்டில் இறக்கி விடுவதாக அந்த மாணவர்கள் கூறியதை அடுத்து, அவர்களுடன் 'பென்ஸ்' காரில் புறப்பட்டார். போகும் வழியில் பணக்காரர்கள் வசிக்கும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவியின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தை கண்ட அவரது தந்தை அது குறித்து விசாரித்தார். தன்னை சிலர் தாக்கியதாக சிறுமி கூறியதை அடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
பெண் போலீசார், மாணவியிடம் விசாரித்தபோது, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை தெரிவித்தார். இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரது பெயரை மட்டும் மாணவி குறிப்பிட்டார். கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த மாணவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒரு மாணவன் எம்.எல்.ஏ.,வின் மகன் என்றும் கூறப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் மாணவி கூறிய பெயரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

இதில் கைதான 18 வயது இளைஞன், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பிரமுகரும், வக்பு வாரிய தலைவருமான ஒருவரது பேரன் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து தெலுங்கானா பா.ஜ., தலைவரும், எம்.பி.,யுமான பண்டி சஞ்சய் குமார் கூறுகையில், ''இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் முக்கிய பிரமுகரின் மகனுக்கு இந்த வழக்கில் தொடர்புள்ளது,'' என்றார்.

வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்ப முடிவு செய்துள்ளது.இந்நிலையில், ஹைதரா பாத் மேற்கு மண்டல துணை கமிஷனர் ஜோயல் டேவிஸ் கூறியதாவது:பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...