கேரள முதல்வர் தங்கம் கடத்திலில் பிலிவர்ஸ் சர்ச் பிஷப்.யோகன்னன் மூலம் ஹவாலா செய்தனராம்.
எரிமேலி செருவல்லா என்ற எஸ்டேட்டை, ஹாரிசன் மலையாளம் நிறுவனத்திடம் வாங்கியதை சபரிமலை ஏர்போர்ட் கட்ட எடுப்பதாக 2016ல் சொன்னது இன்று வரை செய்யவில்லை. அந்த செருவல்லா எஸ்டேட் வருமானவரித்துறையால் கையகப் படுத்தப் பட்டுள்ளது
தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சி.பி.எம். மாநிலச் செயலாளர் உள்ளிட்டோர் பிலீவர்ஸ் சர்ச் மூலமாக அமெரிக்காவுக்கு ஃபண்டுகள் மூலம் கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாகவே பிலீவர்ஸ் சர்ச்சுக்கு வெளிநாட்டு கான்ட்ரிபியூஷன் ரெகுலேஷன் ஆக்ட் ரத்து செய்யப்பட்டது என்று ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் யு.ஏ.இ. தூதரகத்திற்கு பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் சுமார் 16 மாதங்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளி வந்திருக்கிறார் ஸ்வப்னா சுரேஷ். இவர் தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
கடந்த செவ்வாய் அன்று கொச்சியில் ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தங்கம் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் அவரது மனைவி கமலா, மகள் வீணா உள்ளிட்டோருக்கும் தொடர்ப்பு இருப்பதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ. தூதரகத்திலிருந்து பிரியாணி அண்டாவில் உலோகம் போன்ற பொருட்கள் முதலமைச்சர் க்ளிஃப் ஹவுஸுக்குச் சென்றுள்ளது என்றார். மேலும், முதலமைச்சர் பினராயி விஜயன் சார்பாக தன்னுடைய நண்பரான ஷாஜ் கிரண் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் ஷாஜ் கிரண் அதனை மறுத்துள்ளார்.
இந்நிலையில், ஷாஜ் கிரண் தன்னுடன் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார் ஸ்வப்னா சுரேஷ். மேலும், தனது வாக்கு மூலத்தால் ஒன்றாம் நபரான வி.ஐ.பி. கோபமாக இருக்கின்றார் என்று ஷாஜ் கிரணம் கூறினார். எனவே ஷாஜ் கிரண் கூறிய ஒன்றாம் நபர் வி.ஐ.பி. முதலமைச்சர் பினராயி விஜயன்தான் என சொல்லாமல் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சி.பி.எம். கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிலீவர்ஸ் சர்ச் மூலமாக அமெரிக்காவுக்கு ஃபண்டுகளை கொண்டு சேர்த்துள்ளனர். இதன் காரணமாகவே பிலீவர்ஸ் சர்ச் வெளிநாட்டு கான்ட்ரிபியூஷன் ரெகுலேசன் ஆக்ட் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிலீவர்ஸ் சர்ச்சுக்கு மிக மிக நெருக்கமானவர்தான் ஷாஜ் கிரண். எனக்கு சிவசங்கர் ஐ.ஏ.எஸ். மூலமாகத்தான் ஷாஜ் கிரண் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் பல கம்பெனிகளுக்கு இயக்குநராக உள்ளார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தேன். எனக்கு பின்னால் வேறு யாரும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
https://kathir.news/politics/swapna-suresh-again-complain-against-kerala-cm-in-gold-smuggling-case-1373558
https://kathir.news/politics/swapna-suresh-again-complain-against-kerala-cm-in-gold-smuggling-case-1373558
https://english.mathrubhumi.com/news/kerala/swapna-suresh-shaj-kiran-audio-clip-release-cm-pinarayi-vijayan-gold-smuggling-case-1.7594134
https://news7tamil.live/gold-smuggling-case-accused-makes-startling-claims-about-kerala-cm-pinarayi-vijayan.html
https://zeenews.india.com/tamil/india/swapna-suresh-gives-statement-that-pinarayi-vijayan-involves-in-gold-smuggling-396495
https://www.onmanorama.com/news/kerala/2020/10/16/kerala-high-court-scraps-go-to-acquire-cheruvally-estate-sabarimala-airport.html
தமிழகத்தின் மதிக்கப்படும் ஆராய்ச்சியாளர்.வேதம் வேதப்பிராகஷ் வலைப்பதிவுகள், மேலே தொட்டால் தனியாக விரியும்
No comments:
Post a Comment