Saturday, March 26, 2022

பாஸ்டர். இடிகுலா தம்பி 7 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லை கைது

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போதகர் கைது
கேரளாவில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காயங்குளம், கட்டானம் பகுதியை சேர்ந்தவர் இடிகுலா தம்பி (வயது 67). கிறிஸ்தவ போதகரான இடிகுலா தம்பியின் வீடு அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

அந்த சிறுமி வீடு முன்பு விளையாடுவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விளையாட சென்ற சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்தார். அவர் பெற்றோரிடம் கிறிஸ்தவ போதகர் இடிகுலா தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

இதை கேட்டுஅதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், காயங்குளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கிறிஸ்தவ போதகர் இடிகுலா தம்பியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா