Tuesday, March 22, 2022

இலங்கை பொருளாதார வீழ்ச்சி

 இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மலையங்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகும்.

உலகளாவிய கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது.
இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவையும் சந்திக்கத் துவங்கியது.
இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம். இது ஈழத்தமிழர்க்கும், சிங்களவர்களுக்கும் தான் நடந்ததே ஒழிய, இந்த யுத்தத்தில் கொழும்புவில் வாழும் பிற இலங்கை வம்சாவளி தமிழர்களோ, மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களோ பங்கேற்கவில்லை.


பின் 2008-09வாக்கில் உச்சமடைந்து 2009 மே 18ல் LTTE தலைவர் பிரபாகரன் போர்களத்தில் மரணமடைய, யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்ட்டது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் அகப்பட்டு, புலிகளின் அகங்காரத்தால் ஒன்னேமுக்கால் லட்சம் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டனர்.
போருக்கு பின் தமிழர்களை மீண்டும் வாழவைப்போம் என இலங்கை சொன்னது. இந்தியாவும் பலவகைகளில் உதவி வருகிறது. ஆனாலும் அந்த போர் நெருப்பின் வெம்மை இன்னும் தணிந்தபாடில்லை. இதெல்லாம் இருக்க, அப்போதெல்லாம் இந்தளவுக்கு சரியாத இலங்கை பொருளாதாரம் ஏன் திடீரென சரிந்தது? பின் ஏன் எழும்பி நிற்க முடியாமல் திணறுகிறது?
இரண்டே பெரிய காரணங்கள் தான்.
இலங்கையின் மிகப்பெரிய வருமானம் சுற்றுலா. இந்த வருமானத்தை மொத்தமாக காலி செய்தது இரண்டே காரணிகள் தான்
1. கொரனா: இது விதி. இது அனைத்து நாடுகளை தாக்கியிருந்தாலும், சுற்றுலா வருமானத்தை சார்ந்து இருந்த நாடுகள் பெரிதாக பாதிக்கப்பட்டன. இலங்கையும் இதில் பேரிடி வாங்கியது.
2. இஸ்லாமிய தீவிரவாதம் : 2019 ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு. மூன்று சர்ச்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் என ஆறு இடத்தில் மதவெறி தீவிரவாதிகள் குண்து வெடிக்க செய்தனர். அவர்களின் குறி சமுதாயத்தில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஆட்கள். 45 வெளிநாட்டவர் உட்பட 269 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டவர்கள் கை கால்களை இழந்தனர்.
இப்படியான குண்டு வெடிப்புக்கான சதி நடப்பதாக ஏற்கனவே இந்தியா பலமுறை எச்சரித்தும், மத தீவிரவாதமா? எங்கள் நாட்டிலா?டொப்புள் கொடியாக்கும். என இலங்கை அலட்சியப் படுத்தியது.
தொடர் குண்டுவெடிப்பும் நிகழந்து, 269 இறப்பு, 500+ உடல் ஊனம் என அந்த நாடே அதிர்ந்தது. விசாரணையில் அந்த சதியின் வலைப்பின்னல் இந்தியா,பாக்கிஸ்தான், ஆப்கன் வரை பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
----
தொடர்ந்து இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்...
நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.
டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320 என்றளவில் உள்ளது. அதனால் எல்லா பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.
இலங்கையில் பேப்பருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன..

இலங்கை பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. -Ramkumar TR

இலங்கை பொருளாதாரம் சரிய இயற்கை விவசாயமும் ஒரு காரணம். அது தனி கதை.

No comments:

Post a Comment

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்! https://www.aljazeera.com/economy/2024/4...