Thursday, March 31, 2022

தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி -பாலியல் துனபுறுத்தலை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

பாலியல் துன்புறுத்தலை கண்டித்து மாணவர்கள் போராட்டம் 

2022-04-01https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=754147

 தாம்பரம் :மாணவிகளை கல்லூரி பேராசிரியர்கள் துன்புறுத்துவதாகவும், பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் கூறி கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியர்,  பிஎச்டி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்திற்கு பிறகு, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, கல்லூரியில் உள்ள புகார்கள் குழு (ஐசிசி) விசாரணை மேற்கொண்டது. இதன்பின்னர், பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பல்வேறு  பிரச்னைகளையும் போராட்டத்தில் மாணவர்கள் முன் வைத்துள்ளனர். 

மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்குகளில், பேராசிரியர்கள் மீது எந்த வகையிலும் பாதிக்காமல் அவர்களை பாதுகாத்து கொள்வதாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். பேராசிரியர்கள் குற்றம் சாட்டப்பட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மாணவர் நலன் தொடர்பான அனைத்து குழுக்களும் இருக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும்  என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...