Wednesday, March 23, 2022

காவிரி ஆற்றில் உபரி நீர் சேமிக்க ராசிமணல் அணை தேவை -தேவப்ரியா தினமலரில்

 காவிரி ஆற்றில் உபரி நீர் சேமிக்க ராசிமணல் அணை தேவை -தேவப்ரியா தினமலரில் -https://youtu.be/3ha5DVoBpZg

காவிரி உபரி நீர் சேமிக்க இன்னோரு அணை தேவை, அது ராசிமணல் ஆக இருக்க வேண்டும்; ராசிமணல் அணையில் இருந்து பெங்களூரு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வீராணம் போலே குழாய் மூலம் நீர் தருவதையும் சேர்த்து 70 - 130 டிஎம்சி நீர் சேமிக்கலாம், 600 - 900 MW நீர் மின்சாரம் தயாரிக்க முடியும் எனப் பலகாலமாக கூறி பலரிடமும் சொல்லி வருகிறேன். நண்பர் மூத்த வழக்கறிஞர் திரு.யானை ராஜேந்திரன் மூலம் (அவர் செலவில்) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நடத்த, தமிழகம் மற்றும் கர்நாடக அரசை பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
https://youtu.be/3ha5DVoBpZg
//அதில், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ள பகுதி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதாலும், மகாதேஸ்வரா புலி சரணாலய இணைப்பு பகுதியிலும் இந்த திட்டம் அமையவுள்ளதால் மேகேதாது அணை திட்டத்துக்கு அனுமதி அனுமதி அளிக்கக்கூடாது. மேகதாது அணை கட்டுவதற்கான திட்டம் வகுத்துள்ள இடம் வனப்பகுதி என்பதால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படும், அதேபோல கட்டுமானத்துக்காக 12,345 ஏக்கர் காடுகளை அழிக்க வேண்டி வரும், 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.

கர்நாடகம் அணை கட்ட கூறும் காரணம் அவர்களுக்கு பெங்களூர் குடிநீர் தேவைக்காக ஐந்து டிஎம்சி தேவை என்பது 
அவர்கள் காட்டும் மேகதாது என்ற அந்த இடத்தில் 12 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் காடுகள் அழித்து சில கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றினால் மட்டுமே கட்ட இயலும். 



அதேபோல 7862.64 ஏக்கர் காவிரி பாதுகாக்கப்பட்ட வன உயிரி சரணலயமும், 4619.63 ஏக்கர் காப்புக்காடுகளும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். அப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடி மக்களின் கிராமங்கள், தினந்தோறும் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து போகும் சங்கமா என்ற சுற்றுலா தலமும் முழுமையாக நீரில் மூழ்கிவிடும்.
எனவே யானை வழித்தடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரி இருந்தார். மேலும், மேகதாது அணை திட்டத்தைக் கைவிட்டு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணல் அணை திட்டத்தை செயல்படுத்த கோரி மற்றொரு பொதுநல மனுவும் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்து இருந்தார்.

இவ்வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கண்வில்கர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சுற்றுசூழலுக்கும், வன உயிர்களுக்கும் கடும் பாதிப்பை விளைவிக்கும் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது. மேகதாது திட்டத்தைக் கைவிட்டு, தமிழ்நாட்டின் ராசிமணல் அணை திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு மீது மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.// https://tamil.samayam.com/.../articleshow/88342555.cms

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...