Tuesday, March 29, 2022

தமிழக பத்திரிக்கைகள் Fake செய்தி மூலம் முஸ்லிம் மதவெறி தூண்டுவது தான் பணியா?

 சன் நியூஸ் செய்த மானங்கெட்டத்தனம்- Krishna Dvaipayana

1. சன் நியூஸ் கீழ்கண்ட செய்தியை பதிந்திருக்கிறது. உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஷமத்தனமானது. ஹிஜாப் அணிந்த மாணவிகள் படத்தை போட்டு 20,000 மாணவர்கள் கர்நாடக SSLC பரிட்சைக்கு வரவில்லை என்று எழுதி அவர்கள் என்ன செய்தியை மக்களுக்கு கடத்த விரும்புகிறார்கள் ? ஹிஜாப் தடையினால் மாணவர்கள் (மாணவிகள்) எழுத வரவில்லை என்று தானே. இதை விட ஒரு போலி செய்தி இருக்க முடியுமா ?
2. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியும் இணைத்திருக்கிறேன். அதில் சென்ற வருடம் வெறும் 3769 பேர் தான் பரிட்சைக்கு வரவில்லை என்று இருக்கிறது. எழுதும் அனைவரும் பாஸ் செய்யப்படுவார்கள் என்பதால் யாரும் பரீட்சையை தவிர்க்கவில்லை. அந்த புள்ளிவிவரத்தை சன் நியூஸ் எப்படி விஷமத்தனமாக பயன்படுத்தியிருக்கிறது பாருங்கள். சென்ற வருடத்தை விட 457% அதிகமாம். அதற்கு காரணம் ஹிஜாப் என்று நுணுக்கமாக அர்த்தம் கொடுப்பது போல் இருக்கிறது சன் நியூஸ் செய்தி. அதே டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் 2021ஆம் வருட தேர்வுகளுக்கு முந்தைய தேர்வுகளுக்கு எழுத வராதவர்களின் எண்ணிக்கை போலவே தான் இந்த வருட வராதவர்களின் எண்ணிக்கையும் அமைந்திருக்கிறது என்று தேர்வாணையர் சொல்வதும் இருக்கிறது.
3. 2018 ஆம் வருட செய்தி ஒன்று newskarnataka வில் இருந்து கொடுத்திருக்கிறேன். 1524 மாணவர்கள் மைசூர் மாவட்டத்தில் மட்டும் பரீட்சை எழுதவில்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. கர்நாடகாவில் பெரிய மாவட்டமான பெங்களூர் உட்பட 31 மாவட்டங்கள் இருக்கிறது. 2018ஆம் வருட எண்ணிக்கையும் இந்த வருடம் பரீட்சை எழுதாதவர்கள் எண்ணிக்கை போலவே தான் இருந்திருக்கும்.
4. 2019 ஆம் வருட bangalore mirror செய்தி ஒன்று. அதில் 2019ஆம் வருடம் 26 ஆயிரம் பேர் எழுதவில்லை என்று சப்ஜக்ட் வாரியாக இருக்கிறது.
இந்த வருட கர்நாடகா SSLC தேர்வில் பரீட்சை எழுத வராதவர்கள் பற்றி ஏன் இப்படி திரித்து செய்தி வெளியிட வேண்டும்? இதெல்லாம் மத ரீதியாக மக்களை தூண்டுவதன் கீழ் வராதா ? ஒரு ஒப்பீட்டுக்கு 2019 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு SSLC பரீட்சை கணக்கை எடுப்போம்(அது தான் கோவிட் வருவதற்கு முன் நடந்த நார்மல் SSLC தேர்வு). 9,76,019 பதிவு செய்தார்கள். 9,37,859 பள்ளிகள் மூலம் பரீட்சை எழுதினார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. 2020 ஆம் வருடம் 34 ஆயிரம் மாணவர்கள் பரீட்சை எழுதவில்லை. ஒரு இயல்பான பரீட்சை எழுத வராதவர்கள் எண்ணிக்கையை வைத்து இப்படி எல்லாம் செய்வது அயோக்கியத்தனம்.
https://www.facebook.com/TamilTheHindu/posts/3351522361745118?__cft__[0]=AZUWL9kRRuwNRqqlWlptV4lGzwVdNP8qPaWEpECKO0loSYJuAPCvctV4-Epb0-0HuXBIxctmSqtIMKcziR5MEaTjxFo0bTPRC3t__EoWUEOnlPLKhoujfULbtmW43d2pUfYFV9p7tywgOBF4813qQEsga4nJUGCCkKyO5Vw-v7Ik3gL0A0d3N8L6yPEzqM1VROk&__tn__=%2CO%2CP-R











No comments:

Post a Comment