Friday, March 18, 2022

தமிழக மாநிலக் கடன் ஒரு டிரில்லியன் ஆக ஆகும் சாதனை திராவிடியாம்_மாடல்

தமிழக பட்ஜெட் பயனற்ற கணக்கு பிள்ளை அறிக்கை
தமிழக அரசின் நிதி நிலைமை அதல பாதாளத்தில் இருக்கிறது என்பதை நமக்குச் சொல்லும் புள்ளி விவரங்கள் பட்ஜெட் ஆவணங்களில் இருக்கின்றன.
மொத்தக் கடன்: 6.5 லட்சம் கோடி
பற்றாக்குறை: சுமார் 53,000 கோடி


கடன் திருப்பக் கொடுக்கும்பணிகள்: சுமார் 50,600 கோடி
பற்றாக்குறையை ஈடு செய்ய கடன் வாங்க வேண்டும். அடுத்தவருடம் வாங்கும் கடனில் 95 சதவீதத்திற்கு மேல் கடனைத் திரும்பக் கொடுக்கும் பணிகளில் செலவிட வேண்டும்.
மொத்தச் செலவில் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் ஓய்வூதியம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கட்டுமானத்திற்காக செலவிடுவதற்கு அரசிடம் வருவாய் அதிகம் இல்லை.
சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 1600 கோடிதான் அதிகம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதையும் செலவிடுவார்களா என்பது தெரியாது.
இதைத் தவிர உக்ரைன் போரினால் ஏற்பட்டிருக்கும், ஏற்படக் கூடிய பொருளாதாரச் சிக்கல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் அவர் தெளிவு படுத்தியிருக்கிறார்.
உ.பிஸ் : பட்ஜெட்ல அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்னு திட்டம் கொண்டு வந்து பெண்ணுரிமையை நிலைநாட்டி இருக்கோம் பார்த்தீங்களா...
மக்கள் : உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாசம் ஆயிரம்னா 3 வருச டிகிரிக்கு 36000 ரூபாய், 4 வருச படிப்புனா 48000 ரூபாய்...
நல்ல திட்டம் தான், ஆனா இதுக்காக ஏற்கனவே இருந்த எந்தெந்த மகளிர் திட்டங்களை எல்லாம் நிறுத்தி இருக்கீங்க...
உ.பிஸ் : அது வந்து, பட்டதாரி பெண் திருமண உதவி தொகை 50 ஆயிரம் ரூபாய் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம், மகளிர்க்கு இரு சக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம், பெண்களுக்கு விலையில்லா ஆடு வழங்கும் திட்டம்...
மக்கள் : சரி இப்போ கணக்கு போடுவோமா? திருமண உதவி தொகை 50 ஆயிரம், தங்கம் ஒரு பவுன் குறைந்தபட்சமா ஒரு 35 ஆயிரம், லேப்டாப் ஒரு 20 ஆயிரம், இரு சக்கர மானியம் ஒரு 25 ஆயிரம், இலவச ஆடு வழங்கும் திட்டத்துல ஒரு 18 ஆயிரம்...
ஆக மொத்தம் எவ்வளவு? உங்க தலைவர் மாதிரி தப்பு தப்பா கணக்கு போடாம கால்குலேட்டர்ல சரியா போட்டு சொல்லு...
உ.பிஸ் : 1 இலட்சத்து 48 ஆயிரம் வருது...
மக்கள் : இதுல இப்போ நீங்க தர 48 ஆயிரம் போக, மீதம் 1 இலட்சத்தை பெண்கள் கிட்ட இருந்து பிடிங்கி இருக்கீங்க...
இதுல அரசு மருத்துவமனயில் குழந்தை பெறும் பெண்களுக்கு தரும் பரிசு பெட்டகத்தை வேறு நிப்பாட்டீங்க, இத எல்லாம் எப்போ திருப்பி தர போறீங்க...
உ.பிஸ் : போங்கடா சங்கிகளா 😉

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...