Thursday, March 17, 2022

தோழர் பாரூக் இஸ்லாமிய மதவெறி படுகொலை இரங்கல் கூட்டம் =பத்திரிகையாளர் மன்றம் அனுமதி ரத்து

 இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்த பத்திரிகையாளர் மன்றம் இஸ்லாமிய மதவெறியர்கள் கொடுத்த நெருக்கடியால் அனுமதியை ரத்து செய்தது!


கோவையைச் சேர்ந்த கடவுள் மறுப்பாளர் தோழர் பாரூக்கை இஸ்லாமிய மதவெறியர்கள் படுகொலை செய்தனர்.

அவரின் நினைவுநாளைக் கொண்டாட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டம் நடத்துவதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனுமதி கொடுத்து இருந்தது.

ஆனால் இஸ்லாமிய மதவெறியர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். அதன் விளைவாக கூட்டம் நடத்துவதற்கு இடம் தந்த சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனுமதியை ரத்து செய்து விட்டது.

எனவே தங்கள் அலுவலகத்திலேயே மயிலாப்பூர்) சிறிய அளவில் கூட்டம் நடத்துகிறது திராவிடர் விடுதலை கழகம்.
இது குறித்து தோழர் ஓவியா அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் எல் ஆர் ஜெகதீசன் கண்டனப் பதிவு எழுதி உள்ளார்.
இஸ்லாமிய மதவெறியர்களை கண்டிக்க அஞ்சி நிற்கிறார் கொளத்தூர் மணி. அவர்கள் வெளியிட்டு உள்ள அழைப்பிதழைப் படியுங்கள். கொளத்தூர் மணி, விடுதல் ராஜேந்திரன் போன்ற கோழைகள் இஸ்லாமிய மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட தோழர் பாரூக் என்று எழுத அஞ்சிக் கொண்டு அடக்கி வாசிக்கின்றனர்.
இவர்களின் கோழைத்தனத்தை நன்கு புரிந்து வைத்துக் கொண்டுள்ள இஸ்லாமிய மத வெறியர்கள் கொளத்தூர் மணியை ஏறி மிதிக்கின்றனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...