Wednesday, March 23, 2022

திமுக அரச பயங்கரவாதம்- மருத்துவர் சுப்பையா சண்முகம் ஆராஜக கைது

திமுக ஆளுங்கட்சி அதிகார அத்துமீறலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பளார்ர்ர்ர்.......
ABVP தலைவர் டாக்டர் சுப்பையாவுக்கு இடைக்கால ஜாமின்!
விடுமுறை நாளில் கைது செய்யப்பட்ட, அரசு மருத்துவமனை டாக்டர் சுப்பையாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது.
• சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவராக சுப்பையா பணியாற்றினார்.
• முதல்வரின் இல்லம் அருகில், மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டனர்.
• அவர்களை சிறைக்கு சென்று டாக்டர் சுப்பையா சந்தித்ததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
• இதற்கிடையில், வீட்டின் முன் சிறுநீர் கழித்ததாக, 2020 ஜூலையில் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், பாலாஜி விஜயராகவன் என்பவர் அளித்த புகாரிலும், டாக்டர் சுப்பையா 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.
• இவ்வழக்கில் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா மனுத் தாக்கல் செய்தார்.
அவர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் வாதாடியதாவது:
• புகார் அளித்தவருக்கும், டாக்டர் சுப்பையாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு நீண்ட நாட்களாகி விட்டன.
• அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தம் காரணமாக, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
• 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
• விடுமுறை தினத்தன்று கைது செய்துள்ளனர்.
• 48 மணி நேரத்துக்கும் மேல் சிறையில் இருந்தால், நடத்தை விதியை பயன்படுத்தி, மீண்டும் சஸ்பெண்ட் செய்யும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.
• இவ்வாறு அவர் வாதாடினார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
• விடுமுறை நாட்களில் கைது செய்வது தொடர்பான, போலீசாரின் நடவடிக்கைக்கு, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
• சட்ட உதவி பெறுவதை தடுக்கும் நோக்கில், விடுமுறை நாளில் தேவையின்றி கைது நடவடிக்கையை மேற்கொள்வது, அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
• மனுதாரர் கைது செய்யப்பட்டதில் தவறு உள்ளது; அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன.
• துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில், இந்த தவறை செய்துள்ளனர்.
• மனுதாரருக்கு எதிராக துறை நடவடிக்கை எடுக்க, இந்த கைதை முகாந்திரமாக கொள்ள முடியாது.
• எனவே, இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. பதில் மனு தாக்கல் செய்ய, அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியுள்ளார்.
• ஒன்றரை ஆண்டுக்கு முன் அளித்த புகாரில், விடுமுறை நாளில் ஒருவரை கைது செய்ய, புலனாய்வு அதிகாரி எப்படி நடவடிக்கை எடுத்தார் என்பதை அறிய, இந்த நீதிமன்றமும் ஆர்வமுடன் உள்ளது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 22.03.2022 & Coutralanathan Ji

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...