Saturday, March 26, 2022

தொல்காப்பியத்தின் காலம்

தொல்காப்பியத்தின் காலம் 

தமிழ்மொழியின்  இலக்கண நூல் தொல்காப்பியம்  ஒரு முக்கியமான நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்றிற்கும் தமிழின் எழுத்துக்கள், சொல், பொருள் என மூணிறிற்கும் இலக்கணம் கூறுகிறது. இதன் காலம் என்ன?
 
உணர்வு ரீதியில் அதை காலத்தால் மிகவும் பின் தள்ளி கொள்வது பலர் வழக்கமாய் உள்ளது.  அதாவது பொமு 700 (பொதுக் காலத்திற்கு முன்) என சொல்வரும், அல்ல பொமு 300 எனச் சொல்வர் மிக அதிகம். தரவுகள் இதை சற்றும் நிருபிக்காதமையால் பன்னாட்டு பல்கலைக் கழக‌தமிழ் மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஏற்பதில்லை. 

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

நமக்கு இன்று வரை கிடைத்து உள்ள கல்வெட்டுகளின் தமிழ் மொழி/ சொல் பயன்படுத்திய முறை, இடம்பெற்ற எழுத்துக்கள் அனைத்தும் கொண்டு காண்பதே மெய்யறிவு
                                    
தொல்காப்பியம் தமிழின் மிக முக்கியமான இலக்கண நூல். இதன் மொழி நடை இது சங்க இலக்கியம் எனும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுக்கு பிற்பட்டது என மொழியியல் தெளிவாய் காட்டுகிறது.
பரிபாடல், கலித்தொகைக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் கூறுகிறார் எனில் அதன் காலத்திற்குப் பின் தான் வரும்.  இலக்கியம் தாய்; இலக்கணம் சேய், எனவே சங்க இலக்கியத்தின் பின்னர் தான் தொல்காப்பியம் என்பது.
"இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே 
 எள்ளின் றாகில்  எண்ணெயும் இன்றே 
எள்ளினுள் எண்ணெய் எடுப்பது  போல 
 இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்"   
பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியம் மொழிநிலை சங்கத் தொகை நூல்களுக்கு பல நூற்றாண்டு பிற்பட்டது என்பதை திரு.வையாபுரி பிள்ளை காட்டி உள்ளார், இவற்றை  லண்டன் பல்கலை கழக பகுதி நேர ஆசிரியரான திரு.சுவாமிநாதன்  தன் வலையில் என ஐந்து  பாகங்களாய் எழுதியுள்ளார். விளக்கி உள்ளார். 
அன்றைய  தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வு முறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல்  பொ.ஆ.8ம் - 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
P.T.சீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70
தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் 
பெரிடேல் கீத் : பொ.ஆ. 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் 
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு
எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு 
ஜப்பானின் ஒசாக்கா பன்னாட்டு புத்த மத பல்கலைக் கழக இந்தியவியல் பேராசிரியரும், திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த டகனொபுடகஹஷி   இன்றைய வடிவு 5- 6ம் நூற்றாண்டினது
 பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம்   பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு   சற்று முந்தையது
ஹாலந்து  லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென்   பொ.ஆ.9ம் நூற்றாண்டினது 
19ம்  ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.  
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்
உலகிலேயே எழுத்துக்க்கு இலக்கணம் வகுத்த முதல் மொழி நூல் தமிழின்   தொல்காப்பியம்      தமிழ் மொழியில் உயிர் எழுத்து 12 + மெய் எழுத்து 18 =30  எனும் தொல்காப்பியச் சூத்திரம்

எழுத்ததிகாரம் : தமிழில் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து  18 என மொத்தம் 30 எழுத்துக்கள், இவை இரண்டும் கலக்க உயிர்மெய், கல்வெட்டுகளில் 30 எழுத்திற்கும் தனி உருக்கள் அமைய வேண்டும், மேலும் மெய் எழுத்து என்பது புள்ளி வைத்தல் என்பதையும் கூறுவதால் நம்மிடம் உள்ள கல்வேடுகளோடு பொறுத்த வேண்டும்.       

 5ம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளில் உயிர் எழுத்து 8 தான் பின் 10 உள்ளது.   தமிழில் மொத்தம் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18 ஆகும். அதே போலவே மெய் எழுத்துக்களும், முழுமையாய் உரு பெற்றது பொஆ 5-7ம் நூற்றாண்டில் தான்.
தமிழ் மொழியில் குறில் 'எ'கரம் 'ஒ'கரம்  
தமிழின் 12 உயிர் எழுத்துக்களில் வடமொழியில் இல்லாத குறில் "எ" "ஒ" தமிழில் உண்டு, ஆனால் இவற்றிற்கு 17ம் நூற்றாண்டு வரை தனி எழுத்துரு இல்லை என்பதை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக இணையம் உறுதி செய்யும்.
வடமொழிக்கு குறில் "எ" "ஒ" இல்லை ,  தமிழில் உயிரில் இவ்வெழுத்துக்கள் மாறியது 18ம் நூற்றாண்டில் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பின் தான் என தெள்ளிவாகிறது.
பிராமி எழுத்துரு அடிப்படையில் வடமொழிக்கு உருவாக்கப் பட்டது, அதில் உயிர் எழுத்தில் குற்றியல் எகரம் ஒகரம் எழுத்துக்களுக்கு உரு கிடையாது, ஏன் எனில் வடமொழியில் இவை இல்லை. ஆனால் வர்க்க எழுத்துக்களுக்கு உரு உண்டு. பொஆ.8ம் நூற்றாண்டு தொல்காப்பிய சூத்திரமும் உறுதி செய்கிறது
தொல்காப்பிய இலக்கணம் 7ம் நூற்றாண்டு அல்லது அடுத்த நூற்றாண்டில் இயற்றப்பட்டதில் இலக்கணமும் புள்ளி மயங்கியல் என இதை உறுதி செய்கிறது 

மதுரைக் காமராஜர் கல்லூரி மொழியியல் பேராசிரியர் காமாட்சி கட்டுரை, பொ.கா. 4ம் நூற்றாண்டிற்கு முன் செல்ல முடியாது என்கிறது. 

பிராமியில் தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் "எ""ஒ" இல்லை.
இவற்றின் அடிப்படையில் மிகத் தெளிவாய் தொல்காப்பியம் எழுத்திலக்கணம் பொஆ 8ம் நூற்றாண்டிற்கு முன் எழுதப் பட்டு இருக்க இயலாது என்பது மிகத் தெளிவாகும்.

ஆய்த_எழுத்து ! 

வரலாற்றூ எழுத்தாளார்கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோ.ஜெய்பாலன் பதிவு
தொல்காப்பியர் எழுத்ததிகாரம் நூற்பா இரண்டில், சார்பு எழுத்துக்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்
"அவைதாம் குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்
ஆய்தம் என்ற‌ #முப்பால் #புள்ளியும் எழுத்து ஓர் அன்ன".
இதன் பொருள்: சார்பு எழுத்துக்கள் என்பன குறுகிய ஓசையை உடைய இகரம், குறுகிய ஓசையை உடைய உகரம் மற்றும் மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து என்பன. இவை எழுத்துக்களை ஒத்து அமைவன. ஆக, தொல்காப்பியர் காலத்தில் 'ஆய்த எழுத்து' இன்று போல மூன்று புள்ளிகளை உடையதாக இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.
தமிழ் பிராமி, வட்டெழுத்துக்களை ஆராய்ந்த போது, தமிழ் பிராமி எழுத்தில் ஃ என்ற எழுத்து கிடைக்கோடிட்டு, அதன் மேலும் கீழும் புள்ளிகள் இட்டு, இன்றைய 'வகுத்தல் குறியீடு' போல உள்ளது. வட்டெழுத்துக் காலத்திலும் அந்த கிடைக்கோடு சற்று நீளம் குறைந்து அதே வகுத்தல் குறி வடிவில்தான் உள்ளது.

தொல்காப்பியம் குறிப்பிடும் 'மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து' இரு எழுத்து வடிவங்களிலும் காணவில்லை.

கீழே காணும் படங்களில் இன்றைய ஃ எழுத்தாக காணப்படும் இடத்தில்தான் 'மூன்று புள்ளிகள் உள்ள அஃகன்னா' எழுத்து காணப்படுகிறது.
ஏன் தொல்காப்பியம் தமிழ் பிராமி எழுத்து ஃ எழுத்துக்காக காட்டும் வகுத்தல் குறி எழுத்து வடிவத்தைக் குறிப்பிடவில்லை?
அப்படியானால், தொல்காப்பியம் தமிழ்பிராமி வழக்கில் இருந்த சங்க காலமான கி.பி.5- ம் நூற்றாண்டுவரை எழுதப்படவில்லை.
தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் " ள, ற & ன" உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்

கால்டுவெல் ஆய்வுப்படி தமிழ் மெய் எழுத்துக்களில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத 'ழ்', 'ற்' &'ன்'  இறுதியில் வைக்கப்பட்டதே- தமிழ் எழுத்துக்கள் சம்ஸ்கிருதத்திற்காக உருவாக்கிய எழுத்து இலக்கண அடிப்படையில் அமைக்கப்பட்டது எனத் தெளிவாகக் கூறுவார் 

பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.

தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர் சு.இன்னாசி.

தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர்  என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.

திஸன்

 கீழடி பானை ஓட்டுக் கீறலில் இச்சொல்லில்  "ஸ" தமிழில் இல்லாத எழுத்து, "ன்" வடமொழியில் இல்லாத எழுத்து.  வடமொழிக்கு உருவான பிராமி எழுத்தை தமிழ் பெற்று தனக்கே உரிய எழுத்து சேர்க்கப்பட்டது உறுதி செய்யும் 
கீழடியில் கிடைத்த "திஸன்" என்ற பானைக் கீறல் மேலும் எளிமையாகப் புரிய வைக்கும் 

தமிழ் மொழியில் "ஸ" இல்லை, வடமொழியில் "ன" இல்லை. வடமொழிக்கு உரிய பிராமி எழுத்துருவை தமிழ் பெற்று மேலும் செம்மை செய்தது தமிழ் பிராமி தெளிவாகும்

சம்ஸ்கிருத மொழியில் உயிர் எழுத்துக்கள் 
சம்ஸ்கிருத மொழி -குற்றியல் எகரம் ஒகரம்   கிடையாது
சம்ஸ்கிருத மொழியில் உயிர் எழுத்துக்களில்  தமிழில் உள்ளது போல எ ஏ ஒ ஓ எனக் கிடையாது
 நேரடியாக ஏ மற்றும் ஓ மட்டுமே 
மெய் எழுத்து எனக் கொண்டால் "க்" 4 உச்சரிப்பிற்கு 4 எழுத்துரு உண்டு
 
 அது போல ச- ஜ இடையே 7 ஒலியில் உண்டு. இதில் ஜ மட்டுமே தனி எழுத்து கிரந்தம் மூலம் தமிழில் வருகிறது
இந்தியாவின் மிகவும் தொன்மையான பிராமி  கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுகள்.  அசோகர் புத்த மதம் இணைந்தவர் எனில் பாலி மொழியிலோ, அல்லது பிராகிருத மொழியிலோ எழுத்துரு உருவாக்கம் எனில்     இந்த இரண்டு பாலி/ பிராகிருத மொழிகளிலும் Sibilants "ச" 3 ஒலியன்கள் இல்லை, சம்ஸ்கிருதத்தில் மட்டுமே, அசோகர் வெவ்வேறு கல்வெட்டுகளிலும் மூன்று "ச" ஒலியனும் அமைந்துள்ளது 

No comments:

Post a Comment

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க., 1 PUBLISHED ON : ஏப் 03, 2021 12:00 AM   https://www.dinamalar.com/weekly/uratht...