Monday, March 28, 2022

காசிற்காக தமிழையும் மானத்தையும் விற்ற நெல்லை கண்ணன்


நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. குறள் 222: ஈகை.
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
 
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.   குறள் 183:புறங்கூறாமை.
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
   

ஒரு காலத்தில் நெல்லை கண்ணன் பேச்சை நிறைய கேட்டிருக்கிறேன். காமராஜர் காரில் போன கதைகளுக்கு சொந்தக்காரர் என்றாலும் கூட சுவாரசியமாக பேசக்கூடியவர், காமராஜருடன் நேரில் பழகும் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றவர் என்று - அவரே சொன்னதுதான் - நினைத்திருந்தேன்.



காமராஜருக்கு பின் அவரைப் போல இன்னொரு தன்னிகரில்லா தலைவரை இன்றுவரை தமிழகம் கண்டதில்லை என்பது என் நம்பிக்கை. காமராஜரை [நிஜமான] வரலாற்றுப் பக்கங்கள் மூலம் அறிந்தவர்கள் அனைவருமே ஒப்புக்கொள்ளும் கருத்துதான் அது. காமராஜருடன் நேரில் பழகும் சந்தர்ப்பம் வாய்ந்த நெல்லை கண்ணன் அவர்களுக்கு மற்ற எல்லாரையும் விட அது நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு இணைப்பில் உள்ள வீடியோவில் பேசிய அதே நெல்லை கண்ணன் தான் நேற்று நெல்லை புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் வைத்து “காமராஜரைப் போல் முழு நல்லவர் ஸ்டாலின் அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றும் சொல்லியிருக்கிறார்.
ஒன்று அவர் காமராஜருடன் செலவிட்ட பொழுதுகள் என்பது சீமான் பிரபாகரனுடன் செலவிட்ட பொழுதுகள் போல கற்பனைக் கதைகளாக இருக்க வேண்டும்
அல்லது மனசாட்சியை சுத்தமாக கொன்று புதைக்கும் அளவுக்கு அவர் வாழ்க்கையில் எதோ நெருக்கடி இருக்க வேண்டும்.
அல்லது அவரும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை இத்தனை நாள் நான்தான் அறியாமல் இருந்திருக்கிறேன்.


No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...