Monday, March 21, 2022

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோபுரத்தின் உச்சியில் இருந்த 3 கலசங்களை கொள்ளை மீட்பு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் 3 தங்க கலசம் திருட்டு....
 



விருத்தாசலம்: 
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் காசிக்கு இணையான கோவில் என கருதப்படுவதால் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதால் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று இரவு பூஜைகள் முடிந்து கோவில் கதவு சாத்தப்பட்டது.

நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் சுவர்ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் விருத்தாம்பிகை அம்மன் சன்னதிக்கு சென்ற மர்ம நபர்கள் கோபுரத்தின் உச்சியில் இருந்த 3 தங்க கலசங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை கோவிலுக்கு வந்த நிர்வாகிகள் தங்க கோபுர கலசங்கள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கோவிலில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்





 திருடுபோன விருத்தகிரீஸ்வரர் கோவில் கலசங்கள் மீட்பு… திடுக்கிடும் பின்னணி என்ன?
Govindaraji Rj | Samayam TamilUpdated: 5 Mar 2022, 7:34 am














கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தாம்பிகை சன்னதி கோபுரத்தில் இருந்து திருடப்பட்ட 3 தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களை போலீசார் மீட்டுள்ளனர். அதோடு கடத்தல் சம்பம் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன கோவில் கலசங்கள் மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் புகைப்படம்
ஹைலைட்ஸ்:
விருத்தகிரீஸ்வரர் கோவில் கலசங்கள் மீட்பு
விருத்தாச்சலம் பெரியார் நகரை சேர்ந்த ஒருவர் கைது
Free Games : சின்ன சின்ன விளையட்டு- ஆன்லைனில் லைவாக விளையாடுங்கள்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்து 28 நாட்கள் ஆன நிலையில் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்களை மார்ச் மாதம் 1-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.

சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் காவல் துணை கண்காணிப்பாளர் அங்கித்ஜெயின், உதவி ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.


இந்த குழுவினர் கோவில் வளாகத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விருத்தாச்சலம் நகரப் பகுதியிகளில் உள்ள தெருக்களில் இருந்த சிசிடிவிக்களை கொண்டு தீவிரமாக தேடி வந்தது. மேலும், அண்மையில் கோவிலுக்கு அடிக்கடி வந்த பக்தர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
புயல் சின்னம்; கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் கூண்டு ஏற்றம்!

இந்த நிலையில் விருத்தாம்பிகை சன்னதியில் இருந்து திருடப்பட்ட மூன்று கலசங்களை பறிமுதல் செய்த போலீசார், விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், அமுதம் தெருவில் பரமசிவம்(49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் இருந்து கலசங்கள் திருடுபோனதால் பக்தர்கள் கவலையடைந்த நிலையில், தற்போது கலசங்கள் மீட்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...