Saturday, March 26, 2022

தென்காசி விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது - 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..

தென்காசியில் 2-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது

https://tamil.abplive.com/crime/vck-councilor-arrested-for-physically-harassing-a-2nd-class-girl-in-tenkasi-45545
 பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியிடம் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி, தனியே அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தாக விசிக கவுன்சிலர் கைது.By: ரேவதி | Updated : 25 Mar 2022 
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜா - லதா தம்பதியினர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர்களின் மகள் குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமி பள்ளிக்கு சென்று  வீடு திரும்பி உள்ளார், அப்போது அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் 2-ஆம் வகுப்பு சிறுமியிடம் திண்பண்டம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியே அழைத்து சென்று உள்ளார், அப்போது தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியிடம் தவறுதலாக நடந்துள்ளதாக தெரிகிறது,.
பின்னர்  அச்சிறுமியிடம்  இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால்  உன்னை  கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கு அதிகமான வயிறு வலி ஏற்பட்டு உள்ளது, உடனடியாக சிறுமியின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர், அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமி பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது,
அதன்பின்னர் சிறுமியிடம் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் விசாரித்து உள்ளனர், அப்போது சிறுமி தின்பண்டம் வாங்கி தருவதாக ஒருவர் அழைத்து சென்று பின்னர் மிரட்டி அனுப்பியதாக நடந்த உண்மையை கூறியதாக தெரிகிறது,  இதனையறிந்த பெற்றோர் உடனடியாக குற்றாலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளனர். புகார் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வீராச்சாமி என்பவர் சிறுமியிடம் இக்குற்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட வீராச்சாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட வீராச்சாமி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாக இருப்பதோடு மட்டுமின்றி குணராமநல்லூர் பஞ்சாயத்தில் 15-ஆவது வார்டு உறுப்பினர் என்பதும் தெரிய வந்துள்ளது,
ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பிலும், ஒரு வார்டு உறுப்பினராகவும் இருந்து கொண்டு, 7 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...