Tuesday, March 29, 2022

ஆஸ்கார் விருது பெற்ற வில் ஸ்மித் மேடையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் நோயால் மொட்டையான மனைவியை கேலிக்காய்- அடித்தார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.  
சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை, 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே' திரைப்படத்திற்காக, நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் வென்றுள்ளார்.
நிகழ்ச்சியை நடத்திய கிறிஸ் ராக்ஸ்- வில் ஸ்மித் மனைவி ஜாடா பிங்கெட் மொட்டை தலை என்பதை வைத்து காமெடி செய்தது பொருக்காமல் மேடை ஏறி கன்னத்தில் பளார் என அடித்தார். இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. தன் செயல் தவறு என வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.
வில் ஸ்மித் இறை நம்பிக்கை இந்து பண்பாட்டை உணர்ந்து போற்றுபவர்

ஆஸ்கர் விருதுகள் - பட்டியல்:

சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்)

சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

சிறந்த திரைப்படம் - கோடா

சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக் )

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

சிறந்த படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (திரைப்படம் - டுன்)

சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (திரைப்படம் - வெஸ்ட் சைட் ஸ்டோரி)

சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா)

சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா )

சிறந்த திரைக்கதை - சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் - பில்ஃபெஸ்ட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜென்னி பீவன் (திரைப்படம் - க்ரூயெல்லா)

சிறந்த சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார்

சிறந்த ஆவணப்படம் - சம்மர் ஆஃப் சோல்

சிறந்த பின்னணி பாடல் - நோ டைம் டூ டை (பில்லி ஐலிஷ் மற்றும் ஃபினியஸ் ஒ'கனல்)

சிறந்த பின்னணி இசை - ஹன்ஸ் ஸிம்மர் (திரைப்படம் - டுன்)

சிறந்த ஒளிப்பதிவு - க்ரெக் ஃப்ராசர் (திரைப்படம் - டுன்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டுன்

சிறந்த சவுண்ட் - டுன்சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டுன்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி லாங் குட்பை

சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி விண்ட்ஷில்ட் வெப்பர்

சிறந்த ஆவண குறும்படம் - தி குயின் ஆஃப் பாஸ்கெட்பால்









No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...