Friday, March 18, 2022

ஜெமினி மேம்பாலம் முதல் ஓமந்தூரார் எஸ்டேட் வரை பல 100கோடி கான்டிராக்ட் பெற்ற ஈடிஏ புகாரி இயக்குனர் கைது

 மு.க.ஸ்டாலின் குடும்ப நண்பர். ஜெமினி மேம்பாலம் கான்டிராக்ட் முதல் ஓமந்தூரார் எஸ்டேட் வரை பல நூறு கோடி கான்டிராக்ட் பெற்றவர்

சென்னை: புகாரி நிறுவனங்கள் . ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் பி.எஸ்.அப்துல் ரகுமான். தொழில் அதிபர். அவருக்கு ஆரிப் புகாரி, அப்துல் காதர் புகாரி, அஷ்ரப் புகாரி, அகமது புகாரி என்று 4 மகன்களும், குர்ரத் ஜமீலா, மரியம் என 2 மகள்களும் உள்ளனர். அப்துல் ரகுமான் மறைவுக்குப் பிறகு அவரது 4 மகன்களும் அவரது நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். புகாரி குழுமங்களின் சார்பில், ஈடிஏ, அஸ்கான், ஸ்டார், ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்சன் அண்ட் இன்டஸ்ட்ரீஸ், புகாரியா குழுமம், அமான இன்வெஸ்மென்ட்,வெஸ்ட் ஆசியா மெரிடைம்,சேது இன்வெஸ்மென்ட்ஸ்,கிரசென்ட் பள்ளி கல்லூரிகள், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

உள்ளிட்ட பல்லாயிரம் கோடிகளில் இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அதில் 3வது மகன் அகமது புகாரி வெளிநாட்டில் படித்தவர். குடும்ப தொழில்களை கவனிப்பதோடு மின் சக்தி துறையில் கோஸ்டல் எனர்ஜன் என்ற நிறுவனத்தையும், நிலக்கரி தொழிலில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் கோல் அண்ட் ஆயில் என்ற சர்வதேச அளவிலான மிகப்பெரிய நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
https://en.wikipedia.org/wiki/B._S._Abdur_Rahman அதோடு, ரூ.7,600 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் முத்தியரா மின் நிலையத்தை உருவாக்கி மின் உற்பத்தி செய்கிறார். தமிழகத்திற்கு தேவைப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் 10 சதவீதத்தை இந்நிறுவனம் விநியோகம் செய்கிறது.
https://www.buhariholding.com/contact_us.php

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...