Friday, March 18, 2022

திமுக அரசின் மின்சாரத்துறை BGR energy ஊழல்கள்= திரு.அண்ணாமலை காணொலி

BGR energy எனும் திமுக ஷெல் கம்பெனி (ஷெல் கம்பெனி என்பவை மோசடி வேலைகளுக்காகவே தொடங்கப்படும்/வாங்கப்படும் நிறுவனங்கள்) குறித்து அல்டிமேட் அண்ணாமலை எச்சரித்த மூன்றே நாளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் வாங்குவதற்கு ஆள் இன்றி பங்குகளை விற்பதற்கு பலரும் முண்டியிட தொடங்கி விட்டனர். இதுதான் அண்ணாமலையின் வெயிட் !!
திமுக அரசின் மின்சாரத்துறை ஊழல்கள் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிய காணொளி அமைச்சர் சொல்வது பல இடங்களில் பொருந்தவில்லை, குழப்பமாக உள்ளது. முதலில் solvent இல்லை, bank guarantee தர முடியவில்லை என்றுதான் ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது. அதிமுக அரசு LOA கொடுத்ததல்ல பிரச்சனை, BGR னால் அதை செய்ய முடியாமல் ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது.
2021 ஏப்ரலில் அதிமுக அரசா தமிழகத்தில் இருந்தது? அதற்கும் மேல், நீதிமன்றம் வழியாக தன்னுடைய ஒப்பந்தத்தை மீண்டும் BGR வென்றெடுத்ததாக அமைச்சர் சொல்கிறார். அந்த தீர்ப்பை ஏன் பதிவிடவில்லை? அங்கே தமிழக அரசு வைத்த வாதம் என்ன? அந்த நிறுவனம் insolventனு தெரிந்து ரத்தான பிறகு மீண்டும் ₹5000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை கைப்பற்ற, அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே நடந்த சமரசம் என்ன?

அடுத்தது, கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனம். அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பே ₹500 கோடி வரவில்லை ஆனால் அது ₹5000 கோடி வேலையை எடுக்கிறது. எப்படி இவ்வளவு பெரிய வேலையை அதனால் தொடர்ந்து செய்ய முடியும்? BGR நிறுவனம் கொடுத்த Guarantee யை எல்லாம் உண்மையில் பொதுவெளிக்கு தர வேண்டும் போல. இதை நிச்சயம் அரசு விளக்க வேண்டும். 

"500 கோடி" கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய BGR, மீண்டும் பங்கமாக கலாய்த்த அண்ணாமலை !



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின் வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டார், அத்துடன் ஒப்பந்த நிறுவனங்களுக்கு நிலுவை தொகையை வழங்க  4% கமிஷன் பெற்றுக்கொண்டே மின்வாரியம் தரப்பு பணத்தை ரிலீஸ் செய்வதாக கூறி பணபரிமாற்ற விவரத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்த சூழலில் அண்ணாமலை வெளியிட்டது ஆதாரம் இல்லை எனவும், அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறினார் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கு பதில் அளித்த அண்ணாமலை ஆதாரத்தை கொடுத்துட்டோம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அங்கு உண்மையை சொல்கிறோம் என தெரிவித்தார்.

இந்த சூழலில் அண்ணாமலைக்கு BGR எனர்ச்சி நிறுவனம் தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதில் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் இல்லை என்றால் அண்ணாமலை மற்றும் செந்தில்குமார் என்ற ட்விட்டர் id இருவரும் 500 கோடி கொடுக்கவேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ள விதம்தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது, வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிறுவனத்திற்கு அண்ணாமலை கொடுத்த பதில் பின்வருமாறு :-  சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள்

நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்!அறிவாலயம் அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையை எதிர்க்கட்சிகள் ஆட்டை கொண்டு விமர்சனம் செய்த சூழலில் அதே ஆட்டை கொண்டு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.

மேலும் திமுக அமைச்சர்களை போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது அண்ணாமலை மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பே இல்லை  என்பது மட்டும் உறுதி என தெளிவாக தெரிகிறது. ஆமாம் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆனால் செந்தில்பாலாஜி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே ஏன்? 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா