Wednesday, March 23, 2022

முஸ்லிம் பயங்கரவாதிகள் மதுரைகோர்ட்டில் நீதிபதிக்கு மிரட்டல்

மதுரை பயங்கரவாதிகள்

 கோர்ட்டில் நீதிபதிக்கு மிரட்டல்    

கடந்த 2013ல் வேலுாரில் வெள்ளையப்பன்; சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ்; பரமக்குடியில் முருகன்; டாக்டர் அரவிந்த் ரெட்டி என ஹிந்து அமைப்பு மற்றும் பா.ஜ. நிர்வாகிகள் கொடூரமாக கொல்லப் பட்டனர்.'மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் என்ற பயங்கரவாதி தலைமையில் 'ஜிகாத் புனிதப் படை' செயல்படுகிறது. இதில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட பயங்கரவாதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஹிந்து அமைப்பு மற்றும் பா.ஜ. நிர்வாகிகளை குறி வைத்து கொலை செய்து வருவது' போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கொலை செய்த வழக்குகளின் விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி இளவழகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆஜர் படுத்தப் பட்டனர். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது அவர் 'வழக்கை நடத்த வழக்கறிஞரை நீங்கள் நியமிக்கா விட்டால் நீதிமன்றமே வழக்கறிஞரை பணியமர்த்தும். அடுத்த வாய்தாவில் சாட்சிகளை விசாரிக்க துவங்கி விடுவோம்' எனக் கூறினார்.

அதற்கு பிலால் மாலிக் 'எங்கள் அனுமதியை பெறாமல் விருப்பம் இல்லாமல் நீங்களே வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாமா; அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா. அப்படி இருந்தால் எங்களுக்கு எழுத்து வாயிலாக தெரியப்படுத்தவும்' என்றார். அவரிடம் 'உங்களுக்கு சட்டப்படி தெரிவிப்பேன்' என நீதிபதி கூறினார். தொடர்ந்து மூவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அப்போது திடீரென பக்ருதீன் 'எந்த போலீஸ்காரரும் எங்களை தொடக்கூடாது. நான் நீதிபதியிடம் பேச வேண்டும்' என மிரட்டினார். 'இந்த வழக்கை நடத்த மாட்டோம். நீங்கள் எங்களை துாக்கில் போடுவீர்கள்; இல்லையென்றால் சுட்டு கொலை செய்வீர்கள்; வேறு என்ன உங்களால் செய்ய முடியும்' என நீதிபதியிடம் மிரட்டும் தொனியில் சத்தமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதேபோல பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரும் 'இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை; இப்போதே சாகத் தயார்; உங்களால் முடிந்ததை பாருங்கள்' என பேசினார். அவர்களது நடவடிக்கையை போலீஸ்காரர் ஒருவர் 'வீடியோ' பதிவு செய்தார். அவரை பயங்கரவாதிகள் அருவருப்பான வார்த்தைகளை பேசி மிரட்டினர். பின் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பயங்கரவாதிகள் மூவரின் செயலும் அதிர்ச்சியை தரும்படி இருந்தது. 'இவர்கள் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்து மீண்டும் கைது செய்ய வேண்டும்' என அங்கிருந்த பொதுமக்கள் கூறினர்.

No comments:

Post a Comment

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...