சம்ஸ்கிருத மொழியில் உயிர் எழுத்துக்கள்
சம்ஸ்கிருத மொழி -குற்றியல் எகரம் ஒகரம் கிடையாது
சம்ஸ்கிருத மொழியில் உயிர் எழுத்துக்களில் தமிழில் உள்ளது போல எ ஏ ஒ ஓ எனக் கிடையாது நேரடியாக ஏ மற்றும் ஓ மட்டுமே
கால்டுவெல் ஆய்வுப்படி தமிழ் மெய் எழுத்துக்களில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத 'ழ்', 'ற்' &'ன்' இறுதியில் வைக்கப்பட்டதே- தமிழ் எழுத்துக்கள் சம்ஸ்கிருதத்திற்காக உருவாக்கிய எழுத்து இலக்கண அடிப்படையில் அமைக்கப்பட்டது எனத் தெளிவாகக் கூறுவார் பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
|
மெய் எழுத்து எனக் கொண்டால் "க்" 4 உச்சரிப்பிற்கு 4 எழுத்துரு உண்டு
; அது போல ச- ஜ இடையே 7 ஒலியில் உண்டு. இதில் ஜ மட்டுமே தனி எழுத்து கிரந்தம் மூலம் தமிழில் வருகிறது
இந்தியாவின் மிகவும் தொன்மையான பிராமி கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுகள். அசோகர் புத்த மதம் இணைந்தவர் எனில் பாலி மொழியிலோ, அல்லது பிராகிருத மொழியிலோ எழுத்துரு உருவாக்கம் எனில் இந்த இரண்டு பாலி/ பிராகிருத மொழிகளிலும் Sibilants "ச" 3 ஒலியன்கள் இல்லை, சம்ஸ்கிருதத்தில் மட்டுமே, அசோகர் வெவ்வேறு கல்வெட்டுகளிலும் மூன்று "ச" ஒலியனும் அமைந்துள்ளது
கீழடியில் கிடைத்த "திஸன்" என்ற பானைக் கீறல் மேலும் எளிமையாகப் புரிய வைக்கும்
தமிழ் மொழியில் "ஸ" இல்லை, வடமொழியில் "ன" இல்லை.
வடமொழிக்கு உரிய பிராமி எழுத்துருவை தமிழ் பெற்று மேலும் செம்மை செய்தது தமிழ் பிராமி தெளிவாகும்
தமிழ் மொழியில் உயிர் எழுத்து 12 + மெய் எழுத்து 18 =30 எனும் தொல்காப்பியச் சூத்திரம்
தமிழின் 12 உயிர் எழுத்துக்களில் வடமொழியில் இல்லாத குறில் "எ" "ஒ" தமிழில் உண்டு, ஆனால் இவற்றிற்கு 17ம் நூற்றாண்டு வரை தனி எழுத்துரு இல்லை என்பதை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக இணையம் உறுதி செய்யும்தொல்காப்பிய இலக்கணம் 7ம் நூற்றாண்டு அல்லது அடுத்த நூற்றாண்டில் இயற்றப்பட்டதில் இலக்கணமும் புள்ளி மயங்கியல் என இதை உறுதி செய்கிறது
லியோனார்ட் ப்ளூம்பீல்ட் (Leonard Bloomfield) என்ற அமேரிக்க மொழியியல் அறிஞர் 1935-இல் பாணினியின் வடமொழி இலக்கணத்தை பற்றி எழுதுகிறார் - "Panini's grammar is one of the greatest monuments of human intelligence. It describes with the minutest detail, every inflection, derivation & composition, and every syntactic usage of its author's speech. No other language, to this day, has been so perfectly described"
தமிழ் மொழியில் குறில் 'எ'கரம் 'ஒ'கரம்
பிராமி எழுத்துரு அடிப்படையில் வடமொழிக்கு உருவாக்கப் பட்டது, அதில் உயிர் எழுத்தில் குற்றியல் எகரம் ஒகரம் எழுத்துக்களுக்கு உரு கிடையாது, ஏன் எனில் வடமொழியில் இவை இல்லை. ஆனால் வர்க்க எழுத்துக்களுக்கு உரு உண்டு. பொஆ.8ம் நூற்றாண்டு தொல்காப்பிய சூத்திரமும் உறுதி செய்கிறது
5.3 வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் https://www.tamilvu.org/courses/degree/a051/a0513/html/a051353.htm
நாயக்கர் காலமான பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பியர், கிறித்தவ சமயத் தொண்டு செய்வதற்குத் தமிழகம் வந்தனர். இவர்களுள் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், போப் ஐயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுள் வீரமாமுனிவர் தமிழ் அகராதி அமைப்புக்கு வித்திட்டவர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கணம் வகுத்தவர்; அவற்றோடு தமிழில் சிறந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெருமை அவரையே சாரும்.
மெய்யெழுத்துப் போலவே எ, ஒ என்னும் குறில் எழுத்துகள் இரண்டும் புள்ளி பெறும் என எழுத்து வரிவடிங்களைப் பற்றி இலக்கண நூல்களான தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன. வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் என்னும் தம் நூலில் இவ்வரி வடிவங்களின் சில மாற்றங்களைக் குறிப்பிடுகின்றார்.
5.3.1 உயிர் - எகர ஒகர மாற்றம்
எ, ஒ என்னும் குற்றெழுத்துகளில் மேலே உள்ள புள்ளியை நீக்க வேண்டும்; ஏகாரத்துக்குக் கீழே காலிட வேண்டும்; ஓகாரத்துக்குச் சுழி தந்து எழுத வேண்டும் என்பவை அவர் செய்த மாற்றங்கள்.
| பழைய விதி | புதிய மாற்றம் |
குறில் | எ்,ஒ் | எ,ஒ |
நெடில் | எ,ஒ | ஏ,ஓ |
5.3.2 உயிர்மெய் - எகர ஒகர மாற்றம்
உயிர்மெய்க் குறில் எகர ஒகரங்களுக்குப் புள்ளி உண்டு என்பது பழைய இலக்கணவிதி. ஆனால், இவ்விதியை மாற்றி உயிர்மெய்க்குறில் எகர ஒகரங்களுக்கு ஒற்றைக் கொம்பையும் உயிர்மெய்நெடில் ஏகார ஓகாரங்களுக்கு இரட்டைக் கொம்பையும் அமைத்தார்.
| பழைய விதி குறில் நெடில் | புதிய மாற்றம் குறில் நெடில் |
எகர, ஏகாரம் | கெ | கெ கே |
ஒகர, ஓகாரம் | கெ்ா கொ | கொ கோ |
5.3.3 ரகர வரிவடிவ மாற்றம்
ரகரத்திற்குக் கால் இட்டு மற்ற நெடில் குறியாகிய ‘ா’ காலிலிருந்து வேறுபடுத்தினார்.
| பழைய வடிவம் | புதிய வடிவம் |
ரகரம் | ா | ர |
வீரமாமுனிவர் தமிழ் வரிவடிவில் செய்த இத்தகைய மாற்றம் இன்றும் நமக்குப் பயனுள்ளதாக விளங்கி வருகிறது.
தொல்காப்பியர் சொல்லதிகாரம் நூற்பா இரண்டில், சார்பு எழுத்துக்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"அவைதாம்
குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்
இதன் பொருள்:
சார்பு எழுத்துக்கள் என்பன குறுகிய ஓசையை உடைய இகரம், குறுகிய ஓசையை உடைய உகரம் மற்றும் மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து என்பன. இவை எழுத்துக்களை ஒத்து அமைவன.
ஆக, தொல்காப்பியர் காலத்தில் 'ஆய்த எழுத்து' இன்று போல மூன்று புள்ளிகளை உடையதாக இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.
நான் தமிழ் பிராமி, வட்டெழுத்துக்களை ஆராய்ந்த போது, தமிழ் பிராமி எழுத்தில் ஃ என்ற எழுத்து கிடைக்கோடிட்டு, அதன் மேலும் கீழும் புள்ளிகள் இட்டு, இன்றைய 'வகுத்தல் குறியீடு' போல உள்ளது. வட்டெழுத்துக் காலத்திலும் அந்த கிடைக்கோடு சற்று நீளம் குறைந்து அதே வகுத்தல் குறி வடிவில்தான் உள்ளது.
தொல்காப்பியம் குறிப்பிடும் 'மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து' இரு எழுத்து வடிவங்களிலும் காணவில்லை.
கீழே காணும் படங்களில் இன்றைய ஃ எழுத்தாக காணப்படும் இடத்தில்தான் 'மூன்று புள்ளிகள் உள்ள அஃகன்னா' எழுத்து காணப்படுகிறது.
ஏன் தொல்காப்பியம் தமிழ் பிராமி எழுத்து ஃ எழுத்துக்காக காட்டும் வகுத்தல் குறி எழுத்து வடிவத்தைக் குறிப்பிடவில்லை?
அப்படியானால், தொல்காப்பியம் தமிழ்பிராமி வழக்கில் இருந்த
#சங்க #காலமான கி.பி.5- ம் நூற்றாண்டுவரை எழுதப்படவில்லையோ; பிற்காலத்ததோ? என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
இதை தெளிவுபடுத்திக்கொள்ள, சங்க இலக்கியங்கள் எதிலாவது தொல்காப்பியம் குறிப்பிடப்படுகிறதா?
No comments:
Post a Comment