Friday, June 10, 2022

ஜனாதிபதி 2022 கர்னாடகா முன்னாள் முதல்வர் எடியுரப்பா??

அப்துல் கலாம் அடுத்து - பிரதிபா பாட்டில், பிரனாப் முகர்ஜி மற்றும் ராம்நாதி கோவிந்து என மத்திய, கிழக்கு, வட இந்தியாவை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இருந்து உள்ள நிலையில் இந்த முறை தென் இந்தியர்; அதுவும் கர்னாடகா முன்னாள் முதல்வர் எடியுரப்பா இருக்கக் கூடும் எனப் படுகிறது

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள நிலையில் தற்போதே அத்தேர்தலில் யாரை பாரதிய ஜனதா களமிறக்கும் என பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் யோசித்து வருகின்றன. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 2.9 சதவிகித வாக்குகள் உள்ளதால் அதன் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

பிஜு ஜனதா தளம் கட்சி தற்போது மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு பிரச்னைகள் அடிப்படையிலான ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் ஆதரவை பெற தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முயற்சியை தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து 4 விழுக்காடு வாக்குகளை வைத்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடனும் பேச வாய்ப்புள்ளதாக டிஆர்எஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி உடன் பேசியுள்ளார். கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்திய மீரா குமார் பாரதிய ஜனதாவின் ராம்நாத் கோவிந்த்திடம் தோல்வியுற்றார்.

 இம்முறை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 48.9% வாக்குகளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 21.9% வாக்குகளும் உள்ளன. மற்ற கட்சிகளுக்கு 29.2% வாக்குகள் உள்ளன. எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகள் பலவற்றின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை இறக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றிபெற்றால் அது 2024 மக்களவை தேர்தலுக்கு ஆளுங்கட்சிக்கு சவாலாக அமையக் கூடிய வலுவான எதிரணியை அமைப்பதற்கான முக்கிய நகர்வாக அமையும் என கருதப்படுகிறது.

https://www.puthiyathalaimurai.com/newsview/141062/Himachal-Pradesh--Restaurant-hanging-at-160-feet--Let-s-eat-while-sitting-in-the-aisle-

மாநில ஆளுநர் என்பவர் சுயமாக சிந்தித்து தனது சொந்தக் கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கக் கூடாது,மாநில ஆளுங்கட்சியின் கருத்தைத்தான் பேச வேண்டும் என்று சொன்னவர்கள், ஜனாதிபதி என்பவர்,ஆளுங்கட்சிக்கு ரப்பார் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது,சொந்தக் கருத்து உள்ளவராகவும் அதன் படி நடப்பவராகவும் இருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள் /பேசுவார்கள்.இதுவரை ஆளுநர் தனது சொந்தக் கருத்துக்களை பேசினால் தவறில்லை, அவர் மாநில ஆளுங்கட்சியின் ஊது குழல் இல்லை என்று சொன்னவர்கள், ஜனாதிபதி என்பவர், மத்திய ஆளுங்கட்சிக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும்.சுயமாக சிந்தித்து சொந்தமாக பேசக்கூடாது என்று பேசுகிறார்கள்/பேசுவார்கள்.
இதுதானே சார் ஜனாதிபதி தேர்தல் பற்றிய உங்க டிவி விவாதம் ..

No comments:

Post a Comment