Saturday, June 11, 2022

கொசப்பேட்டை ஆதி மொட்டையம்மன் கோவில் இடத்தில் HRCE சட்ட விரோதமாக மீன் மார்க்கெட் மீண்டும் முயற்சி?

கொசப்பேட்டை ஆதி மொட்டையம்மன் கோவில் இடத்தில் HRCE சட்ட விரோதமாக மீன் மார்க்கெட் 2021 டிசம்பர் மாதம் துறை போட்ட சர்குலர் சமூக வலை தளங்களில் பரவ, கைவிடப் பட்டதாக செய்தி வந்தது. ஒரு கோவில் இடத்தில் வேறு பிரிவு சேர்ந்த கோவில் பணத்தை எடுப்பது சட்ட விரோதம்
தினகரன் தலைப்பே பக்தர்களை வருத்தும், கோவில் இடம் அது,  இந்து சமய அறநிலையத் துறை இடம் இல்லை
https://www.dinamalar.com/news_detail.asp?id=3050273
கோவில் உபரி நிதியை செலவு செய்ய முடிவு எடுக்க வேண்டியது அறங்காவலர் குழு மட்டுமே எனப் பல தீர்ப்புகள் உள்ளன.
10.06.2022 தினகரன் செய்தியில் அதே கோவில் பெயர் ஆனால் வணிக வளாகம் எனும் பெயரில்; ஆனால் திட்ட மதிப்பீடு தொகை எல்லாம் அதுவே

இந்து சமய அறநிலையத்துறை துணை/இணை ஆணையர்கள் மேல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் சில‌


https://tamil.asianetnews.com/politics/permission-to-build-a-fish-market-from-the-temples-fund-h-raja-angry--r4u4t1

//சென்னை குயப்பேட்டையில் உள்ள கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில்கள் அருகே பழைய மீன் சந்தை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய மீன் சந்தைக்கான கட்டிடம் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கட்டிடங்களைக் கட்டும் பணிகளுக்கு ரூ. 1.55 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மீன் சந்தையைக் கட்டுவதற்கு தேவையான நிதியை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயில் போன்ற திருக்கோயில்களிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளார்.//

ரூ.44 கோடி கோவில் பணிகள்அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சென்னை:ஹிந்து அறநிலையத் துறை கோவில்களில், 43.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
* மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், 14.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வீரவசந்தராயர் மண்டபம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டப்பட உள்ளன
* சென்னை, கொசப்பேட்டை, கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோவிலில், 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம்; மாதவரம் கைலாசநாதசுவாமி கோவிலில், 2.20 கோடி ரூபாயில் குளம்; திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், 94 லட்சம் ரூபாய் செலவில், வணிக வளாகம் கட்டப்பட உள்ளன
* விழுப்புரம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 2.56 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் கூடிய, முடி காணிக்கை மண்டபம், விருந்தினர் அறை, ஓய்வுக்கூடம், இரண்டு குளங்கள் புனரமைக்கும் பணிகள் நடக்க உள்ளன
* விருதுநகர், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 2.50 கோடி ரூபாயில் விருந்து மண்டபம்; சிவகங்கை, காரைக்குடி கொப்புடை நாயகியம்மன் கோவிலில், 1.50 கோடி ரூபாயில் புதிய வார சந்தை அமைக்கப்பட உள்ளன
l*திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மின் இணைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. இவை உட்பட பல்வேறு கோவில்களில், 43.68 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இப்பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.அப்போது, செங்கல்பட்டு, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம்; ஈரோடு, சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் அன்னதான மண்டபம் உள்ளிட்ட கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...