இந்து சமய அறநிலையத் துறை 2000 கோடி கோவில் சொத்துக்களை மீட்டதாக ஒரு புத்தகம். இந்தக் கோவில்கள் எல்லாம் இந்து சமய அறநிலையத் துறை கீழ் இருந்த போது சொத்துக்களை ஆக்கிரமிக்க விட்டதே இந்தத் துறை தான்.
HRCE துறை கீழ் 20000 கோவில்களில் விளக்கேற்ற கூட வசதி இல்லை. ஒரு வருமானம் இல்லாத கோவிலைக் கூட HRCE துறை கையகப் படுத்துவது இல்லை. நன்கு பராமரிக்கப்பட்ட கோவில்களை எடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்ததே HRCE துறை தான்.
சென்னை பல்லாவரம் 1400 ஆண்டுகள் பழமையான பஞ்சபாண்டவ மலை குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டு உள்ளது |
இறைவன் கோவில் பக்தர்கள் உண்டியல் பணத்தில் இறந்த யானைகள் நினைவு மண்டபமாம், செலவு செய்யணும்- அதில் கமிஷன் என்பதை தவிர இதில் என்ன பயன்
ஆவடி அருகே கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் பசுமடம் கோவில் பணத்தில் கமிஷன் சுருட்ட கட்டப்படுகிறது.
இதில் கோவிலிற்கு பசுக்களுக்கு எந்த நல்லதும் நடக்க போவதில்லை
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 1859 கோவில்கள், அதாவது தினமும் 5 புதிய கோவில்களை கையகப் படுத்தி உள்ளது.
இறைவன் திருக்கோயில் சடங்குகள் & இறை திருமேனி ஊர்வலங்கள் இந்தியாவின்- தமிழகத்தில் அனைத்து தெரு வழியாகவும் போகலாம்; இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமை கீழ் வருவது -சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை டிவிஷன் பென்ச் தீர்ப்பு
https://pagadhu.blogspot.com/2021/05/blog-post_86.htmlதமிழகத்தில் 20 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்றக்கூட வசதியில்லை மே 17,2022
சொத்து அபகரிப்பு, வருவாய் முறைகேடு புகார் தனியாரிடம் இருந்த 1,859 கோயில் அறநிலையத்துறையிடம் வந்தது: அரசு உயரதிகாரி தகவல்
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=763712 2022-05-09
சென்னை: சொத்து அபகரிப்பு, வருவாய் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 1,859 கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அல்லாத 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் நிர்வாகம் தனிநபரோ அல்லது அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம், கட்டிடங்கள், நிலங்கள் குத்தகைக்கு விடுவதன் மூலம் வருமானம் தொடர்பான கணக்குகளை ஒவ்வொரு மாதமும் அறநிலையத்துறையிடம் சமர்பிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலும் அவ்வாறு மாதம் தோறும் இந்த கோயில் நிர்வாகம் கணக்குகளை தாக்கல் செய்வதில்லை. அப்படிப்பட்ட கோயில்களின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்து கொள்கிறது அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்ளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 கோயில்கள் வரை அறநிலையத்துறை கையகப்படுத்தி வருவது தொடர்கதையாகி வந்தது. இதனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 44121 கோயில்களாக இருந்தது.
தொடர்ந்து பல கோயில்கள் மீது புகார் இருந்த நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் பெரிய அளவில் புகார்கள் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சொத்துகள் அபகரிப்பு மற்றும் வருவாய் முறைகேடு தொடர்பாக, முறைகேடு புகார் தொடர்பாக அறநிலையத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் 1859 கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. இதில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோயில்களும் அடக்கம்.
இந்த கோயில்களில் செயல் அலுவலர் நிலையிலான அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த கோயில்கள் நிர்வாக பணிகளை கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில்களில் செயல் அலுவலர் நிலையிலான அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த கோயில்கள் நிர்வாக பணிகளை கவனிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
.jpg)
No comments:
Post a Comment