Friday, March 18, 2022

ஹிஜாப் தடை -2018 கேரளா உயர் நீதிமன்றம் நீதிபதி.முஹம்மது முஸ்தாக் தீர்ப்பு

ஃபாத்திமா தஸ்னீம் மற்றும் ஹஃப்சாஹ் பர்வீண் என்ற 18 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் கிரைஸ்ட் நகர் சீனியர் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள். முழு கை வைத்த சட்டை மற்றும் தலையை மூடும் ஆடை ஆகியவற்றை அணிய தங்கள் பள்ளி தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு அனுமதி வழங்காததையடுத்து அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி.முஹம்மது முஸ்தாக் அளித்த பில், மாணவர்கள் அவர்களது விருப்பம் போல் உடை அணிவது அவர்களது உரிமை என்பது போல, பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிவதை உறுதி செய்வது அப்பள்ளியின் உரிமை என்று குறிப்பிட்டார்.
  https://www.theleaflet.in/wp-content/uploads/2022/02/215700352932018_1.pdf

"பெரும்பானவர்களின் விருப்பம் பெரும்பகுதியளவிலான மக்களை பிரதிபலிக்கிறது. அதன் கீழ் உள்ளவர்களின் விருப்பம் தனி நபர்களின் விருப்பத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. பெரும்பாலனவர்களின் விருப்பத்தை விட, தனிநபர்களின் விருப்பம் முக்கியத்துவம் பெற்றால், அது குழப்பத்தில் முடியும்" என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கில் பெரும்பகுதி அளவிலான மக்களின் விருப்பம் என்பது கல்வி நிறுவனத்தினுடையது. நிறுவனத்தை சுதந்திரமாக நடத்த மற்றும் நிர்வாகிக்க அவர்களால் இயலவில்லை என்றால், அது அவர்களது அடிப்படை உரிமையை மறுப்பதாகும் என்று நீதிபதி முஸ்தக் தீர்ப்பளித்தார்.







No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...