Monday, March 21, 2022

சீர்காழி கோவில் சிலைகளைக் காப்பாற்றி வரும் 80 வயது அந்தணர் மீது பொய் வழக்கு கைது- திராவிடியார் அராஜகம்


மயிலாடுதுறை - சீர்காழி தாலுகா - நெம்மேலி கிராமம் ; 5000 பேர் வசிக்கும் நடுத்தர கிராமம்; ஒரு சிவன் கோயில்; பழமையானது; சிறிய கோயில்; சனீஸ்வரன் நிம்மதி அடைத்த இஸ்தலம் என்று ஐதீகம்; அதன் பரம்பரை அர்ச்சகர் சூரியமூர்த்தி குருக்கள்; தன் தந்தைக்கு பிறகு பணி ஏற்கிறார். இப்பொது அவருக்கு வயது 75; ஒரு மகள் ஒரு மகன் என சிறிய குடும்பம்;
பக்கத்துக்கு ஊரில் மன்னன் நல்ல காத்தாயி அம்மன் கோயில்; அதற்கு குருக்கள் இல்லை; சூரியமூர்த்தி குருக்கள் அதையும் பார்த்துக்கொள்ள வேண்டுகிறார்கள்; 2 கோயில்களுக்கும் குருக்கள்; (HRNC சம்பளம் மாதம் 1000-1500 என்பது தனி கதை).
வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அமைதியாக கழிக்க வேண்டியவர்; அதற்கு தகுதியானவர்; கிராம மக்களால் மரியாதையாக நடத்த படுபவர்; கைது செய்ய படுகிறார்; இப்பொது சிறையில் இருக்கிறார்;
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
குற்றச்சாட்டு :
1. விக்கிரகங்களை கோயில் கருவறையில் பதுக்கி வைத்திருந்தார்;
2. கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்ட வெள்ளியில் செய்ய பட்ட கவசங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
வெள்ளி கவசம் வீட்டுக்கு வந்த கதை:
வெள்ளியில் செய்ய பட்ட கவசங்கள், காணிக்கையாக கொடுத்தது; அதை கொடுத்தவர், குருக்களிடம் அதை வீட்டில் பாதுகாப்பாக வைக்கும்படி கூறியிருக்கிறார்; தேவைப்படும்போதெல்லாம் கவசத்தை இறைவனுக்கு சாத்திவிட்டு, பின் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறார்; காணிக்கையாக கொடுத்தவர் இதை போலீஸிடம் கூறிவிட்டார்; இது கிராம கோயில்களில் காலம் காலமாக நடப்பது;
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
விக்கிரகங்கள் கருவறைக்கு வந்த கதை:
கருவறையில் ஒரே பீடத்தில் இருந்த விக்ரகங்கள் 2; பிரதோஷ நாயகன் மற்றும் நாயகி; சிவனின் உருவங்கள்; சில வருடங்கள் முன் அருகில் உள்ள உத்தர பதீஸ்வரா என்ற சிவன் ஆலயம் அதிகம் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து; அந்த கிராம மக்கள் அந்த கோயிலில் உள்ள விக்ரகங்கதை நெம்மேலி கோயிலுக்கு கொடுக்கிறார்கள்; அது கருவறையில் சூரியமூர்த்தி குருக்ளால் வைக்கப்படுகிறது. தொடர்ந்து பூஜை செய்ய படுகிறது;
ஒரு கட்டத்தில், சூரியமூர்த்தி குருக்கள் இந்த சிலை பற்றி HRNC க்கு தெரிவிக்கிறார்; அவர்களிடம் உள்ள விக்கிரக லிஸ்ட்ல இந்த சிலை இல்லை என்று தெரிகிறது; விக்கிரகங்கள் நெம்மேலி கிராமத்திலேயே தொடர்ந்து இருக்கின்றன;
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
சில மாதங்கள் முன்:
நல்ல காத்தாயி அம்மன் கோயிலின் விக்ரங்கங்கள் பற்றி ஒரு retired அரசு அலுவலர் RTI போடுகிறார். (சூரியமூர்த்தி குருக்கள் இந்த கோயிலுக்கும் குருக்கள் என்பதை நினைவில் கொள்ளவும்). அதில் சிலைகள் எண்ணிக்கை பற்றி குழப்பமான தகவல்கள் வருகின்றன; போலீஸ் மேற்கொண்டு விசாரிக்கிறது; சூரியமூர்த்தி குருக்கள் நெம்மேலி கோயிலில் விக்கிரகம் இருப்பதை பற்றி சொல்லி, அவர்களுக்கு அதை காட்டுகிறார்; கைது.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
அடுத்து நடந்தது:
கிராம மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி தெளிவான புரிதல் இல்லை; இந்து மக்கள் கட்சியும் சகோதர இயக்கங்கள் தேவையான தலைமையை தருகின்றன; கிராம மக்கள் ஆர்பாட்டம் செய்கிறார்கள்; மனசாட்சி உள்ள ஊடகங்கள் கிராம மக்களின் கருத்தை விசாரித்து எழுதுகிறார்கள்; பலருக்கு உண்மை தெரிகிறது;
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
நடக்க விருப்பது:
21-3-2022 இல் சூரியமூர்த்தி குருக்கள் ஜாமின் பெரும் முயற்சில் இந்து இயக்கங்கள் இருக்கின்றன.
நாம் அறிந்த வரை:
இந்த கைதுக்கு சதி செயல் காரணமாக தெரியவில்லை; 15 நிமிடம் செலவு செய்து கிராம மக்களை விசாரித்து இருந்தாலே, இந்த கைதை தவிர்த்து இருக்கலாம்; நிர்வாக தவறு மற்றும் அலட்சியம் மற்றும் புகழ் வெறி போன்றவை போலீஸ் தரப்பை தவறு செய்ய வைத்து இருக்கின்றன;
அரசு தரப்பில் செய்ய வேண்டியது:
1. சூரியமூர்த்தி குருக்கள் ஜாமின் பெற எதிர்க்காமல் இருப்பது
2. வழக்கை கொஞ்சம் நியாயமான / ஓரளவாவது புத்தியுள்ள போலீஸ் அதிகாரியை கொண்டு விசாரித்து உண்மையை உலகுக்கு சொல்லுவது
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
மற்றும் நன்றிகள்;இது வரை : இந்து மக்கள் கட்சி நிர்வாகி திரு சுவாமிநாதன் மற்றும் இந்து மகா சபாவை சேர்ந்த ராம் நிரஞ்சன் தலைமையில் சகோதர இயக்கங்களும் சரியான விதத்தில், செயல்பட்டு உண்மையை வெளியில் கொண்டு வந்து இருக்கின்றனர். நம்பிக்கை தருகிறார் அர்ஜுன் சம்பத் அவர்கள்;
வாழ்த்துக்கள்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
இது வரை : குருக்கள் சமூகத்துக்கு
புதிதாக செருப்பு வாங்கினாலே, கோயிலில் விட்டால் தொலைந்து விடுமோ என்று கவலை படும் நான் தான், லட்ச கணக்கில் செலவு செய்து கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்க வாங்கிய பொருட்களை அர்ச்சகரிடம் பத்திரமாக வைத்து கொள்ள சொல்லி விட்டு, அதை மறந்து கூட போகிறேன்; இந்த நம்பிக்கையை அர்ச்சகர் சமூகம் பெறுவது மற்றும் காப்பாற்றுவது ஒரு அதிசயமே; ஆனால் இதே மண்ணில் தான் 75 வயது கிழவனை கைது செய்து விட்டு, ஜனாதிபதி விருது வாங்கும் ஆசையில் தூங்க போகும் போலீஸ் அதிகாரியும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்;
1. உங்களிடம் இருக்கும் கோயில் சார்த்த பொருட்களுக்கு vedio evidence அல்லது எழுத்தால் அனுமதி பெற்று வைத்து கொள்ளுங்கள்;
2. இந்து இயக்கங்களுடன் இணைந்து பணி செய்யுங்கள்;
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
இது வரை : படிப்பவருக்கு
இந்த விஷயத்தில் நம்மால் செய்ய கூடியது அதிகம் இல்லை; இந்த கட்டுரை நன்கு விசாரித்த பிறகே எழுதப்பட்டது; மனமறிந்து பொய் சொல்லப்படவில்லை; நம்பிக்கையாக இந்த கட்டுரையை share செய்யுங்கள்; பொது மக்கள் கருத்து அரசு செவி சாய்க்கும்; உண்மை வெளிவரும்
இவன்
சாரதி சுந்தரராஜன்
பொய்யாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து கைது செய்த போது வேசித்தன திமுக பாரதி ஊடகங்கள் பரப்பியவை ஆனால் உண்மையில்
விற்று பணமாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால்? இந்த சிலைகளை 40 வருடமாக ஏன் அவர் கருவறையில் ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை கேள்வி வர வேண்டாமா?
பொதுவாக சுற்றுப்புற கிராமக் கோவில்களில் ஏதாவது ஒன்றில்தான் ஊர்க்கட்டுப்பாடும்,பாதுகாப்பும் இருக்கும்.அதில் பாதுகாப்பான கோவிலை தேர்ந்தெடுத்து சில கிராம மக்களே தெய்வ சிலைகளை பாதுகாப்பிற்காக வைப்பதும் பலகாலமாக நடக்கிறது..
ஆனால்,குருக்கள் என்றால் மட்டும் எடுத்த எடுப்பிலேயே எந்த வழக்காக இருந்தாலும் ஊடகங்களால் குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள்..
நாளை இந்த வழக்கில் அவர் நிரபராதி என தெரிய வந்தால் இதே போல ஒரு கார்டு வெளிவராது,இன்று கரித்துக் கொட்டுபவர்கள் எல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்து போய்விடுவார்கள்..
நியாயப்படி,இந்த குருக்களுடைய சொந்த கிராம மக்களே இவருக்காக இத்தனை நேரம் பொதுவெளியில் பேசியிருக்க வேண்டும்.தாங்கள் அவர்கள் குடும்பத்திற்கு துணை நிற்பதாக சொல்லியிருக்க வேண்டும்.
இது நடக்காத போது நாளை நிரபராதியென இவர் மீண்டாலும் கூட அந்தக் குடும்பம் சுடுபட்ட பூனை போல இந்த தர்மத்தை விட்டு வெளியேறி விடும்..இந்த சிக்கல் தொடர்ந்து கொண்டே உள்ளது.இறைவனின் சித்தம் என்னவென்று தெரியவில்லை.



 
 

No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...