Friday, March 11, 2022

சென்னை மேயர் ப்ரியா ராஜன் கிறிஸ்துவரா? பட்டியல் சமூகத்தை மதம் மாற்றி உரிமை பறிக்கும் கிறிஸ்துவ மதவெறியா??

தலித் ஹிந்துவா... கிறிஸ்துவரா? சென்னை மேயருக்கு 'செக்' வைக்கிறது பா.ஜ., மார் 12, 2022 

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அவர் பதவியை பறிக்கப் போவதாக கூறுகிறது, தமிழக பா.ஜ., கட்சி. தமிழக பா.ஜ.,வின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, சென்னை மண்டல பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் கூறியதாவது:தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள், அவர்கள் மதம் மாறினால் கிடைக்காது என்ற நிலை இருப்பதால், மதம் மாறியவர்கள் தொடர்ந்து, ஹிந்து மதத்தில் நீடிப்பது போல காட்டி வருகின்றனர். ப்ரியா ராஜனின் மாமா செங்கை சிவம், தி.மு.க.,வில் நீண்ட காலம் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர். அப்போது பெரம்பூர் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. செங்கை சிவம், கிறிஸ்துவர். தன் அன்றாட வாழ்வில் அந்த மதத்தை பின்பற்றுபவர். 

ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு சென்று வருபவர் என்ற தகவல் தெரிய வர, அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


'நான் கிறிஸ்துவர் அல்ல; ஹிந்து மதத்தை சேர்ந்தவன்; ஹிந்துவாக தான் இருக்கிறேன்' என்று கூறிய செங்கை சிவம், ஆரிய சமாஜத்தில் இருந்து கடிதம் வாங்கி கொடுத்து, பிரச்னையை முடித்திருக்கிறார்.

அவர் நீதிமன்றத்தில் ஆவணத்தை கொடுத்து தப்பித்துள்ளார். அதே பிரச்னை, இப்போது ப்ரியா ராஜனுக்கும் ஏற்பட்டுள்ளது. இவர், 'இவான்ஜலிக்கல் சர்ச்' உறுப்பினர். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ப்ரியா, தன்னை தாழ்த்தப்பட்ட ஹிந்து பெண்ணாக காட்டி, சட்டத்தை ஏமாற்றி மேயராகி விட்டார். மேயர் வேட்பாளராக வரக்கூடிய பெண், தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் செய்த மனுவில் இருந்தே, கட்சி தலைமை உஷாராக செயல்பட்டிருக்க வேண்டும்.


யார் என்ன கேட்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையில், தி.மு.க.,வினர் தொடர்ந்து தவறு செய்கின்றனர்.

இப்படி தான், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தன் வேட்புமனு தாக்கலிலும் தவறு இழைத்தார். அதனால், மேயர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. 

  அப்போது, ஒருவர் ஒரு முறை மேயராக இருந்து விட்டால், மீண்டும் அப்பதவிக்கு வர முடியாது என சட்டம் இருந்தது. ஸ்டாலின் ராஜினாமாவுக்கு பின், அதில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கட்சி தலைவரில் இருந்து துவங்கி, தற்போதைய ப்ரியா வரை, தி.மு.க.,வில் யாரும் சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் பா.ஜ., விடாது. அதனால், இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப் போகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

'எதையும் தைரியமாக எதிர்கொள்வேன்'

 

சென்னை மேயர் ப்ரியா ராஜன் கூறியதாவது:செங்கை சிவம் என் மாமா தான். எம்.எல்.ஏ.,வாக இருந்த அவரையும், இதே சிக்கலுக்கு உள்ளாக்கினர்; நீதிமன்றத்திற்கு சென்றனர். இறுதியில், அவருக்கு சாதகமான நிலை ஏற்பட்டது. அதே பிரச்னையை, தலித் பெண்ணான எனக்கும் ஏற்படுத்துகின்றனர். பா.ஜ., தரப்பினர் தான், என்னை கிறிஸ்துவ பெண்ணாக்கும் முயற்சியை செய்கின்றனர். தேர்தல் நேரத்தில் சர்ச்சுகளுக்கு சென்று, ஓட்டு சேகரித்தது நிஜம். ஹிந்து கோவில்களுக்கும் போனேன்; மசூதிகள், பள்ளிவாசல்களுக்கும் சென்றேன்.

சர்ச்சில் பாதிரியார்களை சந்தித்து பேசி ஓட்டு கேட்ட புகைப்படங்களை வைத்து, என்னை கிறிஸ்துவ பெண்ணாக சித்தரிக்கின்றனர். பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, தமிழ்நாடு பிஷப் கவுன்சிலின் முன்னாள் செய்தி தொடர்பாளர். அவர் தன் மதத்தின் மீதான ஈர்ப்பில், என்னை கிறிஸ்துவ பெண் என நினைத்து, நான் பதவி ஏற்ற நாளில், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன், வாழ்த்தி, 'பேனர்' வைத்தார்.

 அதை வைத்து, இப்படியொரு பிரச்னை கிளம்பும் என எனக்கு தெரியாது. அத்துடன், இவான்ஜலிக்கல் சர்ச்சில் நான் உறுப்பினராக இருப்பதாக தகவல்


பரப்புகின்றனர். அது தொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால், அதை பொது வெளியில் வெளியிட வேண்டும்.

தலித் பெண் ஒருவருக்கு, 28 வயதில் கிடைத்திருக்கும் மேயர் பொறுப்பு என்ற வெகுமதியை, பலராலும் பொறுக்க முடியவில்லை. சொந்த கட்சியினரே வயிற்று எரிச்சலில், எனக்கு எதிராக இப்படி புரளிகளை கிளப்பி விடுவதாக தகவல் கிடைத்துள்ளது. என்னை சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வினரோடு அவர்கள் மறைமுகமாக கைகோர்த்து செயல்
படுவதாகவும் சொல்கின்றனர்.

இதை தைரியமாக எதிர்கொள்வேன். தலைமைக்கு தகவல் கூறி விட்டேன். பிரச்னை என்று வந்தால், அதை சட்ட ரீதியாக அணுகலாம் என கூறி விட்டனர். அதனால், இந்த பிரச்னைகள் குறித்து கவலைப்பட போவதில்லை.


இவ்வாறு ப்ரியா ராஜன் கூறினார். - நமது நிருபர் - - 

No comments:

Post a Comment

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...