Friday, March 11, 2022

ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை ஹெச்.எம்., ஜோசப் ஜெயசீலன் மீது வழக்கு

2 ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை ஹெச்.எம்., மீது வழக்கு பதிய உத்தரவு

கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களை நடத்தும் பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் மாணவிகளை பாலியல் தொல்லை செய்வது அடிக்கடி எனில் ஒரு கிறிஸ்துவ தலைமை ஆசிரியர் சக ஆசிரியைகளை பாலியல் தொல்லை எல்லாம் பைபிள் கதை தாவீது வழி தானே, #சர்ச்_கொத்தடிமை_திமுக காப்பாற்றும் #ஈவெராமசாமியார்_வழி_திராவிடியாம் என நம்பிக்கையா

மதுரை:மதுரையில் பெண் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை போலீசாருக்கு உத்தரவிட்டது.


மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிபவர் ஜோசப் ஜெயசீலன். இப்பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து இரு பெண் ஆசிரியைகள் மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதை மதுரை கல்வி மாவட்ட அலுவலர் ரத்து செய்தார்.இதை எதிர்த்து ஜோசப் ஜெயசீலன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.தமிழக அரசுத் தரப்பு வாதத்தில், 'மனுதாரருக்கு எதிராக கடுமையான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அடிக்கடி வருகின்றன. எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு பெண் ஆசிரியைகள், பாலியல் துன்புறுத்தல் புகார்களை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

'மதுரை வட்டார கல்வி அலுவலர் அறிக்கை அடிப்படையில், இரண்டு பெண் ஆசிரியைகளின் மாற்றுப் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மனுதாரர் தொடர்ச்சியாக துன்புறுத்தியதால், இரு ஆசிரியைகளும் பள்ளியில் மிகுந்த சிரமத்துடன் பணிபுரிகின்றனர்' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பள்ளி நிர்வாகத்தை அமைதியாக நடத்த, மற்ற ஆசிரியர்களை நியமிக்குமாறு மனுதாரர் அரசிடம் கோரியிருக்கலாம். ஆனால் தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் ஆசிரியர்களை இவ்வழக்கில் எதிர்மனுதாரராக இணைக்கும் அளவுக்கு மனுதாரர் சென்றுள்ளார்.இரு ஆசிரியைகளும் அனுப்பிய கடிதம் இந்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதும், பணியை தொடர பள்ளியில் உகந்த சூழல் இல்லை என்பதும் கடிதத்தை பார்க்கையில் தெரிய வந்துள்ளது. புகாரின் தீவிரத்தை பரிசீலித்து அவர்களின் மாற்றுப் பணி நியமன உத்தரவை கல்வித்துறை ரத்து செய்துள்ளது. எவ்வாறாயினும் தலைமையாசிரியரின் இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ள முடியாது.

இரு ஆசிரியைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளனர்.கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதில் முழுமையான நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது உயர் நீதிமன்றத்தின் கடமை.கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய இரு கடிதங்கள் அடிப்படையில் மதுரை கீரைத்துறை தெற்கு மகளிர் போலீசார் வழக்கு பதிய வேண்டும்.

விசாரணையை உடனடியாக துவக்க வேண்டும். இரு ஆசிரியைகளையும் விடுவித்து, அவர்கள் உடனடியாக பணி மாறுதல் செய்யப்பட்ட பள்ளியில் சேர மாவட்ட கல்வி அலுவலர் அனுமதிக்க வேண்டும்.அவர்களின் பணிப் பதிவேடுகள் மற்றும் பிற சான்றிதழ்களை தேவைப்பட்டால், போலீசாரின் உதவியுடன் கைப்பற்ற வேண்டும்.

போலீசாரின் விசாரணை முடியும் வரை ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரிக்க வேண்டும். எப்.ஐ.ஆர்., நகல்களை மார்ச் 14ல் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 
'Shocking To The Conscience': Madras HC Orders Registration Of FIR Against Headmaster For Alleged Sexual Harassment Of Teachers 

Upasana Sajeev 11 Marc  G.Joseph Jeyaseelan v. The Director of Elementary Education & Ors



No comments:

Post a Comment

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...