Wednesday, March 16, 2022

அலகாபாத்தின் கசாப்புக்காரன் கொடியவன் 'ஜேம்ஸ் நீல்' போற்றிய ஈ.வெ.ராமசாமியாரின் அரவருப்பான வழி

நீல் சிலை சத்தியாகிரகம்

தஞ்சை வெ.கோபாலன்.


General James George Smith Neil

James George Smith Neill (27 May 1810 – 25 September 1857)

1857இல் வட இந்தியாவில் நடைபெற்ற இந்திய சிப்பாய்களின் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என்றுதான் தேசபக்தர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த புரட்சி சரியான தலைமை இல்லாமையாலும், உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல இந்தியர்களே செய்த துரோகச் செயல்களாலும் வீரத்தோடு போராடிய பல தேசபக்த சிங்கங்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்ததை நாம் அறிவோம். இது தவிர ஆங்கில தளபதி நீல் என்பவன் நடத்திய வெறியாட்டம் காரணமாக எத்தனை இந்தியர்கள் உயிர் துறக்க நேர்ந்தது என்பதை அறிய வேதனை உண்டாகிறது. போதாதற்கு இந்த கொடுமைக்காரன் ராணுவ தளபதி நீலனுக்குச் சென்னையில் அப்போது ஸ்பென்சருக்கு எதிரில் சிலையொன்றையும் நிறுவி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.

நீலனுடைய முழுப் பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் (General James George Smith Neill) யார் இந்த நீல்? இவன் செய்த கொடுமைகள் எவை? அவன் சிலையொன்றை சென்னையில் வைத்தது என்ன ஆயிற்று? இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த விவரங்களை இந்தக் கட்டுரையில் சிறிது பார்க்கலாம்.

சிப்பாய்கள் தொடங்கிய கலகம் மெல்ல மெல்ல வட இந்திய நகரங்களுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. மீரத் நகரத்தில் உருவான எழுச்சி, டெல்லியில் அதிர்வு, அசம்கர் வெற்றி இவை பற்றிய செய்திகள் எல்லாம் நாடெங்கும் பரவிய நேரம். பஞ்சாபில் இருந்த ஆங்கில அதிகாரி ஜான் லாரென்ஸ் என்பவரும் கல்கத்தாவில் தலைமை பீடத்தில் இருந்த லார்ட் கேனிங் பிரபுவும் புரட்சியை அடக்கப் பிரம்ம பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருந்தனர். வெள்ளையர் ஆதரவுப் படைகள் டெல்லியில் புரட்சியாளர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்த வெள்ளைப் படைகள் பாதுகாப்புக்காக படைகளை அனுப்ப அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர். பம்பாய், சென்னை, ரங்கூன் ஆகிய இடங்களிலிருந்து படைகள் கலகம் நடந்த பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டன.

அப்படி வரவழைக்கப்பட்ட படைகளில் சென்னையிலிருந்து சென்ற துப்பாக்கிப் படை ஜெனரல் நீல் என்பான் தலைமையில் கலகத்தை அடக்கப் புறப்பட்டது. இந்த நீல் என்பான் பற்றி சொல்லப்படும் குணாதிசயங்கள், இவன் தர்மம் என்பதையே அறியாதவன், எதற்கும் துணிந்த கொடியவன், மனிதாபிமானம் இல்லாத ராட்சச குணங்கள் படைத்த மனித உருவிலான அரக்கன். காசிக்கு வந்த நீலனின் படைகளுக்கு இந்திய துரோகிகளின் துணையும் கிடைத்தது.

இவன் இந்திய படைவீரர்களுக்கு இட்ட முதல் கட்டளை அவர்கள் ஆயுதங்களை யெல்லாம் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டுமென்பதுதான். ஆனால் சுயமரியாதையும் தேசபக்தியும் கொண்ட இந்திய வீரர்கள் அவன் ஆணையை ஏற்க மறுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஜெனரல் நீல் தன் வெள்ளை படைகளோடு பஞ்சாபின் சீக்கியர் படையையும் சேர்த்துக் கொண்டு தாக்கத் தொடங்கினான். இந்தப் படை சிப்பாய்களைத் தவிர கிராமம் கிராமமாகப் புகுந்து அங்கெல்லாம் கண்ணில் தெரிந்த மனிதர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தினர். சிறை பிடித்தவர்களை ஆங்காங்கே மரங்களில் தூக்கிலிடுவது என்று வெறியாட்டம் ஆடினர். பல தூக்கு மேடைகள் அமைத்து ஓயாமல் ஒழியாமல் அப்பாவி பொதுமக்களை தூக்கிலிட்டுக் கொன்றான் நீல். தூக்கிலிட வேண்டிய கூட்டம் அதிகமாக இருந்ததால், தூக்கிலிட்ட ஒருவரின் உயிர் பிரியுமுன்பாகவே அவரை குற்றுயிரும் குலையுயிருமாகத் தூக்கி ஏறிந்துவிட்டு அடுத்தவரை தூக்கிலிட்டனர்.

இப்படி ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட பலநாட்கள் ஆகுமென்பதால் ஒரு காரியம் செய்தனர். பலரை ஒரே நேரத்தில் ஒரு பெரிய மரத்தடியில் நிறுத்தி, அவர்கள் கழுத்துகளில் எல்லாம் சுறுக்குக் கயிற்றைச் சுற்றி பெரும் மரக்கிளை வழியாக மறுபுறம் கொண்டு சென்று அங்கு ஒரு யானை மூலம் கயிற்றை இழுக்கச் செய்து பலரை ஒரே நேரத்தில் தூக்கிலிட்ட கொடுமையும் நடந்தது. இப்படி பலரை தூக்கிலிட தூக்கு மேடையும், கயிறும் தேவைப்பட்டதால் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தனர். ஒரு கிராமத்தின் உட்பகுதியில் அனைவரையும் நிறுத்தி சுற்றிலும் தீமூட்டி அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பரலோகப் பிராப்தி அடையும்படி செய்தனர். அதில் தப்பி ஓட நினைத்தால் சுற்றிலும் பீரங்கிகளை நிறுத்திவைத்து சுட்டுப் பொசுக்கினர். இந்த வரலாற்றையெல்லாம் இவர்கள் பெருமையாகப் பின்னர் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.

இந்த கொடியவன் நீலன் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; சொல்லி மாளாத கொடுமைகள். இப்படி சென்னையில் புறப்பட்டுக் கல்கத்தா சென்று அங்கு கேனிங் பிரபுவின் உத்தரவின் பேரில் இந்திய சிப்பாய்களை வழியெல்லாம் பலிகொடுத்துக் கொண்டு வந்தபோது காசியையும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நடத்திய கொலைவெறி காட்சிகளைப் பார்த்தோம். அந்தக் கொடியவன் புரட்சியின் போது 1857இல் லக்னோ நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தன் வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த சமயம் பீரங்கியால் சுடப்பட்டுத் தன் குதிரையில் இருந்தபடியே கீழே விழுந்து உயிரைவிட்டான். மனித உருக்கொண்ட அரக்கன் இந்திய மண்ணில் இரத்தம் கக்கிச் செத்தான்.

1861ஆம் வருடத்தில் அந்த கொடியோன் நீலனுக்குச் சென்னையில் ஸ்பென்சருக்கு எதிரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. பீடமும் சிலையுமாக 21 அடி உயரமுள்ள முழு வெண்கலத்தால் ஆன அந்தச் சிலையை வெள்ளையர்கள் நிறுவினர். அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த மக்களுக்கு அவன் செய்த கொடுமைகள் தெரியவில்லையோ என்னவோ அப்போது அவன் சிலைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்றபின் சுமார் 66 ஆண்டுகள் கழித்து 1927இல் தேசிய வாதிகள் இந்த கொடியவன் நீலனின் சிலை அங்கிருந்து அகற்றப்பட வேண்டுமென போராட்டத்தைத் துவக்கினர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தை மதுரை தேசபக்தர் நா.சோமையாஜுலு என்பார் தலைமை தாங்கினார். அவருடன் பங்குபெற்ற சில தேசபக்தர்கள் கடலூர் சுப்பராயலு, மதுரை சிதம்பர பாரதி, கடலூர் அஞ்சலை அம்மாள், லீலாவதி மற்றும் பலர்.

1927 ஆகஸ்ட் 11ஆம் தேதி தேசபக்தர்கள் ஊர்வலமாகச் சென்று ஒரு ஏணியை வைத்து அந்த சிலைமீது ஏறிக்கொண்டு கடலூர் சுப்பராயலு ஒரு சுத்தியல் கொண்டு சிலையை உடைக்கத் தொடங்கினார். சிலை வெண்கலத்தால் ஆனது என்பதால் உடையவில்லை; ஆனால் நீலனின் கையில் பிடித்திருந்த வாள் சிறிது சேதமடைந்தது. அப்போது அங்கு கூடிய கூட்டத்தினர் மத்தியில் அந்த நீலன் செய்த கொடுமைகளை விளக்கி தேசபக்தர்கள் பேசினார்கள். அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் தொண்டர்களைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போய்விட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது தியாகி சுப்பராயலு சொன்னார், நீலன் சிலை இந்திய மக்களுக்கோர் அவமானச் சின்னம். நான் மரண தண்டனை பெறுவதாயிருந்தாலும் இதை உடைத்தே தீருவேன் என்று முழங்கினார். நீதிபதி தொண்டர்களுக்குத் தலா ரூ.300 அபராதமும் 3 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதம் செலுத்த மறுத்து தொண்டர்கள் மேலும் 3 மாத சிறைதண்டனை பெற்றனர்.

இப்படித் தொடர்ந்து பல நாட்கள் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து சிலையை உடைக்க முயல்வதும், கைதாவதும், சிறை செல்வதுமாக இருந்தனர். இதில் நா.சோமையாஜுலு உட்பட பலருக்கு ஒரு வருஷம் சிறை தண்டனையும் ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ரூ.50 அபராதத்தைச் செலுத்த மறுத்ததால் இவர்களுக்கு மேலும் 15 மாத சிறை தண்டனை கிடைத்தது. இவர்கள் ஒரிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 13 வயதே ஆன காந்திமதிநாதன் எனும் சிறுவன் ஒரு கோடாலி கொண்டு சிலையை உடைக்க முயற்சித்துக் கைதாகி செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. சென்னை வந்த மகாத்மா காந்தி நீலன் சிலையை அகற்ற அஹிம்சை முறையில் போராட வேண்டுமென்றார். கடலூர் முருகப்பப் படையாச்சி, அவர் மனைவி அஞ்சலை அம்மாள், அவர்களது 11 வயது நிரம்பிய மகள் லீலாவதி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். லீலாவதி சென்னை சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது.

அப்போதைய சென்னை சட்டமன்றத்தில் நீலன் சிலையை அகற்றும் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டது. 98 உறுப்பினர்களில் 29 பேர் நீலன் சிலையை அகற்ற ஆதரவு தந்தும், ஜஸ்டிஸ் கட்சியினரும் 18 ஆங்கிலேய உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்து தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் காங்கிரசார் சிலையின் மீது களிமண் உருண்டைகளை வீசித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் ஒரு அரசாங்கம் அமைந்த பின்னர் நீலன் சிலையை அகற்றி எழும்பூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றார்கள். இப்படி அடக்கி ஆண்ட அந்நியர்களை மட்டுமல்ல, இந்தியர்களை மிருகத்தனமாகக் கொன்று குவித்த ராட்சசன் நீலன் சிலையைக் கூட இங்கு வைக்கக்கூடாது என்று போராடியவர்கள் நம்மவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம். ஜெய் ஹிந்த்!



இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்துவ பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற ஒரு அறவழிப் போராட்டம். சென்னை நகரில் மவுண்ட் சாலையில் (அண்ணா சாலை) அமைந்திருந்த கிறிஸ்துவ ஆங்கிலேய கர்னல். ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்ற 1927 இல் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
மெட்ராஸ் ஃபுசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப்பிரிவைச் சேர்ந்த கிறிஸ்துவ ஆங்கிலேய கர்னல் ஜேம்ஸ் நீல் 1857 சிப்பாய் கலகத்தை ஆயிரக்கணக்கான இந்தியர்களை படுகொலை செய்து அடக்கியதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர். லக்னௌ முற்றுகையின் போது கொல்லப்பட்ட நீலை இந்தியர்கள் வெறுத்தனர். அலகாபாத்தில் அவர் நிகழ்த்திய வன்செயல்களுக்காக அவரை “அலகாபாத்தின் கசாப்புக்காரன்” என்று அழைத்தனர். கிறிஸ்துவ பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு நீல் போற்றத்தக்க ஒரு படை வீரராக இருந்தார். எனவே சென்னையின் மவுண்ட் சாலையில் அவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டது. 1927 இல் இந்திய விடுதலை இயக்கம் சென்னை மாகாணத்தில் சூடு பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய தேசியவாதிகள் அச்சிலையினை அகற்ற முடிவு செய்தனர்.
சென்னை மகாஜன சபையும், இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவும் நீல் சிலையை அகற்ற வேண்டி தீர்மானங்கள் இயற்றின. பின் அதற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ். என். சோமையாஜுலு இதற்கு தலைமை வகித்தார். மாகாணம் முழுவதும் இருந்து வந்த போராட்டக்காரர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன. சோமையாஜுலு, டி. என். தீர்த்தகிரி முதலியார், மற்றும் சாமிநாத முதலியார் போன்ற முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபின்னர் செப்டம்பர் 1927 இல் காமராஜர் இப்போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். அச்சமயம் சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியும் போராட்டத்திற்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். சிலை அகற்றலுக்கு ஆதரவாக சென்னை சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் போராட்டம் விரைவில் வலுவிழந்து அடுத்து நிகழவிருந்த சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் கைவிடப்பட்டது. சிலை மவுண்ட் சாலையில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தது. பின் சில ஆண்டுகள் ரிப்பன் கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்டது.

இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டு 1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று சி. ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண முதல்வரானார். அவரது ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வரான ராஜகோபாலச்சாரி சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிட்டார். இன்று வரை நீலின் சிலை சென்னை அருங்காட்சியகத்தின் மானுடவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.



ஆயிரக்கணக்கில் இந்தியர்களைக் கொன்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஜேம்ஸ் நீல் என்பவனின் சிலையை அகற்றும் போராட்டத்தில் தலைமை ஏற்ற காமராசர்!


அஹிம்சையால் ஒருபோதும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிட்டவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை ஆண்டபோது, 1857ல் முதல் இந்திய சுதந்திரப்போர் நடைபெற்றது. அதை மிகக் கொடூரமாக ஒடுக்கி, ஆயிரக்கணக்கான இந்தியர்களை படுகொலை செய்தவன் நீல் என்ற பிரிட்டிஷ் ராணு அதிகாரி.
இவனின் முழுப்பெயர் ஜேம்ஸ் நீல் (James Neill). இவன் இந்தியர்களால் அலகாபாத் கசாப்புக்காரன் (Allahabad butcher) என்று தூற்றப்பட்டான். வாரணாசியில் போரிட்ட இந்தியப் படையினரையம் அவர்களுக்கு உதவிய அப்பாவிப் பொது மக்களையும் சுட்டுக் கொன்றும், உயிரோடு தீவைத்து எரித்தும் அழித்தவன் இந்த நீல்.
இவன் லக்னோ முற்றுகையின்போது இந்திய மன்னர்களின் படைகளால் கொல்லப் பட்டான். இது வரலாறு. என்றாலும் நம் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இல்லாத வரலாறு.
செத்துப்போன ராணுவ அதிகாரியான ஜேம்ஸ் நீலுக்கு பிரிட்டிஷ் அரசு சென்னையில் அன்றைய மவுண்டு ரோட்டில் (அண்ணா சாலையில்) ஸ்பென்சர் அருகே ஒரு சிலை வைத்தது.
இந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று 1927 செப்டம்பரில் இந்தியர்கள் போராடினர். காங்கிரஸ் இப்போராட்டத்தை நடத்தியது. ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக்கோரும் போராட்டத்திற்கு காமராசர் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தைப் பற்றி ஈ வெ ராராமசாமியார் என்ன சொன்னார் தெரியுமா? அப்போது குடிஅரசு இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் ஈ வே ராமசாமி நாயக்கர். 04.12.1927 குடிஅரசு இதழில் ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக் கோருவது பார்ப்பன சூழ்ச்சி என்று கண்டித்து தலையங்கம் எழுதினார் ஈ வே ராமசாமி நாயக்கர்.
இந்த ஆண்டின் (2022) குடிஅரசு தின விழாக் கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சில ஊர்திகளைத் தயாரித்து அனுப்பியது. அவ்வூர்தியில் ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக் கூடாது என்று கூறி, பிரிட்டிஷ் அரசுக்குத் தீவிர விசுவாசியாக இருந்த ஈ வே ராமசாமியின் சிலையும் இருந்ததால் அந்த ஊர்தியை நிராகரித்தது மத்திய அரசு.

Why was "butcher" James Neill's giant statue removed from Madras in 1937?

Butcher Brig.Gen.James Neill. British India.royalcollection.org
  Above image:  Photograph of statue of Brigadier General James Neill, in Mount Road Madras (now Chennai). He stands, full-length, pointing with his right arm and with left hand resting on hilt of sword. He wears military dress with cloak. At left a bullock cart and several Indian figures.   The British rulers under Lord Canning  then finally chose to honor Neill, "The Butcher of Allahabad" by erecting a statue of him on arterial Mount Road in (then) Madras in 1860. He killed Indians in thousands. 

Neill was killed in combat at Lucknow in September 1857.  The inscription on the pedestal of Neil’s statue read: “Universally acknowledged as the first who stemmed the torrent of rebellion in Bengal (vide: Madras Hand Book 1871)..........................
James Neill (1810-1857) was a Scottish Army officer Alam
y
James George Smith Neill (27 May 1810 – 25 September 1857) was a Scottish military officer of the East India Company.   Son of  Colonel Neill,  he served in the Army of the East India company with patriotic zeal during the1957 Indian rebellion.  James Neill misused his military powers  and overstepped on the limit in handling the rebellious people, consequently  he became infamous and was tagged as the Butcher of Allahabad. His  infamous  and indiscriminate killing of native Indians during the uprising caused widespread outrage and invited condemnation across the country.

Col. James Neill of the ‘Madras Fusiliers’, a European unit,  was summoned from Madras to command the army to deal with the Mutiny that was gaining upper hand in Lucknow. Without any remorse, he came down heavily on the rebels, using  “ruthless and horrible” methods to put down  the mutineers. What shocked the civilized  world was the ghostly and gruesome method followed by James Neill who had surpassed the most dreadful dictator in terms of brutality and his killing spree of innocent people. It was just spine-chilling and macabre. Neill did what other military officials would carefully avoid.  He ordered the  “entire villages to be burnt down and inhabitants hanged” as he marched towards Cawnpore (Kanpur) without any qualms about his murderous act. A large number of innocent Brahmins who had no connection with the rebellion, got his attention. He had his soldiers round up them just like a herd of cattle  in a ranch and  insulted their orthodoxy by forcing them to wash off the blood oozing from the dead British while  his soldiers kept on whipping  them up non-stop till they fell  dead like fire-arm victims. The horrible vengeance was not yet over. As a final act, he hanged them all en masse  He massacred thousands of rebels during the Sepoy Mutiny of 1857 and more or less the same mass killing was  reenacted  in Jallianwallah Bagh on 13 April 1919 under yet another mass murderer  Brig. Gen. Reginald Dyer.  Twenty two years later, tagged as the greatest Briton by the public, Sir Winston Churchill was indirectly responsible for killing roughly 4 million people in Bengal in the Great Bengal Famine in the early 1940s by artificially creating scarcity of food grains.  The British government, as of today, is yet to prove their magnanimity by tendering apology to the Indian public for all the atrocities they committed during their colonial days in India in the name of democracy.
Former US President Kennedy.iz Quotes

The  gigantic (10 feet in height), sculpted bronze   statue of James Neil that was on Mount Road, Madras until 1937, was taken away from the public eye and is now  coated with dust deposited over a long period of time  since 1952 in the Anthropology section of the Madras Museum. So, the present generation of Indian have no idea about this notorious British Army officer whose motto was  "Violence can be won by violence".
1857.The Relief of Lucknow, by Thomas Jones Barkern.wikipedia.org
When the late C. Rajagopalachari was the Head of  erstwhile Madras Presidency in 1937 ( The first-ever election to the newly-constituted Provincial Legislative Assemblies under the ‘Government of India Act, 1935’ , was held in 1937), by a resolution of the then Madras Corporation, Neill’s statue was kept for some years in the ‘Ripon Buildings complex’ in Park Town area of the city which houses the City Corporation. Then in 1952, it found a permanent home in the Madras Museum.  According to Mr. Kalathi, Educational Officer at the Madras Museum who angrily said, "He (Neil) killed one lakh (100000) Indians just for uttering the word ‘Independence’, and how can we forget that?” After innumerable protests and resolutions,  the city corporation removed the statue of Neill  from the public space in 1937. The earlier protests by the people,  as advised by Gandhiji on his visit to the city in Sept. 1927 were based on Satyagraha with no violence what so ever. 

World Beyond War
When the statue was taken to the museum in 1962, one man said  who wanted a statue of a Scottish man who committed massacres against Indians on our own soil. Anyway, Neill's statue is a grim reminder of Sepoy mutiny that was fought both  by  Hindus and Muslims united in their struggle against the colonial power and how, with callowness, some rude and brutish English officials treated the natives right on their own soil. 
http://www.deccanherald.com/content/99637/butcher-allahabad-lies-museum-attic.html

இங்கு ஒரு முக்கிய குறிப்பை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும். 25.12.1927 வரை ஈ வெ ராராமசாமி பெயர் நாயக்கர் என்ற சாதிப் பின்னொட்டுடன்தான் குடிஅரசு பத்திரிகையில் எழுதப் பட்டு வந்தது.

No comments:

Post a Comment

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...