Sunday, March 6, 2022

மதம் மாற கொடுமை எதிர்த்து மாணவி லாவண்யா தற்கொலை- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அறிக்கை

பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சையில் நேற்று விசாரணை நடத்தியது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பதிவு: பிப்ரவரி 01,  2022 01:47 AM தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

விடுதி காப்பாளர் கன்னியாஸ்திரி சகாயமேரி உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என வெளியான வீடியோ நாடெங்கிலும் பெரும் அதிர்வலைய ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியது.        

 

இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர், தஞ்சாவூரில் நேற்றும் சிபிஐ அதிகாரிகள் பல இடங்களில் விசாரணை நடத்தினர்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய 3பேர் குழு விசாரணை: இதையடுத்து ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் நேற்று தஞ்சையில் விசாரணையை தொடங்கினர்.                  அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஹேமா அகிலாண்டேஸ்வரி, ஜீவானந்தம், அஞ்சை, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் உதயபானு, அருள்மதிகண்ணன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திலகவதி, மாணவியை வீடியோ எடுத்த முத்துவேல், மைக்கேல்பட்டி கிராம மக்கள், முன்னாள் பள்ளி மாணவிகள், தற்போது அதே பள்ளியில் படித்து வரும் மாணவிகள், மாணவியின் தாய் வழி தாத்தா-பாட்டி மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி தங்களது கருத்துகளை ஆணையத்திடம் தெரிவித்தனர். 
காலை 8.30 மணிக்கு தொடங்கிய விசாரணை நண்பகல் 11.50 மணி வரை நடந்தது. ஆணையம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்கப்படும் கேள்விகளையும், பதில்களையும் கூடுதல் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா ஒருங்கிணைத்தார்.
பள்ளியிலும் விசாரணை: பின்னர் ஆணையத்தினர் மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளியின் அங்கீகார ஆவணங்கள், காப்பகத்தின் ஆவணங்களையும் சரிபார்த்தனர். பின்னர் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவிகள், காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மைக்கேல்பட்டியில் சுமார் 1.30 மணி நேரம் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர்.பின்னர் அரியலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு ஆணையத்தினர் சென்றனர்.

 

காப்பகத்தின் உரிமம் காலாவதியாகி விட்டது

அங்கு பேட்டியளித்த ஆணைய தலைவர், ‘தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி தங்கியிருந்த இல்லத்தின் உரிமம், கடந்த நவம்பர் மாதமே காலாவதியாகிவிட்டது’ என்று தெரிவித்தார். (FRAUD KALAIGNAR NEWS VIDEO STILL IN Youtube and Church employee like statement from DSP)

  

தேசிய குழந்தைகள் நல ஆணையம் தங்கள் விசாரணை அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பியது. அதில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது. 

   என்சிபிசிஆர் அறிக்கையில், தமிழக காவல்துறை, மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை புகாராக பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. 

மதமாற்ற முயற்சிதான் லாவண்யா தற்கொலைக்குக் காரணம் என்று குடும்பத்தார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ குழு திருச்சி வருகை! வார்டன் சகாய மேரியிடம் விசாரிக்க திட்டம் உயிரிழந்த மாணவியின் பள்ளிக் கட்டணத்தை முழுவதுமாக செலுத்தாத வரை, லாவண்யாவின் தாயார் தனது மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

என்சிபிஆர் தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க 3545 கோரிக்கை புகார்கள் வந்தன. 

சிறுமியின் மரணம் தொடர்பாக, நிலைமையின் தீவிரம் மற்றும் மாநில அதிகாரிகளின் மெத்தனமான நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, NCPCR தலைவர் பிரியங்க் கனூங்கோ, ஆலோசகர் (கல்வி) மதுலிகா ஷர்மா, காத்யாயணி ஆனந்த், ஆலோசகர் (சட்டம்) தலைமையிலான 3 அதிகாரிகள் குழு 2022 ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் தஞ்சாவூருக்கு சென்று முழுமையாக விசாரணை நடத்தினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12-ம் வகுப்பு மாணவியான லாவண்யா தற்கொலை செய்துகொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளிக்கு என்சிபிசிஆர் குழுவினர் சென்றபோது, ​​குழந்தைகள் தங்குவதற்கு தனி அறைகளோ, தங்கும் வசதிகளோ இல்லை என்பது தெரியவந்தது. 

மேலும், உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மரச்சாமான்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் குழந்தைகளின் உடமைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அகற்றப்பட்டதாகவும், சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம், உள்ளூர் காவல்துறையினரால், விசாரணை நோக்கத்திற்காக சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படவில்லை என்பதை குழு கவனித்துள்ளது. குற்றச் செயல் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, ​​போதுமான சட்ட நடைமுறைகள் இல்லாததால் சாட்சியங்கள் சிதைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளதாகவும் என்சிபிஆர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும் குறிப்பாக சகோதரர்களுக்கும் ஆலோசனைகளையும், நிவாரண தொகைகளையும் மற்றும் அரசு உதவிகளையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் இதுபோல சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் பெண் குழந்தைகள் தங்கும் விடுதிகளை பற்றிய தகவல் கணக்கெடுக்கப்பட்டு தெரிவிக்கப்பட வேண்டும்.

மாணவியின் மரணத்திற்குக் காரணமான மைக்கேல்பட்டியில் உள்ள சட்டத்துக்குப் புறம்பான தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் குழந்தைகள் உடனடியாக வேறு விடுதிக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.

லாவண்யாவின் தற்கொலை வழக்கைக் கையாள்வதில் காவல்துறை அலட்சியமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், விசாரணை அதிகாரி (IO) மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோருடனான உரையாடலின் போது, ​​விடுதி காப்பாளர் கன்னியாஸ்திரி சகாயமேரி  அதாவது முதன்மைக் குற்றவாளியாகப் பெயரிடப்பட்டவரை, குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கவும், சாட்சியங்களைக் கைப்பற்றவும் குற்றம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர், அழைத்துச் செல்லவில்லை, என்பதை அறிந்து கொண்டோம் என்று என்சிபிஆர் குழு தெரிவித்துள்ளது. 

"விசாரணை அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை விதிகளுக்கு பொருந்தவில்லை என்பது கவனிக்கப்பட்டது. விசாரணை அமைப்பு நியாயமான விசாரணையை நடத்துகிறதா இல்லையா என்ற சந்தேகத்தை இது உருவாக்குகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.             

சிறுமி பற்றிய முக்கிய விவரங்களை மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள், அதே நேரத்தில் சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற நிர்பந்திக்கப்பட்டதைப் பற்றி விசாரணை நடத்த குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளையும் புறக்கணித்துள்ளார்கள். 

நீதிச் சட்டம், 2015-ன் கீழ் செல்லுபடியாகும் வகையில் பதிவு செய்யாமல் பள்ளி விடுதி நடத்தப்பட்டுள்ளது. NCPCR வழங்கிய பரிந்துரைகள்: என்சிபிசிஆர் அறிக்கை தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

உரிய பதிவு இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை தங்கவைத்த போதிலும், Justice Juvenile சட்டம், 2015ன் படி நடவடிக்கை எடுக்கத் தவறிய மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

இறந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு தேவையான ஆலோசனை, இழப்பீடு மற்றும் உதவி வழங்குதல் வேண்டும்.

தமிழ்நாடு விடுதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் சிறார் நீதிச் சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் இதுபோன்ற எத்தனை நிறுவனங்கள் செயல் படுகின்றன என்பதை விசாரித்து, அவற்றின் பட்டியலை NCPCR க்கு வழங்க வேண்டும். உரிய நடைமுறையைப் பின்பற்றி மேற்படி இடத்தில் வசிக்கும் அனைத்து குழந்தைகளையும் உடனடியாக மாற்ற வேண்டும்.

சட்ட சரத்து 26-ன் கீழ் 5 விதிமீறல்கள், சட்ட சரத்து 37-ன் கீழ் 6 விதிமீறல்கள், சட்ட சரத்து எண் 34, 35-ன் கீழ் 4 விதிமீறல்கள், சட்ட சரத்து எண் 73, 77-ன் கீழ் 5 விதிமீறல்கள் என்று அந்த அறிக்கை கல்வி நிறுவனத்தின் மீதும், மாவட்ட நிர்வாகத்தின் மீதும், விசாரணை அதிகாரிகள் மீதும், பல விதிமீறல்களை வெளிப்படுத்தியுள்ளது. முடிவாக ஆணையம் தனது பரிந்துரைகளை பதிவு செய்துள்ளது.

டிஜிபிக்கு: உரிய விசாரணை மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொள்ளாத மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


 "மாணவி லாவண்யா தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் சாட்சிகள் பற்றிய போலீஸ் விசாரணை ஆகியவற்றில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு நியாயமானதாக இல்லை; தவிர, கட்டாய மதமாற்றம் இதற்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படவில்லை," என்றுதான் NCPCR அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, 
HIGH COURT AND SUPREME COURT MOVED THIS TO CBI -because DMK proved to be Church paid stooges against Tamil
  







No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா