Saturday, March 5, 2022

மாணவியோடு பழகி கடத்தி போதை ஊசி- வன்கொடுமை; மதுரை மேலூர் நாகூர் ஹனிபா லவ் ஜிஹாதா? ஐஎஸ்ஐஎஸ்சில் சேர்க்கவா?

ஒரு 17 வயது சிறுமியை போதை ஊசி போட்டு ஒரு வாரமாக கொடுமை செய்து பின்னர் தூக்கி வந்து அந்த பெண்ணின் தாய் வசிக்கும் வீட்டு முன்னர் வீசிவிட்டு போயிருக்கிறதுகளே
https://www.updatenews360.com/trending/melur-girl-sexually-abused-student-dies-without-treatment-8-people-trapped-in-the-background-shocking-incident-060322/
https://www.dinamaalai.com/news/Student-killed-after-being-subjected-to-sexual-harassment-A/cid6672034.htm


#Justice_for_Yogalakshmi அர்ஜுன்சம்பத் அறிக்கை! ஜி மேலூர் அருகே உள்ள தும்
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் துன்பப் பட்டியைச் சேர்ந்த யோகலட்சுமி என்ற பெண் குழந்தை வயது 17. அதேபோல பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற 29 வயது வாலிபர் இந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்றுள்ளார் .
இது பெற்றோருக்கு தெரிய வர 15. 2. 22 அன்று மேலூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர் அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை எந்த பணியும் செய்யவில்லை மேலும் அவர்கள் மாவட்ட கண்காணிப்பாளரை மீண்டும்
27. 2 .22 சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்படியிருக்க 3ஆம் தேதி காலையில் நாகூர் ஹனிபா தாயார் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிகாலையில் யோக லட்சுமியை ஒரு ஆட்டோவில் ஏற்றி வந்து அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் வீசிவிட் டு சென்றுள்ளனர்.
அப்போது அந்தப் பெண் குழந்தை சுயநலமில்லாமல் போதையில் இருப்பதுபோல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை அறிந்த பெண்ணின் தாயார் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது யோகலட்சுமி உடல்களில் போதை ஊசி போட்ட அடையாளங்களும் மேலும் உடம்புகளில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் இவரை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த பெண் எந்த ஒரு அசைவும் இன்றி பிணம்போல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுவரைக்கும் இத்தனை கொடும் செயலில் ஈடுபட்ட அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ அல்லது அந்த நாகூர் ஹனிபா என்ற நபரையோ கைது செய்யப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது..
தொடர்ந்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் ஜி காவல்துறையிடம் பேசியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் வேதனையான விஷயம் இந்த கொடிய செயல்களில் ஈடுபட்ட நாகூர் ஹனிபா மற்றும் அவர் குடும்பத்தை கைது செய்யும் வரை போராட்டம் தீவிரமடையும்....
பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு நாகூர் மற்றும் அவனின் தாயாரின் மீது போஸ்கோ சட்டம் போடப்பட்டுள்ளது மேலும் இக் குற்றச் செயலில் ஈடுபட்டநாகூர் ஹனிபா குடும்பத்தின் மீது வழக்குபதிவு வரையிலும் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றும் வரை தென்னிந்திய பார்வர்ட் பிளாக் போராட்டத்தை தொடரும்.....போராட்டத்திற்கு
இந்து மக்கள் கட்சி ஆதரவு கொடுக்கும்.
அனைத்து இந்து அமைப்புகளுடன்
" தியாச்சுடர் " ஆடிட்டர் ரமேஷ் மக்கள் இயக்கம், தமிழகம்.





தமிழகத்தில் தொடரும் ‘லவ் ஜிகாத்’: 17 வயது ஹிந்து சிறுமி கூட்டு பலாத்காரம்!

தமிழகத்தில் தொடரும் ‘லவ் ஜிகாத்’: 17 வயது ஹிந்து சிறுமி கூட்டு பலாத்காரம்!


தமிழகத்தில் லவ் ஜிகாத் தொடர்கதையாகி வருகிறது. காதலிப்பதாகக் கூறி 17 வயது ஹிந்து சிறுமியை கடத்திச் சென்று, போதை ஊசி செலுத்தி இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததால், அச்சிறுமி உயிரிழந்திருக்கும் சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் மகள் துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது சிறுமியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த மதீனா பேகம் மகன் நாகூர் ஹனிபா என்பவர் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். இதற்கு, துர்காவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியில் சென்ற துர்கா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் தேடியும் துர்கா கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த துர்காவின் தாய், மகளை காணவில்லை என்றும், அதே ஊரைச் சேர்ந்த மதீனா மற்றும் அவரது மகன் நாகூர் ஹனிபா ஆகியோர் கடத்திச் சென்று விட்டதாகவும் பிப்ரவரி 15-ம் தேதி காலையில் மேலூர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, பிப்ரவரி 22-ம் தேதி மதுரை எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார். இதன் பிறகே, மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதுவும், சிறுமி மிஸ்ஸிங் என்பதுபோல மட்டும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சூழலில், கடந்த 1-ம் தேதி நள்ளிரவு துர்காவின் வீட்டுக்கு வந்த நாகூர் ஹனிபாவின் தாய் மதீனா, துர்கா சீரியஸாக இருப்பதாகவும், வந்து அழைத்துச் செல்லும்படியும் அவரது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், துர்காவின் தாயார் பதறியடித்துக் கொண்டு புறப்படவே, அவரது வீட்டு வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றிருக்கிறது. அதிலிருந்து இறங்கிய சிலர், குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த துர்காவை, அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இதனால் பதட்டமடைந்த துர்காவின் தாய், ஒரு ஆட்டோவை பிடித்து துர்காவை ஏற்றிக்கொண்டு மேலூர் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். ஆனால், துர்காவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கவே, அவரை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட போலீஸார், நாகூர் ஹனிபா, ராஜா முகமது, சாகுல் ஹமீது, மதினா பேகம், ரம்ஜான் பேகம், மற்றொரு ராஜா முகமது மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரகாஷ், பெருமாள் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து துர்காவின் உறவினர்களிடம் பேசியபோது, “மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் லவ் ஜிகாத் என்கிற பெயரில் ஹிந்து சிறுமிகளை காதலிப்பதுபோல நடித்து, அவர்களை வசப்படுத்தி, போதைக்கு உட்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும், போலீஸாரோ, ஆட்சியாளர்களோ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சூழலில்தான் துர்காவுக்கும் லவ் ஜிகாத் என்கிற காதல் வலையை வீசி இருக்கிறார்கள். இதில் வீழ்ந்து விட்ட துர்காவை, கடந்த மாதம் 14-ம் தேதி கடத்திச் சென்று, போதை ஊசி செலுத்தி, 7, 8 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதனால், உடல் ரிதீயாக பாதிக்கப்பட்ட துர்காவை, குற்றுயிரும், குலையுயிருமாக கொண்டு வந்து, அவரது தாயார் வீட்டு முன்பு வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆகவே, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு, ஹிந்து சிறுமிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும்” என்றார்கள்.

இதனிடையே, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி துர்கா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. சிறுமிக்கு நீதி வேண்டி சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். துர்காவின் குடும்பத்துக்கு பக்கபலமாக வி.ஹெச்.பி., ஹிந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகளும் களத்தில் குதித்திருக்கின்றன.







No comments:

Post a Comment