Wednesday, March 2, 2022

தமிழ் புத்தாண்டு சித்திரை வரலாற்று ஆதாரங்கள்

சித்திரை மாதத் துவக்கமே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்பதற்கு முன்னோர்கள் எப்படி ஏற்படுத்தினார்கள் என்பது குறித்து தமிழக முதலமைச்சர்  விளக்கமளித்தார். 






பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு ஆகும்.  சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும்.

 சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது.

சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும்.உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால்,அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும்.  இதே போன்று, வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன.

.
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த தமிழ்”, என்னும் பழமையுடைய,இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியை பேசுபவர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.இதற்கான அடிப்படைக் காரணங்கள் பல உள்ளன.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது.

“சித்திரையே வா! நம் வாழ்வில்,நல் முத்திரை பதிக்க வா!”என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும்.

சோழர் கல்வெட்டுகளிலும்,கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அகத்தியர் பன்னிராயிரத்தில்,பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக” என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு மேஷ ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார் முனைவர் மா.ராசமாணிக்கனார்.

புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் கமலை ஞானப் பிரகாசர்.

நாமக்கல் திரு. வி. ராமலிங்கம் பிள்ளை அவர்களும், “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தால் 1912 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும்,சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடைக் காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில், வருணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...